விஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு

சமீபத்தில் திமுகவை ஆதரித்து கள்ளக்குறிச்சி வந்த தி(க)ரைக்கதை மன்னன் கே. பாக்கியராஜும், அங்கு போட்டியிடுகின்ற விஜய.டி. ராஜேந்தர் மற்றும் அவர் மகன் சிம்பு ஆகியோர் சந்தித்து கொண்டார்கள். அவர்கள் பேச்சின் முழு விவரம் இதோ..

கே.பா : ஹலோ டி.ஆர் சௌக்கியமா. உங்களை பார்த்தும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருது.. ஒரு காட்டிலே ஒரு கரடி..

டி.ஆர் : யோவ் நீ சொல்ற கதை குட்டி. அடிச்சா உடையும் உன் சோடா புட்டி.

கே.பா : சாரி என்ன தனியா நிக்கரிங்களே.. கூட்டணி தேறலையா?

டி.ஆர் : அம்மா,அய்யா ரெண்டு பேரையும் பார்த்தேன். நாற்பது தொகுதியில் எனக்கு செல்வாக்கு உண்டு. அதில் முப்பத்திஒன்பதாவது தரணும்னு சொன்னேன். தரல. இவன் சிங்கம். சிங்கிளா தான் நிப்பான்

கே.பா (மனதிற்குள்) : உனக்கு ஓட்டும் சிங்கிளா தான் விழும்.

கே.பா : ஆனா இந்த தடவ திமுகதான் ஜெய்க்கும். நாங்க கலர் டிவி தரோம். புழுத்த ச்சே பழுத்த அரிசி தரோம். இவ்ளோ எதற்கு. மதுரை பக்கம் இருக்கிற குடும்பங்களோட ஒரு மாசம் மொத்த செலவையும் நாங்க பாத்துகிறோம்.

டி.ஆர் : ஓசி தருவர் எல்லாம் வெற்றி அடையார். கள்ளக்குறிச்சியில் நான் பெரும் படை உடையார். காரணம், நான் விஜய.டி. ராஜேந்திர உடையார்.

(அப்போது சிம்பு அங்கு வந்தார்)

சிம்பு : ஹாய் டாடி. யாரு இவரு

கே.பா : ஐயோ. என்னை யாருன்னு தெரியலையா.

சிம்பு : எனக்கு அரசியலில் நாலு பேரைத்தான் தெரியும். கருணாநிதி தாத்தா. கனிமொழி ஆத்தா. சின்ன மாமா ஸ்டாலின், பெரிய மாமா அழகிரி, சின்ன அங்கிள் தயாநிதி,பெரிய அங்கிள் கலாநிதி.. தட்ஸ் ஆல்.

கே.பா : கண்ணா இப்படியெல்லாம் பேசினா திமுகவில் சீட் கிடைக்காது.

சிம்பு : ஓய நாட்?

கே.பா : உன் பெயர் சிலமபரசன்னு தமிழ்லே இருக்கு. அதை ஜெ.கே.சிம்பிஷ் ன்னு மாத்திக்கணும். இப்போ நீ நடிக்கறத விட இன்னும் கேவலமா நடிக்கணும். அதை நூறு பேர பாக்கவிட்டு, அவங்களுக்கு பிரியாணி போடணும்.

சிம்பு : சாரி அங்கிள். எனக்கு அரசியல் வேண்டம். நான் சின்ன பையன்.

கே.பா : நீ சின்ன பையனா. உன் சமாசாரம் எல்லாம் ஊரே பார்த்தாச்சு. நயந்தாரா உதட்டை எதோ சாம்பார்ல போட்ட முருங்கைக்காய் மாதிரி...

சிம்பு(கோவத்துடன்) : ஸ்டாப் இட். நானும், நயனும் எவ்ளோ புனிதமா, உன்னதமா வாழ்ந்தோம். எங்க அந்தரங்கத்தை பத்தி பேசறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. வேணும்னா நெட்ல ஸ்டில்ஸ் போட்டிருக்கேன். போய் பார்த்துகோங்க. எதோ அப்பா நல்லது செய்வாருன்னு இங்க பேசவந்தேன்,

கே.பா : இதுவரைக்கும் அப்படி என்ன நல்லது செஞ்சுஇருக்கார் உங்க அப்பா டி.ஆர்.

சிம்பு : மும்தாஜை நம்ம ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கார். இத விட பெருசா என்ன செய்யணும்.

கே.பா : நல்ல பாயிண்ட்டு. கலைஞர் எனக்கு சீட் தருவாருன்னு பார்த்தா, கடைசியிலே பேண்ட்டு போட்ட வெற்றிகொண்டான் மாதிரி ஆக்கிடாங்க. நானும் உங்க கட்சியில சேர்ந்துவிடுகிறேன்.

டி.ஆர் : மன்சூர் எனக்கு போர்வாள். நீங்க எனக்கு அருவாள்.

கே.பா : நான் ஒரு குட்டிகதை சொல்றேன். சிம்பு, அப்படி பாக்காதே. குட்டி அப்படினா பொண்ணு இல்லை. சின்ன கதைனு அர்த்தம்.ஒரு நாட்டுலே ஒரு ராஜா, அவனுக்கு ரெண்டு மகன்கள்...

சிம்பு : டாடி, இவர் அருவாள் இல்லை. அறுவை வாள். எஸ்கேப்

(அப்பாவும், மகனும் தலை தெறிக்க ஓடியவர்கள்தான், இன்னமும் தொகுதிபக்கம் திரும்பவில்லையாம், பிழைத்தனர் கள்ளக்குறிச்சி மக்கள்)

No comments:

Post a Comment