எதனை பரிசென தருவது?

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.

காதலும் கடைசியுமாக

பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

என்ன சொல்ல.. என்ன சொல்ல.!

மழலைத் தமிழ் பேசுகிற போது
தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.

நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.

உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.

உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.

உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.

மனசின் வழி..

இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.

கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.

கண்களை மூடுகையில்
இனம்காணமுடியா
சின்னதும் பெரியதுமாய்
மீன்குஞ்சுகள்
நீந்திப்பரவுகிறது.

குருவி ஒன்றின்
கீத ஒலி
ஸ்வரசச்ரமாய்
இறங்குகிறது உடலுள்.

உணர்வுகள் தோறும்
மெதுமெதுவாய்
பூக்கள் முகையவிழும் ஓசை

எரிவுடன்
விழிவழியே
திரள்கிறது கண்ணீர்.

போர்வையை
ஒருக்கழித்து எழும்புகையில்
வானத்தில் விடிவெள்ளி.

வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்

கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.

இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:

சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும், அந்த இடத்தில் கூட்டமாக சேர்ந்து, தங்கள் எதிரியை அழித்துவிடும் இயல்பு கொண்டது எறும்புகள்.இந்த டெக்னிக்கை பாதுகாப்புக்காக, கம்ப் யூட்டர் துறையிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான், டிஜிட்டல் எறும்புகள்.கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் ஏற்படும், அச்சுறுத்தல்களை சமாளிக்க, பல்வேறு வகையான டிஜிட்டல் எறும்புகள் உருவாக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, விஞ் ஞானி கிளென் பிங்க் கூறுகையில்,

"டிஜிட்டல் எறும்புகள், கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் நகர்ந்து செல்லும் போது, டிஜிட்டல் அடையாளங் களை விட்டு செல்லும். இந்த டிஜிட்டல் அடையாளங்கள் மூலம், எறும்புகள் ஒன்றன் பின், மற்றொன்று என பின்பற்றி செல்லும்."எறும்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அமைப்பு, வழக்கமான பாதுகாப்பு முறையை விட வேகமாக செயல்படும். இவை, புதிய தொற்றுக்களை கண்டறியும் வகையில் முறையான இடைவெளியில், அடிக்கடி மேம்படுத்தப்படும்."இது கம்ப்யூட்டரில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப் பட்டது' என்றார்.