அது மட்டுமே காதல்

அது மட்டுமே காதல்!

நம் பிரிவின்
கடைசி புள்ளியில்
ஆரம்பிக்கிறது
அடுத்த சந்திப்பிற்கான
ஆயுத்தம்!

கடைசிவரை
பேசவதற்காக எடுத்து வந்த
வார்த்தைகள் பேசப்படமலேயே
திரும்புகின்றன;
நம் சந்திப்புகளில்!

பூங்காவின் வாசலில்
உனக்காக பூ வாங்க
அரைமுழம் அதகமாய்
அளக்கிறாள் பூக்காரகிழவி!

மூச்சு முட்டும்
தொலைவில் நாம்
சந்தித்துக் கொள்ளும்பொழுது
நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்;
நான் மூர்ச்சையாகிறேன்!

மேல் விழுந்து தங்கும்
இலைகளை தட்டிவிடாதே!
நம் சந்திப்பிற்கு
அதனடியை தேர்ந்ததற்கு
நன்றி பகன்று
ஆசிர்வதிக்கிறது அம்மரம்!

அரசியல்

நாடறிந்த கொள்ளையின்
நவின பெயர் - அரசியல் !

வார்த்தைகளை வீசி
வாக்குகளை பெற்று
மக்களின் வரி பணத்தில்
வலம் சேர்க்கும் திருட்டு
கும்பலின் நிஜ முகம் -அரசியல் !

உடன் பிறப்பே !ரத்தத்தின் ரத்தமே !
கண்மணிகளே !என வெற்று
வார்த்தை ஜாலங்களால் ..
வானுயர மாளிகைகளும் ,
பல கோடி வணிக நிறுவனங்களையும்,
கட்டுக்குள் வைத்துக்கொண்டு
கண்ணீர் விடும் -குள்ள நரித்தனத்தின்
மறுபெயர் அரசியல் !

இன்று ஒரு பேச்சு !
நாளை ஒரு பேச்சு !
இவர்கள் குடித்தது தாய் பாலல்ல
மதுவென்றே சொல்லதோன்றும்
உண்மை குடி மகன்களின்
உறைவிடம் -அரசியல் !

நாட்டின் சாபமே
வரமென நாம் நினைக்கும்
விந்தையின் மறுபெயர்-அரசியல் !

காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி

நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்த‍வையா?
உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.
இரண்டுக்கும் ப‌ய‌ந்து
உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?

செல்பேசியில் என‌து பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!

தேர்தல் திருவிழா!

ஆயிரங்களை வைத்து
லட்சத்தைப் பிடிக்கலாம்.
லட்சத்தைப் போட்டால்
கோடியை எடுக்கலாம்.
கொள்ளையடிப்பதற்கு யாருடனும்
கூட்டுச் சேரலாம்..
லாபத்தை வைத்தே
தேர்தல் திருமணத்தில்
சம்பந்தியாகலாம்..
கொள்கையைப் பற்றியெல்லாம்
கனவு கூடக் காண்பதில்லை.
அந்த நேரத்திலும்
அகப்பட்டதை சுருட்டும்
திட்டங்களுக்குத் தான் முதலிடம்.

தொகுதியில் ஒன்று
தொக்கி நின்றாலும்,
கொள்கை மாறிப் பின்
கோஷங்களும் மாறிவிடும்.

கல்வியறிவு, நாளுக்கு நாள்
அதிமானாலும்
ஏமாறுவதும்
அதற்கேற்றார் போல்
ஏற்றம் கண்டுவிடுகிறது.

எதை மறந்தாலும்
ஐந்து வருடத்திற்கொரு முறை
ஏமாறுவதற்கு,,
மக்கள் மறக்காமலிருக்கும் வரை
ஆயுதங்கள் தான் ஆட்சி செய்யும்.
அராஜகங்கள் தான் சட்டமாகும்.
சொந்தங்களிடம் தான்
சொத்துக்கள் குவியும்.
சோதனை என்பது
பொதுவில் மக்களிடம் மட்டும் சேரும்

இருப்பது ஒன்று ...

ஊழல் வாதிகளை ஊதித் தள்ளப் போகிறோம் என
சந்து முனையில் சிந்து பாடும் விஜய காந்து !

இந்த பழங்கள் புளிக்குமென திராவிட திராட்சையை
வீச மாட்டார்களா - ஏங்கும் பாஜக !

வீரம் என்னும் பெயரில் சர்வாதிகாரம் செய்யும்
வரட்டு பிடிவாதம் கொண்ட அதிமுக !

இன்னொரு வாய்பு வேண்டி, வயதான காலத்தில்
சலுகை விலைபேசும் திமுக !

இவர்கள் எவருக்கு என் ஓட்டு ?
இருப்பது ஒன்று கொடுப்பது யாருக்கு ?
என எண்ணியபடி
வாக்கு சாவடிக்குச் சென்ற என்னிடம்
தேர்தல் அதிகாரி சொன்னார்,
சார்! உங்கள் ஓட்டு போட்டாகி விட்டதென !

விஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு

சமீபத்தில் திமுகவை ஆதரித்து கள்ளக்குறிச்சி வந்த தி(க)ரைக்கதை மன்னன் கே. பாக்கியராஜும், அங்கு போட்டியிடுகின்ற விஜய.டி. ராஜேந்தர் மற்றும் அவர் மகன் சிம்பு ஆகியோர் சந்தித்து கொண்டார்கள். அவர்கள் பேச்சின் முழு விவரம் இதோ..

கே.பா : ஹலோ டி.ஆர் சௌக்கியமா. உங்களை பார்த்தும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருது.. ஒரு காட்டிலே ஒரு கரடி..

டி.ஆர் : யோவ் நீ சொல்ற கதை குட்டி. அடிச்சா உடையும் உன் சோடா புட்டி.

கே.பா : சாரி என்ன தனியா நிக்கரிங்களே.. கூட்டணி தேறலையா?

டி.ஆர் : அம்மா,அய்யா ரெண்டு பேரையும் பார்த்தேன். நாற்பது தொகுதியில் எனக்கு செல்வாக்கு உண்டு. அதில் முப்பத்திஒன்பதாவது தரணும்னு சொன்னேன். தரல. இவன் சிங்கம். சிங்கிளா தான் நிப்பான்

கே.பா (மனதிற்குள்) : உனக்கு ஓட்டும் சிங்கிளா தான் விழும்.

கே.பா : ஆனா இந்த தடவ திமுகதான் ஜெய்க்கும். நாங்க கலர் டிவி தரோம். புழுத்த ச்சே பழுத்த அரிசி தரோம். இவ்ளோ எதற்கு. மதுரை பக்கம் இருக்கிற குடும்பங்களோட ஒரு மாசம் மொத்த செலவையும் நாங்க பாத்துகிறோம்.

டி.ஆர் : ஓசி தருவர் எல்லாம் வெற்றி அடையார். கள்ளக்குறிச்சியில் நான் பெரும் படை உடையார். காரணம், நான் விஜய.டி. ராஜேந்திர உடையார்.

(அப்போது சிம்பு அங்கு வந்தார்)

சிம்பு : ஹாய் டாடி. யாரு இவரு

கே.பா : ஐயோ. என்னை யாருன்னு தெரியலையா.

சிம்பு : எனக்கு அரசியலில் நாலு பேரைத்தான் தெரியும். கருணாநிதி தாத்தா. கனிமொழி ஆத்தா. சின்ன மாமா ஸ்டாலின், பெரிய மாமா அழகிரி, சின்ன அங்கிள் தயாநிதி,பெரிய அங்கிள் கலாநிதி.. தட்ஸ் ஆல்.

கே.பா : கண்ணா இப்படியெல்லாம் பேசினா திமுகவில் சீட் கிடைக்காது.

சிம்பு : ஓய நாட்?

கே.பா : உன் பெயர் சிலமபரசன்னு தமிழ்லே இருக்கு. அதை ஜெ.கே.சிம்பிஷ் ன்னு மாத்திக்கணும். இப்போ நீ நடிக்கறத விட இன்னும் கேவலமா நடிக்கணும். அதை நூறு பேர பாக்கவிட்டு, அவங்களுக்கு பிரியாணி போடணும்.

சிம்பு : சாரி அங்கிள். எனக்கு அரசியல் வேண்டம். நான் சின்ன பையன்.

கே.பா : நீ சின்ன பையனா. உன் சமாசாரம் எல்லாம் ஊரே பார்த்தாச்சு. நயந்தாரா உதட்டை எதோ சாம்பார்ல போட்ட முருங்கைக்காய் மாதிரி...

சிம்பு(கோவத்துடன்) : ஸ்டாப் இட். நானும், நயனும் எவ்ளோ புனிதமா, உன்னதமா வாழ்ந்தோம். எங்க அந்தரங்கத்தை பத்தி பேசறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. வேணும்னா நெட்ல ஸ்டில்ஸ் போட்டிருக்கேன். போய் பார்த்துகோங்க. எதோ அப்பா நல்லது செய்வாருன்னு இங்க பேசவந்தேன்,

கே.பா : இதுவரைக்கும் அப்படி என்ன நல்லது செஞ்சுஇருக்கார் உங்க அப்பா டி.ஆர்.

சிம்பு : மும்தாஜை நம்ம ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கார். இத விட பெருசா என்ன செய்யணும்.

கே.பா : நல்ல பாயிண்ட்டு. கலைஞர் எனக்கு சீட் தருவாருன்னு பார்த்தா, கடைசியிலே பேண்ட்டு போட்ட வெற்றிகொண்டான் மாதிரி ஆக்கிடாங்க. நானும் உங்க கட்சியில சேர்ந்துவிடுகிறேன்.

டி.ஆர் : மன்சூர் எனக்கு போர்வாள். நீங்க எனக்கு அருவாள்.

கே.பா : நான் ஒரு குட்டிகதை சொல்றேன். சிம்பு, அப்படி பாக்காதே. குட்டி அப்படினா பொண்ணு இல்லை. சின்ன கதைனு அர்த்தம்.ஒரு நாட்டுலே ஒரு ராஜா, அவனுக்கு ரெண்டு மகன்கள்...

சிம்பு : டாடி, இவர் அருவாள் இல்லை. அறுவை வாள். எஸ்கேப்

(அப்பாவும், மகனும் தலை தெறிக்க ஓடியவர்கள்தான், இன்னமும் தொகுதிபக்கம் திரும்பவில்லையாம், பிழைத்தனர் கள்ளக்குறிச்சி மக்கள்)

பி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி

பி.வாசு கன்னடத்தில் பொல்லாதவனை எடுக்க போகிறாராம்.

எப்படி வரும்?

1) கன்னட படங்கறதால கொஞ்சம் பட்ஜெட் பார்த்து தான் எடுப்பாரு. அதனால பல்ஸருக்கு பதிலா, பிளாட்டினா.

2) கமர்ஷியலுக்காக ஒரிஜினல்ல இருக்குற தேவையில்லாத சீனை பெரிதாக்குவார். தேவையான சீனை சுருக்கிவிடுவார். அதன்படி, இந்த படத்தில் முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ணுவார்கள், நண்பர்கள் காமெடி பண்ணுவார்கள். கிளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஹீரோ பைக்க தொலைப்பார்.

3) தொலைந்த பைக்கை ஹீரோ பெங்களூர் ஹார்பரில்(!) போயி தேடுவார்.

4) வில்லனை சுத்தி இருக்குற ரவுடிகளுக்கு வெள்ளை சட்டையும் மடிச்சு கட்டின வேட்டியும் தான் யூனிப்பார்ம்.

5) தனுஷ் அப்பா ஆஸ்பிட்டலில் இருக்கும் போது, “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற அப்பா செண்டிமெண்ட் பாடல் நிச்சயம்.

6) கிஷோர் இறந்தபின் அஞ்சு அழும் காட்சியை, குங்குமம், வளையல், வெள்ளை புடவை என்று இன்னும் மெருக்கேற்றுவார்.

7) பத்து வருஷம் முன்னாடி எடுத்திருந்தாங்கன்னா, செட்டு போட்டு இரண்டு பாட்டும், ஊட்டில ரெண்டு பாட்டு எடுத்திருக்கலாம். அவரோட, தற்போதைய ரேஞ்ச் படி ரெண்டு பாட்டு பாரின்ல தான்.

8) "எங்கேயும், எப்போதும்" ரீ-மிக்ஸ்க்கு பதிலாக ஒரு பழைய ராஜ்குமார் பாடலை ரீ-மிக்ஸ் பண்ணுவார்கள். படம் - வெள்ளி விழாதான். மெஜஸ்டிக் பக்கமிருக்குற ஒரு தியேட்டருல.

இந்த படம் மட்டும் கன்னடத்தில வெற்றியடைஞ்சுதுன்னா, அப்புறம் அதே டீம வச்சி அதே மாதிரி ஒரு படம் எடுப்பாரு. அப்படி இல்லாட்டி, அவர் பையனை அங்க இறக்கி விடுவாரு. அது கண்டிப்பா ஊத்திக்கும்.

இவ்ளோ சொன்னாலும், பி.வாசு படங்களில் இருந்த ஒரு நல்ல விஷயம், அவர் நகைச்சுவை நடிகர்களை பயன்படுத்திய விதம். முக்கியமாக, கவுண்டமணி. இவர் படங்களில் கவுண்டமணி, ஒரு சுதந்திர பறவை. வாசு இயக்கத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் ரொம்ப பிரபலம்.

IPLலில் மொள்ளமாரித்தனம்

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா? நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். ஸ்ரீவி வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.