தேர்தல் திருவிழா!

ஆயிரங்களை வைத்து
லட்சத்தைப் பிடிக்கலாம்.
லட்சத்தைப் போட்டால்
கோடியை எடுக்கலாம்.
கொள்ளையடிப்பதற்கு யாருடனும்
கூட்டுச் சேரலாம்..
லாபத்தை வைத்தே
தேர்தல் திருமணத்தில்
சம்பந்தியாகலாம்..
கொள்கையைப் பற்றியெல்லாம்
கனவு கூடக் காண்பதில்லை.
அந்த நேரத்திலும்
அகப்பட்டதை சுருட்டும்
திட்டங்களுக்குத் தான் முதலிடம்.

தொகுதியில் ஒன்று
தொக்கி நின்றாலும்,
கொள்கை மாறிப் பின்
கோஷங்களும் மாறிவிடும்.

கல்வியறிவு, நாளுக்கு நாள்
அதிமானாலும்
ஏமாறுவதும்
அதற்கேற்றார் போல்
ஏற்றம் கண்டுவிடுகிறது.

எதை மறந்தாலும்
ஐந்து வருடத்திற்கொரு முறை
ஏமாறுவதற்கு,,
மக்கள் மறக்காமலிருக்கும் வரை
ஆயுதங்கள் தான் ஆட்சி செய்யும்.
அராஜகங்கள் தான் சட்டமாகும்.
சொந்தங்களிடம் தான்
சொத்துக்கள் குவியும்.
சோதனை என்பது
பொதுவில் மக்களிடம் மட்டும் சேரும்

No comments:

Post a Comment