கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:

புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???

2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:
கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட? மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்? (சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி? லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

கும்மாளம் பொறியியல் கல்லூரி

ஆரம்பம் “கும்மாளம் பொறியியல் கல்லூரி” சிறப்பம்சங்கள்

1. மாணவர்கள் தேர்வுகளில் பிட் அடிக்க அனுமதிக்கப்படுவார்கள்

2. பிட் அடித்து / காப்பி அடித்து / அடுத்தவர் லாக் இன் ஐடியை பயன்படுத்து பிடிபடும் மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது

3. மாணவர்களும், மாணவிகளும் கூடி கும்மாளம் அடிக்க வசதி செய்தி தரப்படும்

4. ஸ்பெஷல் க்ளாஸ் என்ற பெயரில் மாணவ மாணவியர் இரவு 11 மணிக்கு கூட ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வரலாம்

5. கல்லூரி பேரூந்தில் படியில் தொங்கிக்கொண்டு வர வேண்டும்

இப்படி ஒரு கல்லூரி இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை சேர்ப்பீர்களா அல்லது கீழே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கல்லூரியில் சேர்ப்பீர்களா

ஒரு கல்லூரியை பற்றி கூறப்படும் “குற்றச்சாட்டுகள்”

“சார் நாங்க மாணவர்களா, கைதிகளான்னு தெரியல. அந்த அளவுக்கு எங்கள இங்க அடக்கி வைக்கிறாங்க. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இங்க பேசிக்கக்கூடாது. சும்மா ஒரு ஹலோ சொன்னா கூட பெற்றோரை உடனே வரச்சொல்லி ஒரு வாரம் அலைய விடுவாங்க. காலேஜ் பஸ்ல படியில நிக்கக்கூடாது.மீறுனா ஒரு வாரத்திற்கு அந்த ஸ்டாப்புல பஸ் நிக்காது. அடுத்த ஸ்டாப்புக்கு போயிதான் ஏறனும்

பிட் அடிக்கிறது தப்புத்தான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அப்படி செஞ்சா, இண்டர்னல் மார்க் இருபதையும் கட் பண்ணிடுவாங்க. அப்புற்ம் இங்க மாடல் எக்சாம் எழுத முடியாது. நேரடியாக யுனிவர்சிடி எக்சாமைத்தான் எழுதனும். தினம் தினம் செத்து பிழைக்கிறோம் சார்”

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”
“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”
“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”
“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு
வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”
“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”
“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."

கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன


வருகிற ஆகஸ்ட் வந்தால் கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆம்... பல ஏற்ற இறங்கங்களைக் கண்ட தனது நடிப்பு வாழ்க்கையின் பொன்விழா ஆண்டில் இருக்கிறார் கமல் இப்போது.

5 வயது சிறுவனாக "களத்தூர் கண்ணம்மா” மூலம் தமிழில் அறிமுகமானவர் கமல். அதன் பிறகு சிறுவனாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைய, உதவி இயக்குநர், நடன உதவியாளர், ஸ்டன்ட் உதவியாளர் என பல வேலைகளை தனது 20 வயதுக்குள் பார்த்துவிட்டார் கமல். நிறைய நிறைய கற்றுக் கொண்டார்.

அதன் பிறகுதான் பாலச்சந்தரின் பொறுப்பில் வந்தார். துக்கடா வேடங்கள், வில்லன், எதிர்மறை நாயகன் என பல வேடங்கள் போட்டவர், அபூர்வ ராகங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் திரையுலக வரலாற்றுப் பக்கங்களில் நிச்சயம் மறைக்க முடியாத சாதனைகள்தான்.

இப்போது திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறார் கமல்.

இந்த பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புத் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருப்பதுதான் அவரது 'உன்னைப்போல் ஒருவன்'.

கலங்காதே காதலனே

அன்பின் அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும் தித்திக்க செய்தாய்

இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை இனிதாக்கினாய்
உறங்கும் எனை எழுப்பினாய்
உள்ளத்தின் உணர்வை உளறினாய்

செல்லமாய் செல்லம் என்றாய்
சென்று வருவேன் காத்திரு என்றாய்
பிரிவின் துயரை புரியவைத்தாய்
பிரிந்தே சேர்வோம் என்றாய்

கண்ணீரே வேண்டாம்
கலங்காதே என்றாய்
கண்ணீரை நீ சுமந்து
கண்களால் விடை பெற்றாய்

தொலைவில் இருந்தும்
தொலைபேசியில் அழைக்கிறாய்
தொலைந்த இதயத்தை
தொட்டுச் செல்கிறாய்

தொடர்கிறது நம் காதல்
காலங்கள் சென்றாலும்
காத்திருப்பேன் காதலனே
கலங்காதே…………….!

எல்லாமே நீதான்...

எந்தன் வாழ்வின் இன்பங்கள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்கள் நீயே
இரண்டையும் எனக்கு தந்தவள் நீயே
உன்னோடு நானும் வாழ்கையில் தானே
எந்தன் வாழ்வின் இன்பத்தை கண்டேன்
நீ என்னை பிரிந்ததன் பின்னே
எந்தன் வாழ்வில் துன்பத்தை உணர்ந்தேன்

எந்தன் வாழ்வின் இன்பங்களெல்லாம்
எனக்கு சொல்லி தந்தவள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்களெல்லாம்
எனக்கு உணர்த்தி சென்றதும் நீயே

பட்டாம் பூச்சி இறக்கையில் என்னை
வானில் பறக்க செய்தவள் நீயே
எந்தன் இறக்கையை பறித்துக்கொண்டு
வானில் பறக்க சொன்னதும் நீயே

உந்தன் செல்ல பேச்சை கேட்க
மணிக்கொருமுறை போண் எடுத்ததும் நானே
உந்தன் குரலே வேண்டாம் என்று எந்தன் போணை
உடைத்தவனும் நானே.....

உன்னை பார்த்த எந்தன் உணர்வை
கம்பன் கூட எழுத மாட்டான்
உன்னை பிரிந்த எந்தன் இதயத்தை படிக்க இங்கு
கவிஞன் எவனும் பிறக்கவும் இல்லை.

காத்திருக்கிறேன்

வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
என்னை நீதான்
அடையாளப்படுத்தினாய்

உன் மௌனத்தின்
வேர்களில் பூத்திருக்கிறது
என் காதல் பூ

பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..

இப்படியான என்
கனவுகளின் தொடர்ச்சியில்
அலைகள் மறந்த
கடலுக்குள் நாம்...
என நீட்சித்தது

என்னைத் தோற்கடிப்பதாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில் தானடி
நினைக்கிறேன் தோற்காத
நம்முடைய காதலை...........!

மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..

அன்றைய மழை
இன்றுவரை விடாமல்........
காத்திருக்கிறேன்
குடை தருவாயென!

வங்கியில் கொள்ளையன்- நகைச்சுவை

ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.

பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

தம்பதிகளின் விருப்பம்-நகைச்சுவை

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்

காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது!

காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது!

காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!

அது எ‌ப்படிடா ம‌ச்சா‌‌ன்?

நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!

எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.

இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள்
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில்

இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை

தனிமையிலேனும்
உண்டாகிறது
எனக்கான என் இருத்தல்

காதல் இனிமை


நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?

காதல் நோய் தொற்றிக் கொண்டதா?


இது காதல்தானா? நாம் காதல் வயப்பட்டுள்ளோமா? காதலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

எப்படியும் நம் காதல் உணர்வை முதலில் நண்பர்களிடம் கூறியிருப்போம். ஆனால் ஒரு சில நண்பர்கள் நம்மைக் குழப்பி குட்டையில் தள்ளியிருப்பார்கள். ஏன் என்று கெட்டால் குட்டையைக் குழம்பினால்தான் மீன் பிடிக்க முடியும் என்று காரணம் வேறு கூறுவார்கள்.

இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று நினைப்பவரா நீங்கள்?

முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது உங்களது கேள்வி?

ஒருவரைப் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அவரது பேச்சும், பழக்கமும் சந்தோஷம் தருகின்றன என்றாலும் இப்போதே இதனை காதல் என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு அறிகுறிகள் இருக்கும். அவற்றை இங்கே பரிசோதித்துக் கொள்ளுங்கள்

சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டுதல்

படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது

நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைவது

கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பது

சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டாமை

விரும்புபவரை பார்க்க நேர்ந்தல் இதயம் அதிகப்படியாக துடிப்பது

உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுப்பது

தனிமையை அதிகம் விரும்புவது

யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது

இசையை மிகவும் ரசிப்பது, நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது

நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் வருவது

நாம் விரும்புபவரின் நட்பு வட்டாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது

காதல் திரைப்படங்கள் மற்றும் காதல் இசைப் பாடல்களை மீது அதிக விருப்பம்

எதையும் ரசிக்கும் தன்மை அதிகரிக்கும்.

நீங்கள் விரும்பி வாங்கிய புத்தகத்தைக் கூட படிக்க முடியாமல் ஒரு திணறல் ஏற்படுவது

பொது விழாவில் கலந்து கொள்வது, அதிகமாக வெளியே செல்ல விரும்புவது

இந்த அறிகுறிகளில் பாதியாவது தற்போதுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அது காதல்தான்.

காதல் மனதுக்குள் பூத்துவிட்டால் ஏதோவொரு சந்தோஷம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்.

ஆனால் காதலைப் பற்றிய ஒரு பழமொழியை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.

காதல் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷமாக இருக்க விடாது.

சரி அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.

பாரிய 478 காரட் வைரம் கண்டுபிடிப்பு


ஆபிரிக்க நாடான லெஸோதாவில் பாரிய புதிய ரக வைரக்கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டை தீட்டப்படும் பட்சத்தில் மிகப் பெரிய பட்டை தீட்டப்பட்ட வைரமாக இது விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த 478 காரட் வைரமானது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அடர்த்தியான வைரங்களின் வரிசையில் 20ஆவது மிகப்பெரிய வைரமாக இது விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

லெட்ஸெங் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரத்தை பல மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்படுகிறது. பிரித்தானிய அரச ஆபரணங்களில் அங்கம் வகிக்கும் வட்ட வடிவமான 105 காரட் வைரத்தை விட இந்த வைரம் பெரியதாகும்.

இதுவரை இந்த வைரத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

4500 அடி உயரத்திலிருந்து மயங்கிய நிலையில் விழுந்து உயிர் பிழைத்த நபர்


தரையிலிருந்து 4500 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்த வேளை அவ்விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டு சுயநினைவிழந்த வான் சாகச நிபுணர் ஒருவர், இலேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜமி ரொபேர்ட்ஸன் என்ற இந்த 57 வயது வான சாகச நிபுணர் மயங்கிய நிலையில் நிலத்தை அண்மித்த வேளை, அவரது பாரசூட் அபூர்வமான முறையில் தானாகவே விரிந்தமை காரணமாகவே அவர் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சுய நினைவுக்கு திரும்பிய ஜமி ரொபேர்ட்ஸனுக்கு, தான் உயிருடன் இருப்பøதப் பார்த்து பெரும் வியப்பு. விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டு வீசப்பட்ட சமயம் தன்னுடைய கதை அத்துடன் முடிந்தது என்ற உணர்வே தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

சர்க்கரை மூலம் காரையும் இயக்கலாம்

காபியில் போடும் சர்க்கரை மூலம் காரை ஓட்டலாம்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். காரை இயக்க தேவைப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, சர்க்கரையில் இருந்து உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். அமெரிக்காவில், வெர்ஜினியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பெர்சிவால் ஜாங் தலைமையிலான குழுவினர், இந்த ஆய்வில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இது குறித்து ஜாங் கூறியதாவது: ஆய்வு கூடத்தில், 13 வகையான என்சைம்கள் (புளிக்க செய்யும் பொருள்), தண்ணீர் மற்றும் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, 86 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் சூடேற்றிய போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடிந்தது.

ஹைட்ரஜனை கொண்டு கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியும். ஆனால், குறைந்த செலவில், ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது எப்படி?, சேமித்து வைப்பது எப்படி?, வினியோகம் செய்வது எப்படி போன்ற கேள்விகளுக்கு தான் இதுநாள் வரை பதில் கிடைக்கவில்லை. தற்போது குறைந்த செலவில், சர்க்கரையை கொண்டு, ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புரட்சிகரமான கண்டுபிடிப்பு.

ஆனால், ஆய்வு கூடத்தில், குறைந்த அளவு ஹைட்ரஜனை தான் உற்பத்தி செய்ய முடிந்தது. வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் வகையில், அதிக அளவில் உற்பத்தி செய்யும் வழிவகை இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. அதே போல, ஹைட்ரஜனை கொண்டு இயக்கப்படும் வாகனம் எந்த அளவுக்கு வேகத்தில் செல்லும் என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சர்க்கரையால் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருளை கொண்டு, காரை இயக்குவது பாதுகாப்பானது; சுற்று சூழலுக்கு அதிக கேடும் ஏற்படுத்தாது . பெட்ரோல் மற்றும் டீசலை விட, ஹைட்ரஜன் விலை குறைவாகவே இருக்கும். இவ்வாறு விஞ்ஞானி ஜாங் கூறினார்.

நட்பு மொழிகள்

ந‌ட்‌பி‌ல் இரு‌ந்துதா‌ன் காத‌ல் ‌பிற‌க்‌கிறது. ‌சில காத‌ல்களை‌த் த‌விர.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை ‌விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க் கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

ந‌‌ண்பனு‌க்காக உ‌யிரை‌க் கொடு‌ப்பதை ‌விட, உ‌யிரை‌க் கொடு‌க்கு‌ம் அள‌வி‌ற்கு ந‌ண்ப‌ன் ‌கிடை‌ப்பதுதா‌ன் அ‌ரிது.

நா‌ன் உ‌ன் மு‌ன்னா‌ல் நட‌‌‌ந்து வ‌ழிகா‌ட்டியாக இரு‌க்க மா‌ட்டே‌ன், உ‌ன் ‌பி‌ன்னா‌ல் வ‌ந்து உ‌ன்னை‌க் க‌ண்கா‌ணி‌க்க மா‌ட்டே‌ன். உ‌ன் ப‌க்க‌த்‌தி‌ல் நட‌க்‌கிறே‌ன் ந‌ண்பா உ‌ன் துணையாக.

ந‌ண்ப‌ர்க‌ள் காதல‌ர்களாகலா‌ம். ஆனா‌ல் காதல‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்களாக‌க் கூடாது.

உ‌ன் ந‌ண்ப‌ர்களை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி வை. ‌உ‌‌ங்க‌ள் ந‌ட்பு ஒரு வளைய‌ம் ஆகு‌ம்.

பூமிக்கு ஆபத்தா? வானத்தில் தோன்றிய 40 அதிசய ஒளி


வானில் அவ்வப்போது இயற்கைக்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 11 நாட்களுக்கு முன்பு வானில் 40 வகையான புதிய வெளிச்சம் தோன்றியுள்ளது. இதை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.

இந்த வெளிச்சம் (ஒளி) மிகப்பெரிய சக்தி உடையதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய ஒளி தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஜெர்மனி முனிஞ்ச்-ல் உள்ள இ.எஸ்.ஓ. என்ற வான ஆராய்ச்சி அமைப்பு இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.

இந்த 40 வகையான ஒளியும் பூமியில் விழுந்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உலகமும் அழிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.

11 நாட்களாக இந்த ஒளி அவ்வப்போது தோன்றி மறைகிறதாம். இதன்மூலம் பூமியில் பெரிய விளைவுகள் ஏற்படுமோ என்ற புதிய அச்சம் உருவாகி உள்ளது.

செல்போனில் நடந்த நூதன திருமணம்

நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க்காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விப் பட்டிருக்கலாம்.

தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:

அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருமணநாளில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்த தால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால் திருமணத்தை வேறு தேதியில் நடத்தலாமா என்று மணமகளின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதர் சோம்நாத் ஐடியா ஒன்றை கொடுத்தார். செல்போன் மூலம் திருமணம் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து 3 செல்போன்கள் மூலம் இந்த திருமணம் நடந்தது. ஒரு செல்போனில் புரோகிதர் மந்திரம் சொல்ல இன்னொரு செல்போனில் மணமகளும் அசாமில் இருக்கும் மணமகன் மற்றொரு செல்போனில் திருப்பிச் சொல்ல திருமணம் நடந்தது.

40 நிமிடங்கள் புரோகிதர் முன்னிலையில் இந்த செல்போன் நூதன திருமணம் நடந்து முடிந்தது. மறுநாளே மணமகள் தேவஸ்ரீí அசாம் புறப்பட்டு சென்றார்.

அந்தோனி – யார்?

அன்னம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சி.விஜயகுமார் தயா‌ரித்திருக்கும் படம் அந்தோனி - யார்? இயற்கை படத்துக்குப் பிறகு ஷாம் நடித்திருக்கும் கடல் சார்ந்த கதைக்களம் இந்தப் படம்.

மீனவ இளைஞனாக நடித்திருக்கிறார் ஷாம். அவரது காதலியாக மல்லிகா கபூர். இவர்களுடன் காமெடிக்கென்று சேர்க்கப்பட்டிருப்பவர் விவேக்.

படத்தின் ஆ‌க்சன் காட்சிகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சி அமைத்திருப்பவர் தளபதி தினேஷ். ஷாம் டூப் போடாமல் ஆ‌க்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

ஒரு காட்சியில் குவியலாக மீன்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து மீன்களை வாங்கி காட்சி முடிந்ததும் அப்பகுதியில் மக்களுக்கு இலவசமாக மீனை கொடுத்திருக்கிறார்கள்.

ஒருமுறை கடலில் படப்பிடிப்பு நடந்தபோது கட்டுமரத்திலிருந்து தவறி மல்லிகா கபூர் கடலில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக உடனே காப்பாற்றியதால் ஆபத்தில்லாமல் தப்பித்தார்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். தினா இசையமைத்துள்ளார். பழனிபாரதி, சினேகன், கிருதயா தலா ஒரு பாடல்கள் எழுதியுள்ளனர். யுகபாரதி மூன்று பாடல்கள் எழுதியுள்ளார்.

சி.டி.பாண்டி படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு சான்டோனியோ, எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.