நட்பின் ஈரம்

மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.

தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!

ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!

நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!

தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!

செல்லரிக்கும் காதல்

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.,

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த இரு படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் அ‌ரிதாக அமையும் வாய்ப்பு இது.

ஆஸ்கர் அளவுக்கு உயர்ந்தாலும் நேரம் ஒதுக்கி தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னத்தின் ராவண், ஷங்க‌ரின் எந்திரன், கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னையில் ஒரு மழைக்காலம் என்று நீள்கிறது ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் பட்டியல்.

ராவண் படத்தின் இந்தி மற்றும் தமிழ் பதிப்புகளில் விக்ரம் நடித்து வருவது தெ‌ரியும்;. இதனை அடுத்து மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

ஆதவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யின் ஐம்தாவது பட இயக்குனர்

விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குவது யார்? பல வாரங்களாக கேட்கப்பட்டு வந்த இந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்கிறார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருந்தது. அழகர்மலை படத்தின் இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமார் சொன்ன கதை விஜய்யின் ஐம்பதாவது படத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது.

தயா‌ரிப்பாளரும், கதையும் தயாராக இருந்தும் இயக்குனரை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பேரரசு முதல் கே.வி.ஆனந்த் வரை பல பெயர்கள் ப‌‌ரிசீலிக்கப்பட்டன. இறுதியாக இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமாருக்கே ஐம்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் அளித்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

உ‌ரிமைக்குரல் என்ற பெயர் படத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓ‌ரிரு நாளில் தயா‌ரிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

விஜய்யின் ரகசிய விசிட்

வசனத்தில், நடனத்தில், மேன‌ரிசத்தில்... அட, வைத்துக் கொண்டிருக்கும் புரட்சி தளபதி பட்டத்தில்கூட விஜய்யை அப்படியே ஃபாலோ செய்கிறார் விஷால். விஷால் படமா விஜய் படமா என பி‌ரித்தறிய முடியாத அளவுக்கு இந்த நகலெடுப்பு தீவிரமாகியிருக்கிறது.

விஜய்க்கு இந்த விவகாரம் தெ‌ரிந்தாலும், தோரணையில் இது கொஞ்சம் தூக்கலா இருக்கு என்று நலம் விரும்பிகள் சொன்ன தகவல் அவரையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

அப்படி என்னதான் தோரணையில் விஷால் செய்திருக்கிறார் என்பதை அறிய விஜய்க்கு ஆர்வம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மளமளவென நடந்தேறின.

இரவு காட்சிக்கு வடபழனி ஏவிஎம் திரையரங்கில் விஜய் படம் பார்க்க ஏற்பாடானது. தனது பிஆர்ஓ செல்வகுமாருடன் தோரணை படம் பார்க்க வந்தார் விஜய். அவருக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த விஜய் படம் முடிவதற்கு சற்றுமுன் அங்கிருந்து கிளம்பினார். படம் முடிந்த பிறகு கிளம்பினால் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்களே.

ச‌ரி, படம் விஜய்க்கு பிடித்திருந்ததா? அதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு தமிழ் இன்டஸ்ட்‌ரி என்ன ஆரோக்கியமாகவா இருக்கிறது? படம் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.

குடிக்கிற மாதிரி நடிக்க மாட்டேன்! ஸ்ரேயா

இரண்டே நாள் ஷ¨ட்டிங்தான். மாசம் முழுக்க உழைச்சாலும் கிடைக்காத பணம். போதாதா? பீடி விளம்பரத்துக்கு அழைத்தால் கூட போக தயாராக இருக்கிறார்கள் நடிகைகள். ஐஸ் விளம்பரத்திலிருந்து ஆடை விளம்பரம் வரை எது கிடைத்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சில முன்னணி நடிகர்கள்.

இந்த களேபரத்தில் கொள்கையாவது? கோட்பாடாவது? அப்படிதானே நினைக்க தோன்றுகிறது. கொஞ்சம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் மக்களே, ஸ்ரேயாவின் பார்வை வேறாக இருக்கிறது இந்த விளம்பரங்களை பொருத்தவரை.

இவர் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்தாராம். இதை பார்த்த குழந்தைகள், ஸ்ரேயா குடிக்கறதை நானும் குடிக்கிறேன் என்று அளவுக்கதிகமாக குளிர்பானம் குடிக்கிறார்களாம். ஒரு குழந்தையின் அம்மா இந்த விஷயத்தை ஸ்ரேயாவிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். அன்றிலிருந்து குளிர்பானத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஸ்ரேயா.

கொள்கையெல்லாம் நல்லாதான் இருக்கு. எதையாவது குடிச்சு இந்த உடம்பை தேற்றக் கூடாதா என்கிறார் திருவாளர் ரசிக சிகாமணி.

நிலாச்சோறு!!!

சீர்மையாய் செதுக்கப்பட்ட
மூக்குடைந்த சிற்பமாய்
மாடிவீட்டின் பின்புறகுடிசையில்
வாழும் ராணி நான்!

மாடிவீட்டார்களின் எச்சிலை
தேய்ப்பதும் வியர்வைகளை
துவைப்பதுமே என் தாயின் வேலை!

அவள் பெறும் துச்சபணத்திலும்
குடித்துவிட்டு அடிப்பதாகவே
விடியும் என் தந்தையின் காலை!

ஆயிரமாயிரம் துன்பங்கள் வந்தாலும்
அவர்களின் எச்சிலின் மிச்சங்களை
நிலாச்சோறாய் ஊட்டுவதை
என் தாய் நிறுத்தியதில்லை!

வழக்கத்திற்கு மாறான தாயின்
தாமதத்தின் பின்னால் நிலாச்சோறுக்காய்
ஓடி நிற்கையில்,

" இன்னைக்கு அமாவாசையடி"
தாயின் பதிலின் முடிவில்
மாடிவீட்டு உறவினர்களின்
மகிழ்வுந்து புறப்பட்டுபோனது!

-கவிஞர். ஜெ.தணிகை

காதல் சிரிப்பு

காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?
காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!
காதலன்: அப்புறம்...?
காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!

ஒபாமாவுக்கு ஆலோசனை சொல்லும் தலைவர்கள்

அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த படாத பாடுபடும் ஒபாமா வயதில் சின்னவர் என்பதாலும், இந்தியாவில் தான் அரசியலில் பழம் தின்னுகொட்டை போட்டவர்கள் நிறையே பேர் இருப்பதாலும் இந்திய தலைவர்களுக்கு போன் போடுகிறார். முதல் போன் மன்மோகனுக்கு டயல் செய்கிறார்.

ஒபாமா: ஹலோ மன்மோகன்! எப்படி இருக்கீங்க?
மன்மோகன்: நல்லா இருக்கேன்!
ஒபாமா: பை பாஸ் ஆபரேஷனில் இருந்து ரெக்கவரி ஆயாச்சா? உடம்பு பரவாயில்லையா இப்ப?
மன்மோகன்: பரவாயில்லை நல்லா இருக்கேன், நல்லவேளை அந்த சமயத்தில் பார்லிமெண்ட் கூட்டத்தொடர் முடிஞ்சுது அதான் சீக்கிரம் குணம் அடைந்துவிட்டேன்!
ஒபாமா: நல்லது, நான் எதுக்கு போன் செஞ்சேன் என்றால், அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஏதும் யோசனை கேட்கலாம் என்றுதான்!
மன்மோகன்: ஒன் மினிட்...ஒபாமா: ஹலோ ஹலோ!
மன்மோகன்: சொல்லுங்க ஒபாமா என்ன மேட்டர் வேண்டும்? (திடீர் என்று பெண் குரல்)ஒபாமா: என்னது திடீர் என்று மிமிக்கிரி எல்லாம் செஞ்சு லேடீஸ் வாய்சில் பேசுறீங்க! ஆப்ரேசன் ஹார்டிலா இல்லை த்ரோட்டிலா?
சோனியா: நான் சோனியா பேசுறேன், உடல் நலத்தை சொல்வது வரைக்கும்தான் அவருக்கு பர்மிஷன்,அதுக்கு மேல ஏதும் பேசணும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்கவேண்டும் திடீர் என்று நீங்கள் போன் செய்ததால் என்னிடம் போனை கொடுத்துவிட்டு போய்விட்டார்.
ஒபாமா: மனசுக்குள் (வெளங்கினமாதிரிதான்!) சரி சோனியாஜி அப்புறம் பேசுறேன்.

அடுத்த போன்! அத்வானி

ஒபாமா: ஹலோ அத்வானிஜி எப்படி இருக்கீங்க?
அத்வானி: மிக்க நலமாக இருக்கிறேன்!
ஒபாமா: ஜி அடுத்த பிரமராக வந்தால் எப்படி இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கப்போறீங்கன்னு சொன்னா கொஞ்சம் எனக்கும் உதவியா இருக்கும்!
அத்வானி: ஜீ நீங்க கையில் எப்பொழுதும் வைத்து இருக்கும் ஆஞ்சனேயர் இராமர் பக்தர், அதுபோல இராமர் பக்தரா ஆயி, அங்க இருக்கும் இரண்டு மசூதியை இடிச்சு அங்க இராமர் கோயில் கட்டி அங்க ஒரு உண்டி வெச்சாசெம கலெக்சன் கிடைக்கும் அப்புறம் என்னா பொருளாதாரம் பிச்சுக்கும்! சும்மா ஒரு ரத யாத்திரை ஆரம்பிப்போம் வாங்க!
ஒபாமா: அவ்வ்வ்வ்

அடுத்த போன் கலைஞர்

ஒபாமா: ஹலோ கலைஞர் எப்படி இருக்கீங்க? முதுகு தசைப்பிடிப்பு எல்லாம் சரி ஆகிட்டா?
கலைஞர்: சரி ஆகி என்ன பயன், ஈழத்தமிழர் நலன் காக்க என்னால் ஏதும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் தான் என் நெஞ்சை கிழிக்கிறது! தேர்தல் வேலைகள் வந்துவிட்டதால் அதை கொஞ்சம் ஒத்திவைத்து இருக்கிறோம்!
ஒபாமா: (ஆஹா இவரு ரூட்ட மாத்துறாரு) நீங்க அமெரிக்க பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்று சில யோசனை சொல்லணும்!
கலைஞர்: உங்களுக்கு இரண்டு பையனா ஒரு பையனா? இரு பையனாக இருந்தால் அமெரிக்காவை இரண்டாக பிரித்து ஒரு மகனை அதுக்கு அதிபர் ஆக்கிடுங்க, இன்னொரு பையனை இன்னொரு பகுதிக்கு அதிபர் ஆக்கிடுங்க. அங்க இருக்கும் கேபிள் டிவி, பத்திரிக்கை எல்லாத்தையும் குடும்பத்தில் ஒருவர் வீதம் ஆள் ஆளுக்கு ஒண்ணு ஒண்ணு பிரிச்சு கொடுத்துடுங்க! பேரப்பிள்ளைங்க இருந்தாஅவங்களை லியாண்டர் டி காப்ரியோவை வெச்சு willuன்னு ஒரு படம் எடுக்க சொல்லுங்க கேப்சன் kill everybodyனு கூட கொடுக்கலாம், இப்படி பல விசயம் இருக்கு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த!
ஒபாமா: அய்யா நான் கேட்டது நாட்டை முன்னேற்ற, நீங்க சொல்வது வீட்டை முன்னேற்ற!
கலைஞர்: ஏ.... அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும் வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா? தனி மனிதனின் முன்னேற்றத்தில் தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது. உன்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாகி அமெரிக்கரை காப்பேன் என்று அல்லவா இருக்கவேண்டும்!
ஒபாமா: தமிழ் வாழ்க, தலைவர் வாழ்க! (அப்பீட்)

அடுத்த போன் ஜெயலலிதா!

ஒபாமா: ஹலோ Ms.ஜெயலலிதா வணக்கம்!எப்படி இருக்கீங்க?
ஜெயலலிதா: ம்ம்!
ஒபாமா:ஹலோ Ms.ஜெயலலிதா நான் ஒபாமா பேசுறேன்!
ஜெயலலிதா: ம்ம்ம்ம்!
ஓபாமா: (காதில் விழவில்லை என்று நினைத்து) மேடம் நான் ஒபாமா, ஒபாமா!
ஜெயலலிதா: தெரியுது மேன், என்னா விசயம் சொல்லு, எனக்கு போன் போட்டு தில்லா அதுவும் ஒரு ஆம்பள என் பெயரை சொல்லும் பொழுதே தெரிஞ்சுது நீ உள்ளூர் ஆள் இல்லை என்று!
ஒபாமா: மேடம் பொருளாதாரத்தை முன்னேற்றுவது எப்படின்னு சொல்லித்தாங்க!
ஜெயலலிதா: ம்ம்ம் எவ்வளவோ வழி இருக்கு மேன், சுடுகாடு கொட்டகை, டான்சி நிலம், இப்படி எங்க ஊரில் பல இருக்கு அங்க அதுபோல் எல்லாத்தையும் வளைச்சுப்போடு உன் பேரில்! அதுபோல் திவாலான பேங்குக்கு என்று பணம் ஒதுக்கும் பொழுது இல்லாத பேங்குக்கு ஒரு அமவுண்ட் ஒதுக்கி நீ எடுத்துக்க!
ஒபாமா: மேடம் நான் கேட்டது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற!
ஜெயலலிதா: சாரி ராங் நம்பர்! (யார்கிட்ட வந்து என்ன கேள்வி கேட்கிறான் சின்னபுள்ள தனமா! (அம்மாகிட்ட பேசும் பொழுது ஒபாமாகூட போல்டா இருக்கமாட்டேங்கிறார்)

அடுத்த போன் விஜயகாந்த்

ஓபாமா: ஹாய் விஜயகாந்து நான் ஒபாமா பேசுறேன்!
விஜயகாந்த்: டேய் ஒபாமா உன்னை ஆள் ஆளுக்கு எங்க இருக்கன்னு தேடிக்கிட்டு இருக்கும் பொழுது என்ன தில் இருந்தா நீ போன் போட்டு என்னிடமே பேசுவ? நீ பேசிக்கிட்டே இரு நான் நீ இருக்கும் இடத்தை கண்டு பிடிச்சு அங்கயே வந்து உன்னை மீட் பண்ணுறேன், ட்ட்டூவின் டவரு (இங்கிலீஸ் வராது)இடிச்சப்பயே உன்னை புடிச்சு இருக்கனும். மிஸ் ஆகிட்ட நான் முதல்வர் ஆனதும் உன்னை புடிப்பதுதான் டா என் வேலை! மக்களிடம் காட்டத உன் வெறுப்பு தில் இருந்தா வந்து என் முன்னாடி நில்லுடா பருப்பு! மக்களோடு தெய்வத்தோடும் கூட்டணி வெச்சு உன்னை புடிக்கிறேன் டா! ஆங்ங்ங் !
ஓபாமா: ஹலோ ஹலோ ஹலோ நான் ஒபாமா அமெரிக்க அதிபர்!!
விஜயகாந்த்: டேய் அமெரிக்கா காரன் வேண்டும் என்றால் நீ செஞ்ச தப்ப மறந்து உனக்கு ஓட்டு போட்டு உன்னை அதிபர் ஆக்கி இருக்கலாம், நான் விடமாட்டேண்டா!நான் பச்சை டமிளன்!
ஓபாமா:டொக் (போனை வைத்துவிடுகிறார்)
(கண்கள் சிவக்க பல்லை நற நறவென்று கடித்தபடி இருக்கும் விஜயகாந்திடம் வரும் )மனைவி என்னங்க இப்படி கோவப்பட்டு உட்காந்து இருக்கீங்க!
விஜயகாந்த்: ஓபாமா இப்ப போன் போட்டு என்னிடம் பேசுறான்!
மனைவி: ஆஹா அமெரிக்கா வரை உங்க புகழ் பரவிடுச்சு போல நீங்க இல்லமா ஒருத்தரும் ஆட்சியபுடிக்க முடியாது என்பது அமெரிக்கா வரை தெரிஞ்சு இருக்கு, அடுத்த2022 ஒபாமா கூட கூட்டணி வைக்காமலேயே நாமா அமெரிக்க அதிபர் ஆகிடலாங்க!
விஜயகாந்த்:( மனசுக்குள் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி....)ஒரு தீவிரவாதி என்னிடம் போன் போட்டு தில்லா ஹலோ சொல்லிட்டானேன்னு நானே கடுப்பில் இருக்கேன் நீ வேற!!!
மனைவி: என்னது தீவிரவாதியா? யாருங்க அது?
விஜயகாந்த்: அவன் தான் ஒபாமா!
மனைவி: அய்யோ அய்யோ அவன் ஒசாமாங்க இவர் ஒபாமாங்க!! ரெண்டு பேரும் வேற வேற!
விஜயகாந்த்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தேவைப்பட்டால் போராட்டம் - விஜய் அதிரடி


என்னுடைய கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தா மினி ஹாஸ்பிடல் போலவே இருக்கு. மகிழ்ச்சியும், பரவசமுமாக நடிகர் விஜய் இதை சொன்ன இடம் அவரது வடபழனி ஜேஎஸ் திருமண மண்டபம். இலவச மருத்துவ ஆலோசனை, இலவச சிகிச்சை, ரத்ததானம் என உண்மையிலேயே மினி ஹாஸ்பிடல் போலதான் இருந்தது திருமண மண்டபம்.

என்னுடைய ரசிகர்கள் தங்கள் தகுதிக்கு மீறி நல்ல விஷயங்கள் செய்றாங்க என்று பேச்சைத் தொடங்கினார் விஜய். அவரது பிறந்தநாள் குறித்து கேட்டதற்கு, ‘மற்ற பிறந்தநாட்களை விட இந்த பிறந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். இந்த பிறந்த நாளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை நிறைவேற்றியும் இருக்கிறேன்’ என்றார்.

அரசியல் கட்சி தொடங்கப் போகிறீர்களா?

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் ரொம்ப நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யலாம் என்ற அவர்களின் கருத்தை நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அரசியலுக்கு வரலாமா என கருத்து கேட்டது உண்மைதான். மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.

ரசிகர்களிடம் மட்டுமில்லாது பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டேன். அவர்கள் எனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். அதை என் மூளையில் ஏற்‌றிக் கொண்டு என்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் கருத்து‌ப்படி இப்போது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டேன். அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவர்கள் எப்போதோ தொண்டர்களாகிவிட்டார்கள்.

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக உங்களுக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா?

இல்லை. யாரும் மிரட்டுற அளவுக்கு நான் சீன் காட்டவில்லையே. இப்படியே மிரட்டல் வந்தாலும் அதை எதிர்கொள்வேன்.

மக்கள் இயக்கம் ஆரம்பித்திருக்கிறீர்கள், பொதுப் பிரச்சனைக்காக போராடுவீர்களா?

என்னுடைய ரசிகர்கள் இனி உள்ளூர் பிரச்சனைக்காக போராடுவார்கள். தேவைப்பட்டால் அந்த போராட்டங்களில் நானும் கலந்து கொள்வேன்.

வேட்டைக்காரன் எப்போது வெளியாகிறது?

70 சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்திருக்கிறது. தீபாவளிக்கு படம் வெளிவரும். என்னுடைய ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்கிறார். இயக்குனர் யார், ஹீரோயின் யார் என்பதை வேட்டைக்காரன் முடிந்த பிறகு முறைப்படி அறிவிப்பேன்.

பத்தி‌ரிகையாளர்கள் மீண்டும் அரசியல் பற்றி கேட்கவே, மைக்கை ஆஃப் செய்த விஜய், அன்னதானம் செய்ய வேண்டியிருக்கு என்று அங்கிருந்து கிளம்பினார். முன்னதாக ரங்கராஜபுரம் மற்றும் அருணாச்சலம் ரோடு ஆகிய இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை அவர் தொடங்கி வைத்தார்.

நிலவுக்கு ஆளில்லா விண்கலம் : நாஸா அனுப்பியது

நிலவுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாஸா' அனுப்பியுள்ளது.

நிலவில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்தும், நிலவின் பரப்பை வரையவும் இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

நிலவு குறித்த நாம் அறிந்து இருக்கும் தகவல் மிகவும் குறைவாகவே உள்ளது.நிலவின் பரப்பு குறித்த வரைபடத்தை விட செவ்வாய் கிரகம் குறித்த வரைபடம்தான் நம்மிடம் சிறப்பாக உள்ளது.

எனவேதான் நிலவு குறித்து மேலும் பல தகவல்களை அறிந்து கொள்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டிருப்பதாக நாஸா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நேரப்படி நேற்று மாலை 5.32 மணிக்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம், நிலவின் உள்வட்டப்பாதையில் நுழைய 4 நாட்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏர் பிரான்ஸ் விபத்து : கருப்பு பெட்டி இருக்குமிடம் கண்டுபிடிப்பு

228 பேரை பலிகொண்ட ஏர் பிரான்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்குமிடத்தை காட்டும் 'சிக்ன்ல்' வெளிப்படும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி 228 பேருடன் கடந்த 1 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற ஏர் - பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் விழுந்த இடத்திலிருந்து விமானத்தின் நொறுங்கிய பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விபத்து எவ்வறு நிகழ்ந்தது என்பதை அறிய உதவும் விமானத்தின் கருப்பு பெட்டி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்துவந்தது.

அதனை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏர் பிரான்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்குமிடத்தை காட்டும் 'சிக்ன்ல்' வெளிப்படும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பெட்டி இருக்குமிடத்திலிருந்து வெளிப்படும் ' சிக்னல் ' மூலமாக எழும்பும் ஒலி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கேட்கும் என்பதால், சப்தம் வரும் இடத்தைச் சுற்றிலும் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாரீஸிலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்றின் இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் பிரான்ஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தம்மால் இந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை என்றார்.

கை‌க்குழ‌ந்தை ‌மீது வரத‌ட்சணை வழ‌க்கு

இர‌ண்டு வருட‌த்‌தி‌ற்கு மு‌ன்பு வரத‌ட்சணை கொடுமை செ‌ய்ததாக, ‌விவாகர‌த்தான மனை‌வி தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல், 2 மாத‌க் கை‌க்குழ‌ந்தை‌யி‌ன் பெயரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ப‌திவு செ‌ய்து, குழ‌ந்தையை‌க் கைது செ‌ய்து ‌சிறை‌யிலு‌ம் அடை‌த்தன‌ர்.

இதோடு ‌நி‌ற்காம‌ல், அ‌ந்த இர‌ண்டு மாத‌க் கை‌க்குழ‌ந்தை‌க்கு ‌மு‌ன் பிணைய ‌விடுதலை‌ப் ‌பிற‌ப்‌பி‌த்து ‌நீ‌திப‌தியு‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌த்தையே கே‌லி‌க் கூ‌த்தா‌க்கு‌ம் வகை‌யி‌ல் நட‌ந்த இ‌ந்த ச‌‌ம்பவ‌ம் மு‌ம்பை‌யி‌ல் நட‌ந்தே‌றியு‌ள்ளது. அத‌ன் ‌விவர‌ம் எ‌ன்னவெ‌ன்று பா‌ர்‌க்கலா‌ம்.

மு‌ம்பையை‌ச் சே‌ர்‌ந்த சு‌ம்சு‌தீ‌ன் கா‌ன், தனது மனை‌வி ஷ‌கிலாவை 2 ஆ‌ண்டு‌க்கு மு‌ன்பு ‌விவகார‌த்து செ‌ய்து‌வி‌ட்டா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் ரேஷ‌்மா எ‌ன்ற பெ‌ண்ணை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு அவ‌ர்களு‌க்கு ஒரு பெ‌ண் குழ‌ந்தையு‌ம் ‌பிற‌ந்து‌ள்ளது. ‌பிற‌ந்து 2 மாத‌ம் ஆகு‌ம் குழ‌ந்தை‌க்கு ஜோயா எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டின‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ச‌ம்சு‌தீ‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் வரத‌ட்சணை‌க் கே‌ட்டு த‌ன்னை கொடுமை‌ப்படு‌த்‌தியதாக மு‌ன்னா‌ள் மனை‌வி ஷ‌கிலா த‌ற்போது காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்தா‌ர். அ‌ந்த புகா‌ரி‌ல் த‌ன்னை‌க் கொடுமை‌ப்படு‌த்‌தியவ‌ர்க‌ள் ப‌ட்டிய‌லி‌ல் சு‌ம்சு‌தீ‌ன், ரேஷ‌்மா ம‌ற்று‌ம் 2 மாத‌க் கை‌க்குழ‌‌ந்தை ஜோயா‌வி‌ன் பெயரையு‌ம் ஷ‌கிலா கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ர்.

உடனே காவ‌‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து செ‌ன்று, சு‌‌ம்சு‌தீ‌ன், ரேஷ‌்மா, ஜோயாவை காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ற்கு வரவழை‌த்து ‌விசா‌ரி‌த்தன‌ர். ம‌‌திய‌ம் 1 ம‌ணி‌க்கு வ‌ந்தவ‌ர்களை இரவு 10 ம‌‌ணி‌க்கு‌த்தா‌ன் ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியு‌ள்ளன‌ர். (கை‌க் குழ‌ந்தையுட‌ன் ரேஷ‌்மா இ‌வ்வளவு நேர‌ம் எ‌ப்படி து‌ன்ப‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர் எ‌‌ன்பது எ‌ல்லா தா‌ய்மா‌ர்களு‌க்கு‌ம் பு‌ரியு‌ம்.)

முத‌ல் தகவ‌ல் அ‌றி‌க்கை‌யிலு‌ம், குழ‌ந்தை ஜோயா உ‌ட்பட 8 பே‌ரி‌ன் பெய‌ர்களை காவ‌ல்துறை‌யினர‌் சே‌ர்‌த்து‌ள்ளன‌ர். அ‌ப்போது, குழ‌ந்தை‌யி‌ன் பெயரை சே‌ர்‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி ரேஷ‌்மா கத‌றியு‌ள்ளா‌ர். ஆனா‌ல், குழ‌ந்தை‌யி‌ன் பெயரை சே‌ர்‌ப்பது இது ஒ‌ன்று‌ம் முத‌ல் முறை அ‌ல்ல எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் கா‌ட்டமாக‌க் கூ‌றி‌யு‌ள்ளன‌ர்.

ஜோயா உ‌ட்பட 8 பே‌ர் சா‌ர்‌பில‌் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மு‌ன் ‌பிணைய ‌விடுதலை மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ச‌ம்சு‌தீ‌ன் த‌விர ம‌ற்ற 7 பேரு‌க்கு‌ம் மு‌ன் ‌‌பிணைய ‌விடுதலை வழ‌ங்‌கினா‌ர்.

இ‌ந்த ‌விஷய‌த்தை‌க் கே‌‌ள்‌வி‌ப்ப‌ட்ட ச‌ட்ட ‌நிபுண‌ர்க‌ள், 2 மாத‌க் கை‌க் குழ‌ந்தை ‌மீது வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்த ஷ‌கிலா ‌மீது‌ம், குழ‌ந்தை ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை ‌மீது‌ம், குழ‌ந்தை‌க்கு மு‌ன் ‌பிணைய ‌விடுதலை அ‌ளி‌த்த ‌நீ‌திப‌தி‌க்கு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

2 மாத‌க் குழ‌ந்தை ‌மீது வழ‌க்கா? இதுவரை நா‌ன் கே‌ள்‌வி‌ப்ப‌ட்டதே இ‌ல்லை. புகா‌ர் கொடு‌த்தவ‌ர் மன‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவராக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ச‌ட்ட ‌நிபுண‌ர் ரா‌ம் ஜெ‌த்மலா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மு‌ம்பை மு‌ன்னா‌ள் மேயரு‌ம் வ‌க்‌கீலுமான ‌நி‌ர்மலா சவ‌ந்‌த் கூறுகை‌யி‌ல், 7 வயது வரை ஒரு குழ‌ந்தையை அ‌ப்பா‌வியாகவே‌ ச‌ட்ட‌ம் கருது‌கிறது. எது ச‌ரி, எது தவறு எ‌ன்று அ‌ந்த குழ‌ந்தை‌க்கு அதுவரை தெ‌ரியாது. 7 வயது‌க்கு மே‌‌ற்ப‌ட்ட குழ‌ந்தைகளை இள‌ம்‌சிறா‌ர் ச‌ட்ட‌ப்படி ‌விசா‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 2 மாத கை‌க்குழ‌ந்தை ‌மீது வழ‌க்கு போ‌ட்டது ‌வி‌ந்தையாக உ‌ள்ளது. அ‌‌திலு‌ம், அ‌ந்த‌க் குழ‌ந்தை‌க்கு மு‌ன் ‌பிணைய ‌விடுதலை கே‌ட்டிரு‌க்கவே வே‌ண்டா‌ம். ‌நீ‌திம‌ன்ற வரலா‌ற்‌றி‌ல் ‌சிறு குழ‌ந்தை‌க்கு எ‌ந்த ‌நீ‌திப‌தியு‌ம் மு‌ன் ‌பிணைய ‌விடுதலை கொடு‌த்தது இ‌ல்லை. குழ‌ந்தை ஜோயாவு‌க்கு மு‌ன் ‌பிணைய ‌விடுதலை அ‌ளி‌த்தது ச‌ட்ட‌த்தை கே‌லி‌க்கூ‌த்தா‌க்‌கி‌வி‌ட்டது எ‌ன்றா‌ர்.

இ‌தி‌ல் நம‌க்கு ‌சில ச‌ந்தேக‌ங்க‌ள் எழு‌கி‌ன்றன? அதாவது ஷ‌கிலா 2 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே ‌விவாகர‌த்து பெ‌ற்று‌வி‌ட்டா‌ர். அத‌ன்‌பிறகுதா‌ன் ரேஷ‌்மாவை‌த் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளா‌ர் சு‌ம்சு‌தீ‌ன். அ‌ப்படி‌யிரு‌க்க, 2 ஆ‌‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே ரே‌ஷ‌்மா எ‌ப்படி ஷ‌கிலாவை வரத‌ட்சணை‌க் கே‌ட்டு கொடுமை‌ப்படு‌த்‌தி‌யிரு‌க்க முடியு‌ம். மேலு‌ம், 2 ஆ‌ண்டுகளாக ஷ‌கிலா எ‌ன்ன செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்தா‌ர். ‌விவாகர‌த்து கே‌ட்பத‌ற்கு மு‌ன்பே அவ‌ர் வரத‌ட்சணை வழ‌க்கை அ‌ல்லவா கொடு‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ‌விவாகர‌த்து எ‌ல்லா‌ம் பெ‌ற்று 2 ஆ‌ண்டுக‌ள் க‌ழித‌்து இ‌ன்றுதா‌ன் அவரு‌க்கு வரத‌ட்சணை கொடுமை செ‌ய்தது ‌நினைவு‌க்கு வ‌ந்ததா? அ‌ப்படியு‌ம் அ‌ந்த ப‌ச்சை‌க் குழ‌ந்தை இவரை எ‌ந்த வகை‌யி‌ல் கொடுமை செ‌ய்தது? செ‌ய்‌திரு‌க்க முடியு‌ம்? இ‌ந்த கே‌ள்‌விக‌ள் எ‌ல்லா‌ம் ஏ‌ன் அ‌ந்த காவ‌ல்துறை‌க்கு தோ‌ன்ற‌வி‌ல்லை.

‌சில மு‌ன் ‌விரோத‌ங்க‌ள் காரணமாக த‌ங்களது வ‌ஞ்சக‌த்தை‌த் த‌ீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ள ‌சில‌ர் ச‌ட்ட‌த்தை இ‌ப்படி தவறாக‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். இத‌ற்கு ச‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் ம‌க்களு‌க்கு பாதுகா‌ப்பு‌த் தர வே‌ண்டிய காவ‌ல்துறையு‌ம், ச‌ட்ட‌த்தை த‌ன் கை‌யி‌ல் எடு‌த்து‌க் கொ‌ண்டு அ‌ப்பா‌விகளை து‌ன்புறு‌த்து‌கி‌ன்றன. இதெ‌ல்லா‌ம் ஜனநாயக நா‌ட்டி‌ல் அர‌ங்கேறு‌ம் ச‌ம்பவ‌ங்க‌ள்..

குற்றால‌ அரு‌வி‌யி‌ல் குறை‌ந்த ‌நீ‌ர், ‌நிறை‌ந்த கூ‌ட்ட‌ம்

குற்றாலத்தில் கடந்த வெள்ளி ம‌ற்று‌ம் சனி ஆகிய தினங்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் குறைவான அளவே த‌ண்‌ணீர‌் கொ‌ட்டியது. ஆனா‌ல் கூ‌ட்டமோ ‌மிக அ‌திகமாக‌க் காண‌ப்ப‌ட்டது. இதனா‌ல் அனைவரு‌ம் வ‌ரிசை‌யி‌ல்‌ ‌நி‌ன்று அரு‌வி‌யி‌ல் நனை‌ந்து செ‌ன்ற‌ன‌ர்.

ச‌னி‌க்‌கிழமை கு‌ற்றால‌த்‌தி‌ல் ந‌ல்ல த‌ட்பவெ‌ப்ப‌ம் காணப்பட்டது. நே‌ற்று ம‌ட்டு‌ம் லேசான வெயில் இரு‌ந்தது. ச‌னி‌க்‌கிழமை ம‌ற்று‌ம் ஞா‌யிறு‌கிழமைக‌‌ள் ‌விடுமுறை நா‌ள் எ‌ன்பதா‌ல் ‌கு‌ற்றால‌த்‌தி‌ல் ஏராளமான பய‌ணிக‌ள் படையெடு‌த்தன‌ர். ஆனா‌ல் சு‌ற்றுலா வ‌ந்த பய‌ணிக‌ளி‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சியை‌க் கெடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அருவிகளில் தண்ணீர் ‌மிக‌க் குறைவாகவே கொட்டியது.

ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் ஓரளவு கொட்டுகிறது. இங்கு நேற்று ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

மு‌க்‌கிய அருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. புலியருவியில் தண்ணீர் விழவில்லை. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் குறைவாகவே விழுகிறது. இதனா‌ல் கு‌ற்றால அரு‌வி‌யி‌ல் கு‌ளி‌‌க்க வ‌ந்த பய‌ணிக‌ள் லேசாக உடலை நனை‌த்து‌க் கொ‌ண்டு செ‌ன்றன‌ர்.

லால்காரை விடுவிக்க சிறிதுகாலம் பிடிக்கும்- ப. சிதம்பரம்

மேற்குவங்க மாநிலம் லால்காரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க அனைவரும் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக சிறிது காலம் பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை சில காலம் தொடரும் என்று சிதம்பரம் கூறினார்.

லால்கார் பகுதியை நோக்கி பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் முன்னேறி வருவதாகவும், அப்பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் படையினர் எச்சரிக்கை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை அறிவித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் மெதுவான முன்னேற்றம் காரணமாக லால்கார் பகுதியை எப்போது அவர்கள் அடைவார்கள் என்பதை கூற முடியாது. இதுவரை திட்டமிட்டபடி பாதுகாப்புப் படையினர் நகர்ந்து வருவதாக அவர் கூறினார்.

எதிர்பாராத எந்த சம்பவங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய ப. சிதம்பரம், இந்த நடவடிக்கை வெற்றிபெறும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை சில ஊடகங்கள் போர் என்று குறிப்பிட்டிருப்பதைக் குறைகூறிய ப. சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்ற பெயரில் அவர்கள் செயல்பட்டாலும், இந்தியர்கள் தான். எனவே இந்த மோதலை போர் என்று கூறாதீர்கள் என்றார்.

மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதங்களைக் கையிலெடுத்துள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான செயல் இது என்றார் அவர்.

இதனிடையே மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லால்கார் நோக்கி மேற்கு வங்க காவல்துறையினரும், மத்தியப் படையினரும் 2ஆவது நாளாக முன்னேறிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேக்கடி ஏரி‌யி‌ல் களைக‌ட்டு‌ம் படகு சவாரி

தே‌க்கடி ஏ‌ரி‌யி‌ல் செய‌ல்ப‌ட்டு வரு‌ம் படகு சவா‌ரி‌, ஏராளமான சு‌ற்று‌ப் பய‌ணிகளை‌க் கவ‌ர்‌ந்து‌ள்ளது. இதனா‌ல் ஆ‌ண்டு‌க்கு ரூ.21 கோடி வருமான‌ம் ‌கிடை‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெரியாறு அணையின் 8 ஆயிரம் ஏக்கர் நீர்தேக்க பரப்பில் தேக்கடி ஏரி அமைந்துள்ளது. இது ஒரு சு‌ற்றுலா‌த் தலமாக ‌விள‌ங்கு‌கிறது.

இங்கு ஏ‌ரி‌யி‌ல் படகு சவா‌ரியு‌ம் ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌ல் சுற்றுலா துறைக்கு சொந்தமான 5 படகுகள், வனத்துறைக்கு சொந்தமான 5 படகுகள், தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2 படகுகள், கேரள காவ‌ல்துறை‌க்கு சொந்தமான அதிவிரைவு படகு ஒ‌ன்றும் உள்ளன.

வனத்துறைக்கு சொந்தமான 5 படகுகளிலும் ஒரு சவாரிக்கு 88 பேர் மட்டுமே செல்ல முடியும். அதனால், வனத்துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தலா 80 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 3 படகுகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட ஒரு படகை கடந்த பிப்ரவரியில் வனத்துறை இயக்கியது. மேலும் 2 புதிய படகுகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இந்த 2 படகுகளும் ஒரு நா‌ளி‌ல் தலா 4 முறை பயணிகளை ஏற்றி செல்லும். அதனால் நாளொன்றுக்கு 640 சுற்றுலா பயணிகள் கூடுதலாக படகு சவாரி செய்ய முடியும்.

இது குறித்து கேரள அதிகாரி ஒருவர் கூறுகையில், தேக்கடியில் படகு சவாரி மூலம் ஆண்டுக்கு ‌கி‌ட்ட‌த்த‌‌ட்ட ரூ.21 கோடி வருமான‌ம் ‌கி‌டை‌க்‌கிறது. த‌ற்போது புதிய படகுகளை இயக்குவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூ‌றினார‌்.

எஸ்.எம்.எஸ். மூலம் ரயில்வே பொது விசாரணை

எஸ்.எம்.எஸ். மூலம் ரயில்வே பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்துக்கொள்ளும் வசதியை இந்திய ரயில்வே தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழக நிறுவனம் இந்த வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ரயில்வே தொடர்பான தகவல்களை அறிய "139 - Rail Sampark" என்று டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த சேவை மூலம், ரயில் டிக்கெட்டின் PNR நிலை, கட்டணம், இடம் இருக்கிறதா என்பதை பற்றிய விபரம் போன்ற அனைத்து விபரங்களையும் அறிய முடியும். ரயில் புறப்படும் மற்றும் வந்துசேரும் நேரம் ஆகியவற்றையும் அறிய முடியும்.

உதாரணமாக, ரயில் டிக்கெட்டின் PNR நிலையை அறிய, PNR என டைப் செய்து, பின்னர் 10 இலக்க எண்களையும் டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும்.

இந்த வசதி, நாடு முழுவதிலும் இருந்து லேண்ட்லைன் மற்றும் மொபைல்போன்கள் மூலம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எஸ்.டி.டி கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. ரயில்வே துறையில் இந்த வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், 139 எண்ணுக்கு நாள்தோறும் நாடு முழுவதும் இருந்தும் சுமார் 7.5 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த எண்ணில் வரும் அழைப்புகளுக்கு, அந்தந்த மொழிகளில் உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 11 உள்ளூர் மொழிகளுடன் கூடிய விசாரணை மையங்களும் (கால் சென்டர்கள்) இயங்கி வருகின்றன.

இந்த 139 சேவையை பயன்படுத்தி, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவும் செய்துக்கொள்ள முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உடனடியாக பயணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதில் முக்கிய கண்டுபிடிப்பு

உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய திருப்பமாக, மனித உடலில் எய்ட்ஸ் கிருமி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை கனடா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் இதனை கண்டுபிடித்துள்ள கனடா விஞ்ஞானிகள், தற்போதைய கண்டுபிடிப்பு மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் பாதித்த ஒருவருக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சை மூலம் அந்த நோய் மென்மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது.ஏனெனில் அந்த நோயை உண்டாக்கும் கிருமி மனித உடலில் எங்கோ மறைந்து இருந்து கொண்டு, மருநதின் வீரியம் குறைந்தவுடன் மீண்டும் மீண்டும் தாக்குகிறது.

இந்நிலையில், இதுவரை எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி மனித உடலில் கிட்னியிலோ ( சிறுநீரகம் ) அல்லது மூளையிலோதான் மறைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதிக்கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின் மூலம் இந்நோய் கிருமி மிக பாதுகாப்பாக, மனித உடலில் நீண்ட நாட்கள் வாழும் ' மெமரி செல் ( உயிரணு )' களில் மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

'ஸ்டெம் செல்'களைப் போன்றே மனித உடலில் நீண்ட ஆயுளைக்கொண்ட இந்த 'மெமரி செல்', ஏதாவது புதிய வைரஸ் அல்லது நோய் தாக்காதவரை, பெரும்பாலான நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதேபோன்று 'ஸ்டெர்ம் செல்'களைப் போன்றே, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திறனும் 'மெமரி செல்' - க்கு உண்டு.எனவே எய்ட்ஸ் கிருமி அதை தாக்கும்போது, அதனை எதிர்த்துப் போராடுவதற்காக பல மடங்கு செல்களை அது உருவாக்கும்.

ஆனால் பிரச்னை என்னவென்றால்,எய்ட்ஸ் கிருமி ஒருமுறை இந்த 'மெமரி செல்' - க்குள் புகுந்துவிட்டால், அதுவும் அதனுடன் சேர்ந்து பன்மடங்காக பெருகிவிடும்.

இவ்வாறாகாத்தான் எய்ட்ஸ் கிருமி மனித உடலில் பத்திரமான இடத்தில் ஒளிந்துகொண்டு,பின்னர் தனது வேலையை காட்டி வந்தது.

இந்நிலையில், மெமரி செல் - லில் ஒளிந்திருக்கும் எய்ட்ஸ் கிருமியை, மெமரி செல் - க்கு பாதிப்பில்லாமல் அழிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக கனடா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு, எய்ட்ஸ் கிருமியை அழிப்பதற்கான முதல் தடயமாக அமைந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழு தலைவரான சீக்லே தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது 33 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றனர் என்பதும், ஆண்டுக்கு 2.7 மில்லியன் பேர் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீ தான் அழகு.!!!!!!

கண்களுக்கு காவியம் நீ...
செவிகளுக்கு இன்னிசை நீ ...
நாவிற்கு அறுசுவை நீ ...
மார்கழியின் மறுவடிவம் நீ...
சித்திரையின் எதிர்பதம் நீ...
இயற்கையின் வரம் நீ...
எங்களின் தவம் நீ...
மலைகளின் கூந்தல் நீ...
மனைவியை மறக்கச்செய்பவலும் நீ ...
மழையின் மகத்துவம் நீ ...
அருவியின் அற்புதம் நீ... சாரலின் அழகு ....
மலையிலா? .. அருவியிலா?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன் சாரலே...
நீ தான் அழகு....

பெண்ணே பேசிவிடாதே !

கவிஞர்கள்
அதிகமாகத்தான்
இருக்கிறார்கள்
ஆனால்
கவிதைகள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது

காதலர்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது

கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
மனிதர்கள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறார்கள்

வார்த்தைகள்
அதிகமாகத்தான்
இருக்கிறது
ஆனால்
காதல்
மௌனமாகத்தான்
இருக்கிறது
உன்னில்...

சில வார்த்தைகள்
பேசப்படும்போது
அழகாக
இருக்கின்றன

சில வார்த்தைகள்
கவிதையாகும்போது
அழகாக
இருக்கின்றன

சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!

பறவைக் காய்ச்ச‌ல்

என் மகனுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு டாக்டர்..

வேறு எதாச்சும் பிரச்சினை இருக்கா?

பேப்பர எடுத்து முட்டை முட்டையா வரைஞ்சுக்கிட்டே இருக்கான்.

அப்போ கண்டிப்பா பறவைக் காய்ச்சலாத்தான் இருக்கும்.

அப்பாவின் அன்பு

ஒரு பையன் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்.

அம்மா : ஏன் இவ்வளவு லேட்?

மகன் : அம்மா நான் ஒரு சினிமாவுக்கு போனேன். படத்தின் பெயர் "அம்மாவின் அன்பு".

அம்மா : அப்படியா! அப்பாவின் அறைக்கு போ அங்கு தெரியும் "அப்பாவின் அன்பு".

நாமதான் உழைக்கணும்

கடைக்காரர் : விலை அதிகம்னு பாக்காதீங்கம்மா…. இந்த செருப்பு நல்லா உழைக்கும் !

கடைக்கு வந்த பெண்மணி : செருப்பெல்லாம் உழைக்காதுப்பா… மனுஷங்க நாமதான் உழைக்கணும் . அதுவும் இந்த செருப்பெல்லாம் வாங்கணும்னா ரொம்பவே உழைக்கணும்.

சிவா‌ஜிக்கு மணிமண்டபம் - சரத் உறுதி

57 வருட நடிகர் சங்க வரலாற்றில் முதல்முறையாக தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட அனைவரும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. சரத்குமார் தலைமையிலான அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் தலைமையிலான அணி ஒரு மனதாக நிர்வாகக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகா‌‌ரி பிறைசூடன் அறிவித்தார். சரத்குமார் தலைவராகவும், ராதாரவி செயலராகவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகளின் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டபின் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். சங்கத்தின் புதிய கட்டிடம் 3 ஆண்டுக்குள் குளிர்சாதன வசதியுடன் கட்டி முடிக்கப்படும் என்றும், சிவா‌ஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெ‌ரிவித்தார்.

சூர்யாவுக்கு கதை சொன்ன வெற்றிமாறன்

ஆடுகளம் படத்தை எடுக்க ஏன் இத்தனை நாட்கள்? வெற்றிமாறனிடம் கேட்டதற்கு, ஆடுகளம் மதுரை பின்னணியில் தயாராகும் படம். நான் சென்னை ஆள். மதுரை பாஷை தெ‌ரிந்து படம் எடுக்க வேண்டியிருக்கு. அதுதான் லேட் என்றார்.

மதுரையில் நடக்கும் படப்பிடிப்புக்கு நடுவில் சென்னை வந்த வெற்றிமாறன், சூர்யாவை சந்தித்து அவுட் லைன் ஒன்றை கூறியிருக்கிறார். இந்த அவுட் லைன் சூர்யாவுக்கு பிடித்திருக்கிறது. கதையை டெவலப் செய்யுங்கள் என்று வெற்றிமாறனிடம் அவர் கூறியிருக்கிறார். ஆடுகளத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தை மாசிலாமணி படத்தை தயா‌ரித்திருக்கும் கல்பாத்தி எஸ் அகோரம் தயா‌ரிப்பார் என்று தெ‌ரிகிறது.

மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: வைகோ

மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக கட்சியை அழிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி இன்று வரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.

மதிமுகவை அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப் போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அதிமுக எங்களை அழிக்க நினைக்கவில்லை. மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க ரூ.50 கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். எனவே, தோல்வியடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை.

புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது. உள்ளத்தில் உறுதியுடனும், லட்சியத்தில் உறுதியுடனும் இருந்து தொடர்ந்து போராடுவோம்.

12 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.பெற்ற ஓட்டுக்களை விட அ.தி.மு.க. அதிகம் பெற்று இருக்கிறது. வரும் பொது தேர்தலில் எத்தனை கோடி கொடுத்தாலும் அ.தி.மு.க. அணி வெற்றி பெறும். தேர்தலில் பணநாயகம் நடந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் இது நடக்காது என்றார்.

ஒரு நாள் பார்வையிலே

ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்

தீயாய் மூண்டது நம்காதல்
திரிந்தோம் ஜெயபுரம் வீதியெல்லாம்
திட்டித் தீர்த்தன உன் உறவுகள்
திட்டமின்றி வெளியானோம் வீட்டைவிட்டு

காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
என்னை ஏற்கவில்லை உன் உறவுகள்
ஏனெனில் நான் ஏழை என்பதனால்

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்

நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே...

நிறையவே பேசவேண்டும்

உணர்வுகளை உண்மைகளை
உரைக்க வேண்டும்.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லவேண்டும்.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லவேண்டும்.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
இன்றைக்காவது சொல்லவேண்டும்.

வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
சில வார்த்தைகளை என்னால்
இதுவரை பிரசவிக்கவே முடியவில்லை.

ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
என்னுள் நிறைந்து வழியும்
மானுட உணர்வுகள்
வெளியே தெரிய
நிறையவே பேசவேண்டும்

குறைப் பிரசவமாய்
வந்து விழும் வார்த்தைகள்
முழுமை பெற வேண்டும்.

பேச வேண்டும்
நிறையவே பேசவேண்டும்

ஆசை ஆசையாய்
அழகு தமிழில்
நிறையவே பேசவேண்டும்.

பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்.

ஆனால் இப்போது
வார்த்தைகள் வெளியே வரவில்லை

அப்படியானால்
இனி எப்போது பேசுவது?
இதுதான் என் வாழ்வின்
இறுதி நிமிடமாயிற்றே!

ஆவி பிரிய துடிக்கும்
அந்த நிமிடமும் கரைகிறதே…

என்னுடன் சேர்ந்து
என் வார்த்தைகளும்
மரணித்துப் போகிறதே…

கோர்ட்

ஈரோடு: ""இந்திய நீதிமன்றங்களில் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன,'' என பவானியில் நடந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேசினார். பவானியில் நான்கு கோடியே 72 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும், 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீதிபதிகள் குடியிருப்பும் கட்டப்படுகிறது.


இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கட்டட அடிக்கல்லை திறந்து வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேசியதாவது: ஹரித்துவார் சென்றபோது கங்கையில் நீராடக்கூறினர். அங்கு கங்கையாற்றின் அகலம் அரை கிலோ மீட்டருக்கு மேல் இருந்தது. அலகாபாத்தில் யமுனையும், கங்கையும் சங்கமிக்கும் இடத்துக்கு சென்றேன். அந்த இடம் 70 அடி ஆழம் என தெரிவித்தனர். காவிரியாற்றை கால்நடையாக கடந்துச் செல்லும் அளவுக்கு தான் தற்போது தண்ணீர் ஓடுகிறது. எனவே, முதற்கட்டமாக தேசியளவில் நதிகளை இணைத்து, வடக்கே வீணாக ஓடும் தண்ணீரை தென்னகம் பக்கம் திருப்பி விட வேண்டும்.


சுப்ரீம் கோர்ட் புள்ளி விவரப்படி, 2008ல் சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரத்து 352 வழக்குகள் தேங்கியிருந்தன. வழக்குகள் தேக்கம் அடையக் கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் 26 நீதிபதிகளுடன், கூடுதலாக ஐந்து நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது. கடந்த 2008 டிச., 31ம் தேதி தமிழகத்தில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 598 வழக்குகள், புதுவையில் 25 ஆயிரத்து 46 வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது நான்காயிரம் கிராம நீதிமன்றங்களை உருவாக்க மத்திய அரசு பார்லிமென்டில் மசோதா கொண்டு வர உள்ளது. இந்தியாவில் 14 ஆயிரம் நீதிமன்றங்கள் உள்ளன. நான்கு கோடி வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.


 12 ஆயிரத்து 500 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். ஒரு நீதிபதி, ஓராண்டில் நான்காயிரம் வழக்குகளை கையாள்கிறார். எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற நிலை இல்லை. 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் நியமிக்க வேண்டும் என அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. டில்லி, சென்னை பகுதியில் லட்சக்கணக்கான செக் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். தற்போது 21 மாநில ஐகோர்ட்கள் இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட்டில் தினசரி எந்ததெந்த வழக்குகள் நடக்கிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு சதாசிவம் பேசினார். ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் லட்சுமண் கோகுலே, ஐகோர்ட் நீதிபதி ரவிராஜபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வருண்காந்தியின் சி.டி. பேச்சு உண்மையானது: தடயவியல் சோதனையில் முடிவு

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வருண்காந்தி பேசிய விடயங்களை உள்ளடக்கிய சி.டி. ஆதாரம் போலியானதல்ல என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட் மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளராக வருண்காந்தி போட்டியிட்டார். பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது அவர், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக குற்றசாற்று எழுந்தது.

இதனை வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்தார். இதன் பின்னர் அவரது பேச்சுகள் அடங்கிய சி.டி. வெளியானது. எனினும், அந்த சி.டி. போலியானது; ஜோடிக்கப்பட்டது என வருண் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சி.டி. ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வருண்காந்தி பேச்சுகள் அடங்கிய சி.டி. உண்மையானதுதான்; ஜோடிக்கப்பட்டது அல்ல என தெரிய வந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் இத்தகவலை பிலிபிட் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பித்து உள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து வெளியிட்டதைக் கண்டித்து பிலிபித் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைதான வருண் காந்தி, பிணையில் விடுதலை செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு தமிழக அரசு மூடு விழா?

இதோ வருகிறது, அதோ வருகிறது என்று மூன்று ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பு, இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலாவது வெளியாகுமா அல்லது வழக்கம் போல் மழுப்பப்படுமா என்ற கேள்வி, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது.


கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்தி, அனைத்து மாணவர்களுக்கும் வேறுபாடு இல்லாத தரமான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பை, தி.மு.க., அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்திற்குக் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், திட்டத்தை அமல்படுத்துவதில் ஏனோ தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டம் வெறும் அறிவிப்பு நிலையிலேயே இருக்கிறது; செயல்பாட்டிற்கு வந்தபாடில்லை. சட்டசபையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பதிலளித்துப் பேசும்போது, சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்ப்பர்; ஆனால், அதைப் பற்றி ஒற்றை வரி கூட இடம்பெறாது. அப்படி இடம்பெற்றாலும், அத்தோடு சரி. கடந்த ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில் பக்கம் எண் 40ல், "சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் இக்கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது' என அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி ஒரு கல்வியாண்டு முடிந்து, அடுத்த கல்வியாண்டும் துவங்கிவிட்டது.


 காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதியை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறது. மிகப் பொருத்தமாக அதே நாளில், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இந்த நன்னாளிலாவது சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்பு வருமா அல்லது வழக்கம்போல் மழுப்பப்படுமா என்ற கேள்வி, பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் இத்திட்டத்தை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ் ராஜினாமா : ஆதரவு தெரிவித்து நடிகை விஜயசாந்தியும் விலகல்

ஐதராபாத் : தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை சமாதானப்படுத்தி, அவரது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ராவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகை விஜயசாந்தியும் தன் கட்சிப் பதவியை உதறினார்.



ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் என்பவரையும் மற்றும் நான்கு பேரையும் கட்சியில் இருந்து நீக்கினார் சந்திரசேகர ராவ்.இதனால், அதிருப்தியாளர்களுக்கும், கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவிற்கும் இடையே மோதல் உருவானது. பிரச்னை முற்றவே சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அவருக்கு ஆதரவாக மேடக் தொகுதி எம்.பி.,யான விஜயசாந்தியும், கட்சியின் பொதுச் செயலர் மற்றும் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பொறுப்புகளை நேற்று ராஜினாமா செய்தார். தன் ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநில செயற்குழுவில் சமர்ப்பித்தார்.



அந்தக் கடிதத்தில்,"தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்று, கட்சியை தொடர்ந்து வழிநடத்தி செல்ல ஒப்புக் கொண்டால், எனது ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினி நரசிம்ம ரெட்டி, சந்திரசேகர ராவை நேற்று சந்தித்து, ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோரினார். அதேபோல, வேறு பல தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். வாரங்கல் உட்பட சில பகுதிகளில், டி.ஆர்.எஸ்., கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இப்பிரச்னை குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிப்பதற்காக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து, தெலுங்கானா தனி மாநிலத்தைப் பெற்றுத்தர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.



இதற்கிடையில், மாஜி அமைச்சர் சந்திரசேகர் வீட்டில் முன்னாள் எம்.பி., ரவீந்திர நாயக், முன்னாள் எம்.எல்.சி., ரகுமான் உட்பட அதிருப்தி தலைவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.அதன் பின் நிருபர்களிடம் பேசிய அவர்கள், "சந்திரசேகர ராவின் ராஜினாமா ஒரு நாடகம். கட்சியின் தலைவராக தலித் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்றனர்.

ஊர்ந்து செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் டிரைவர்களுக்கு 'டோஸ்': பொதுமக்கள் எரிச்சல்

அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் கூடுதல் மைலேஜ் மற்றும் கூடுதல் கலெக்ஷன் கேட்டு அலுவலர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். "மைலேஜ்'க்காக வேகமாக செல்ல முடியாதபடி இன்ஜினில் அட்ஜெஸ்ட் செய்து விடுகின்றனர்.



அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் கட்டை வண்டியை போல் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுவதால், நாளுக்கு நாள் கலெக்ஷனும் குறைந்து வருகிறது. தினமும் அவமானம் ஏற்படுவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். சில ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றாத காரணத்தாலும், பெட்ரோல், டீசல் விலை பலமுறை ஏறிவிட்டதாலும், நஷ்டம் ஏற்படாமல் இருக்க போக்குவரத்துக்கழகம் பல்வேறு கெடுபிடிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமீப காலமாக போக்குவரத்து அலுவலர்களின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு பஸ், ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோ மீட்டர் மைலேஜ் தரவேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். புது பஸ் மற்றும் பழைய பஸ் என எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. காயலான் கடைக்கு செல்லும் நிலையில் உள்ள பஸ் கூட குறிப்பிட்ட மைலேஜ் தரவேண்டும் என கட்டாயப்படுத்துவதால், பஸ் டிரைவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். "மைலேஜ்'க்காக கட்டை வண்டியை போல் அரசு பஸ்கள் ஊர்ந்து செல்வதால், பயணிகளின் எண்ணிக்கையும், கலெக்ஷனும் வேகமாக சரிந்து வருகிறது.



இதே நிலை நீடித்தால், அரசு போக்குவரத்துக்கழகம் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரைவர், கண்டக்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்களில் சிலர் கூறியதாவது: புது பஸ் வாங்கும்போது, அந்த பஸ் கம்பெனியே, "ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தான் மைலேஜ் தரும்' என, உத்தரவாதம் தருகின்றன. ஆனால், அரசு போக்குவரத்துக்கழக பஸ் களில் குறைந்த பட்ச மைலேஜ் அளவே ஆறு கிலோ மீட்டர். இந்த மைலேஜ் வர வேண்டும் எனில் பஸ்சின் வேகம் 40 கிலோ மீட்டரை தாண்டக்கூடாது. ஆனால், 40 கிலோ மீட்டரை தாண்டாத பஸ்களில் பயணிகள் ஏற முன்வருவதில்லை. அதற்கு பதில் அரை மணி நேரம் வரை காத்திருந்து கூட தனியார் பஸ்களில் ஏறி விடுகின்றனர். தனியார் பஸ்களும் மைலேஜ் குறித்து கவலைப்படாமல், சராசரியாக 80 கி.மீ., வரை வேகம் செல்கின்றனர்.



 அதிக பயணிகள் ஏறுவதால் அவர்களுக்கு அதிகப்படியான லாபமும் கிடைக்கிறது. அரசு பஸ்சில் அதிக வேகம் போகலாம் என டிரைவர் முயற்சித்தாலும் முடியாதபடி இன்ஜினிலும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விடுகின்றனர். நாளுக்கு நாள் அரசு பஸ்களில் கலெக்ஷன் குறைந்து கொண்டே செல்கிறது. தற்போது, அனைத்து பஸ்களிலும் கலெக்ஷன் குறைவாக இருப்பது தெரிந்தும், ஒவ்வொரு பஸ் டிரைவர், கண்டக்டரிடமும், "உங்கள் பஸ்சில் மட்டும் தான் கலெக்ஷன் குறைந்துள்ளது' என, கடும் டோஸ் விழுகிறது. மைலேஜ் குறைந்தாலும் டோஸ், கலெக்ஷன் குறைந்தாலும் டோஸ் என தினந்தோறும் டிரைவர், கண்டக்டர்கள் திட்டு வாங்குவதிலேயே கழிகிறது. இந்த வெறுப்பை எல்லாம் சிலர் பயணிகளிடம் காட்டுவதால், பல இடங்களில் சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, பஸ்சில் பிரச்னை என்று பணிமனைக்கு சென்றால், "நீ காட்டும் கலெக்ஷனுக்கு இந்த கண்டிஷன் போதும்' என, கேவலமாக நடத்துகின்றனர்.



இந்த அவமான தாக்குதல்களால் டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் கலெக்ஷன் காட்டும் பஸ் டிரைவர்களுக்காவது, மைலேஜ் விஷயத்தில் சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும். அதே போன்று வேகமாக செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ள அட்ஜெஸ்ட் மென்டையும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு லிட் டருக்கு 10 கி.மீ., மைலேஜ் தந்தாலும், பயணிகள் யாரும் ஏற முன் வரமாட்டர். பெரும் நஷ்டத்தையே போக்குவரத்துக் கழகம் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து போக்குவரத்துகழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பஸ்கள், 40 கி.மீ., வேகத்தில் சென்றால், உண்மையில் டீசல் இழப்பே ஏற்படும். பொதுவாக 60 கி.மீ., வேகத்தில் செல்லவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பஸ் புறப்பட்டவுடன் சடாரென வேகம் எடுப்பதால், அதிக டீசலும், இன்ஜினில் அதிக புகையும் உருவாகும். இதை தவிர்க்க டிரைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஆறு கிலோ மீட்டர் மைலேஜை விட அதிகமாகவே காட்டுகின்றனர். கலெக்ஷன் நிர்ணயிப் பதும், அலட்சியப்போக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே. மற்றபடி டிரைவர், கண்டக்டர்கள் டார்ச்சர் என கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். எனினும், பொதுமக்கள், பஸ் ஊழியர் களின் புகார்கள் குவிவது குறையவில்லை. என்ன செய்யப்போகிறது அரசு போக்குவரத்துக் கழகம்?

சிதம்பரம் கோயிலுக்கு வரும் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தர உள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிதம்பரம் நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கர்நாடக முதல்வர் எடிïரப்பா நாளை சிதம்பரம் வருகிறார். அங்குள்ள நடராஜர் கோயிலுக்கு சென்று அவர் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அவர் சிதம்பரம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘தமிழகத்திற்கு காவிரிநீர் தர மறுக்கும் எடியூரப்பா திரும்பி போ! இவண் தமிழர் உழவர் முன்னணி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை சிதம்பரத்திற்கு வரும் எடியூரப்பாவை கண்டித்து கறுப்பு கொடி காட்டவும் தமிழர் உழவர் முன்னணியினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து சிதம்பரம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ரூ. 10,000 கோடியில் என்எல்சி திட்டங்கள்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படுத்தி வருவதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் மழை உள்ளிட்ட பாதிப்புகளால் எல்.எல்.சி நிறுவனம் பாதிப்புக்குள்ளான நிலையிலும், பெரிய அளவில் நிறுவனத்தின் லாபம் பாதிக்கப்படவில்லை என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.


சென்ற நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய நிறுவனத்தின் நிகர லாபம் 821.09 கோடி ரூபாயாக இருந்தது என்றும், கடந்த நிதியாண்டில் பல புதிய சாதனைகளையும் படைத்ததாக அவர் கூறினார்.

கடந்த நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்ததால், பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் என்.எல்.சி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய முடியாமல் போனதாகவும், அதன்மூலம் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 354 கோடியே 91 லட்சம் ரூபாய் மொத்த வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

2008-09ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் பங்குதாரர்களுக்கு வழங்க என்.எல்.சி. இயக்குனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ரூ. 335 கோடியே 54 லட்சம் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாத காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வானிலை வழக்கமான ஒத்துழைப்பை அளிக்குபட்சத்தில், கடந்த ஆண்டைக்காட்டிலும் நடப்பாண்டில் என்எல்சி அதிக லாபத்தை ஈட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தைப் பொருத்தவரை நெய்வேலியில் 2ஆம் அனல்மின் நிலைய விரிவாக்கம், ராஜஸ்தான் மாநிலத்தின் பர்சிங்சார் சுரங்கத் திட்டம், அனல்மின் திட்டம், தூத்துக்குடி மின்திட்டம் போன்றவற்றால் குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அன்சாரி கூறினார்.

தமிழகத்தின் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டிற்கு 135 டன் பழுப்பு நிலக்கரி மற்றும் 1,600 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளில் என்எல்.சி ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தவிர உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒரிசா, குஜராத் மாநிலங்களிள் சுமார் 11 ஆயிரம் மெகாவட் மின் உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

பேட்டியின் போது என்.எல்.சி நிறுவனத்தின் இயக்குனர்கள் உடனிருந்தனர்.

அரசியல்..கட்சி..மன்னிப்பு!-விஜய் பரபரப்பு

நான் அரசியலுக்கு வருவதை எண்ணி அண்ணன் விஜய்காந்த் பயப்படுகிறார் என்று என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், விஜய்காந்தை அந்த செய்தி புண்படுத்தும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறினார். விஜய் தனிக்கட்சி துவங்குகிறார் என்று பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து சில வார இதழ்களுக்கும் அவர் பேட்டியளித்து வருகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில்தான் அவரது பதில்கள் அமைந்துள்ளன. இந் நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதையெண்ணி விஜய்காந்த் பயப்படுவதாக, விஜய்யின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகரன் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது விஜய்காந்த் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் அளித்துள்ள விளக்கம்: நான் அரசியலுக்கு வர விரும்புவது உண்மையே. அதற்கான ஆலோசனைகளும் நடந்தன. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. என்னுடைய ரசிகர்கள் என்மீது மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். என் அரசியல் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் சக்திக்கு மீறிய உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். இந்த நற்பணி மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி, இன்னும் பெரிய அளவில் ஜனங்களுக்கு உதவணும் என்பது இவர்களின் விருப்பம். அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையும், நடைமுறை நியாயமும் எனக்குப் புரிகிறது. என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்டு. நிச்சயம் அரசியலுக்கு வருவேன். இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..! சமீபத்தில் என் தந்தை அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய அரசியல் பிரவேசத்தை நினைத்து விஜய்காந்த் பயப்படுகிறார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. நிச்சயம் இது உண்மையாக இருக்காது. காரணம் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர் விஜய்காந்த். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல வேறு யாருக்கும் நான் போட்டியாகவே, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலோ இருக்கமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன்... என்றார். வரும் 22ம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறாராம்.

ஜெயலலிதா மென்பொருள் நிபுணரானால்...!!!

மேனேஜர்: இந்த ப்ராஜெக்டை நாம ஜாவாலே பண்ணப் போறோம்.

ஜெ: ஜமாய்ச்சிபுடலாம். பிரச்சினையே இல்லை.

மே: கொஞ்ச நாள் முன்னாடி இதையே சொன்னதுக்கு - எனக்கு ஜாவா தெரியாது, அதனால் இதை செய்ய முடியாதுன்னீங்களே?

ஜெ: அது போன மாசம்.

மே: இப்போ எப்படி தெரிஞ்சது உங்களுக்கு ஜாவா?

ஜெ: நேத்து என் நண்பர் ரவி ஜாவா சிடி கொண்டு வந்து காட்டினாரு. அதை ஒரு அரை மணி நேரம் பாத்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். இவ்ளோ நாளா ஜாவா தெரிஞ்சிக்காமே இருந்தது தப்புதான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க.

மே: சரி. எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சி தர்றேன்னு க்ளையண்டுக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பினீங்க.

ஜெ: அந்த மின்னஞ்சலை நான் அனுப்பலை. என் கணிணியிலேந்து வேறே யாரோ அனுப்பிட்டாங்க.

மே: நேத்திக்கு கேட்டபோது, நாந்தான் அனுப்பினேன்னு சொன்னீங்களே?

ஜெ: நான் அப்படி சொல்லவே இல்லை. உங்களுக்கு "செலக்டிவ் அம்னீஷியா" இருக்கும்னு நினைக்கறேன்.

மே: சரி விடுங்க. இந்த வேலையை சரியா செஞ்சி முடிப்பீங்களா? ராத்திரியெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஜெ: எனக்கு குடும்பம் ஒண்ணும் இல்லை. அதனால் அலுவலகமே கதின்னு கிடப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க.

மே: உங்க குழுவிலே இருக்கறவங்க கிட்டேயும் நிறைய வேலை வாங்க வேண்டியிருக்கும்.

ஜெ: அது என் பிரச்சினை. பெண்டு நிமித்தி வேலை வாங்கறேன்.

மே: அவங்க வேலை செய்யலேன்னா...

ஜெ: ராவோட ராவா எல்லாரையும் வேலையை விட்டு துரத்திடறேன்.

மே: சரி. உங்களையே இந்த ப்ராஜெக்ட் மேனேஜரா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கறோம்.

ஜெ: ப்ராஜெக்ட் என் கைக்கு வந்துடுச்சு இல்லே. இனிமே நான் சொல்றதுதான் இங்கே சட்டம். நீங்க கொஞ்சம் அப்படி சைட்லே உக்காருங்க.

மே: அப்படின்னா...

ஜெ: நாளையிலேந்து நான் மூணு மாசம் லீவ்லே போறேன். திரும்ப வந்தப்பிறகுதான் வேலை ஆரம்பிக்கறோம்.

மே: எதுக்கு இப்ப திடீர்னு லீவ்?

ஜெ: நான் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டேன்னா தமிழ்நாடு, கேரளா இங்கேயிருக்கற கோயில்கள்லே வந்து தரிசனம் பண்றதா வேண்டிக்கிட்டிருந்தேன். அதுக்கு ஒரு மாசம். அப்புறம் ஆந்திராலே போய் ஓய்வு எடுத்துக்கறதுக்கு ரெண்டு மாசம். மொத்தம் மூணு மாசம்... வர்ட்டா... பை......

சப்பாத்தி மாவும், ஜாவா மென்பொருளாளரும்...

நேத்து சாயந்திரம், வழக்கம் போல போற உணவகத்துக்குப் போய், வழக்கம் போல சாப்பிடுற தோசைய, வழக்கம் போல பிச்சு பிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது, காதுல விழுந்த டயலாக் இது.. மென்பொருளாளருக்கும் (மெ.பொ), அவருடைய நண்பருக்கும்(மெ.பொ.ந), சர்வருக்கும்(சர்) இடையே நடந்த உரையாடல்...

மெ.பொ: சாப்ட என்னண்ணா இருக்கு?

[சர்வர், சப்பாத்தி, தோசைன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே போட ஆரம்பிக்கிறாரு. உடனே மென்பொருளாளனின் நண்பன் குறுக்கிட்டு...]

மெ.பொ.ந: ண்ணா..ண்னா.. நிப்பாட்டுங்க.. இவன் அவ்ளத்தயும் சும்மா கேட்டுட்டு, கடைசியில ரெண்டு சப்பாத்தியோ, தோசையோதான் கேக்கப் போறான். நீங்க அதயே கொண்டு வாங்க.

மெ.பொ: டேய்... சப்பாத்திக்கும், தோசைக்கும் என்னடா பெரிய வித்தியாசம்.. மாவுல கொஞ்சமா தண்ணிய ஊத்தி, பிசைஞ்சு, சுட்டு சப்பாத்தின்னு குருமாவோட கொண்டு வந்து குடுக்குறாங்க.. அதுவே மாவுல கொஞ்சம் தண்ணி அதிகமாயிடுச்சுன்னா, இன்னும் கொஞ்சம் தண்ணிய ஊத்தி, சுட்டு, தோசைன்னு சொல்லி, சட்னியோட கொண்டு வந்து குடுக்குறாய்ங்க... அவ்ளவுதாண்டா!! (எவ்வளவு பெரிய உண்மைய சொல்லிட்டாரு; சரி, இத எதுக்கு இப்ப சொன்னான்!?!

மெ.பொ.ந: !!!!!!!!

சர் : மாவு ஒரே மாவுன்னாலும், செய்றதுல வித்தியாசம் இருக்குல்ல... இப்ப கம்ப்யூட்டர் கம்பெனிகள எடுத்துக்ககுங்க.. ஒரே மாதிரி டி.வி பொட்டிதான் இருக்கு.. ஒரே கீபோர்டுதான்.. எல்லாரும் ஒரே மதிரிதான் தட்டிக்கிட்டு இருக்காங்க... ஆனா, அப்புறம் ஏன் சிலருக்கு அம்பதாயிரமும், சிலருக்கு பத்தாயிரமும் சம்பளம் குடுக்குறாங்க!?

மெ.பொ, மெ.பொ.ந: !!??!!??!

சர்: இதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல..

மெ.பொ.ந: ண்ணா.. நீங்க என்ன வேணும்னாலும் போய் எடுத்துட்டு வாங்கண்ணா.. பில்ல வேணும்னாலும் கூட இப்பவே எடுத்துட்டு வாங்க.. பசிக்குது!!

[ஹி.ஹி.ஹி. மென்பொருள் துறையப் பத்தி நெறய பேரு இப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க..]

கமலை இயக்க விரும்பும் ஹாலிவுட் இயக்குனர்


நாகேந்திர ஹர்‌ரி. வெளிநாட்டில் வாழும் இந்தியர். இவர் இயக்கிய முதல் படமே சர்வதேச அளவில் கவனத்தை கவர்ந்தது. வேர் ஆர் யூ சோஃபியா என்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படமொன்றை இயக்குகிறார் ஹர்‌ரி.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஜானி டெப், லியோனார்டோ டி காப்‌ரியோ, ரஸல் குரோ ஆகியோ‌ரில் ஒருவர் ஹர்‌ரியின் புதிய படத்தில் நடிக்கிறார்கள். அதிகமும் ஜானி டெப் நடிப்பார் என்று தெ‌ரிகிறது.

இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க விரும்புகிறார் ஹர்‌ரி. அதில் நடிக்க அவரது சாய்ஸ் கமல். கமல் நடிக்காவிட்டால் அமீர்கான்.

உன்னைப்போல் ஒருவன் படத்துக்குப் பிறகு மலையாளம், ஆங்கிலம், ஐப்பான் ஆகிய மொழிகளில் தயாராகும் 19 ஸ்டெப்ஸ் படத்தில் கமல் நடிக்கிறார். ஹர்‌ரியின் ஆசைக்கு செவி சாய்ப்பாரா என்பது இந்தப் படத்துக்குப் பிறகே தெ‌ரியவரும்.

ஈரோடு வனப்பகுதியில் வற‌‌ண்டு போன அருவிகள்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அடுத்து திம்பம், ஆசனூர்,அந்தியூர், தாளவாடி, கேர்மாளம் என கர்நாடாக மாநிலம் எல்லை வரையில் முழுவதுமாக வனப்பகுதியால் சூழப்பட்டதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனப்பகுதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, புலி,சிறுத்தை, கரடி, செந்நாய், மான் என அனைத்து விதமான விலங்குகளும் அதிகமாக வசிக்கின்றது.

இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பெரும்பான்மையான பகுதிகளை அதாவது தலமலை, கடம்பூர், பவானிசாகர் வனப்பகுதிகளை தமிழக அரசு வனவிலங்குகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன்பின்னர் வனத்துறையினர் ரோந்துபணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி எப்போதும் பார்ப்பதற்கு பசுமையாகவும் வனப்பகுதிக்குள் இருக்கும் ஓடைகளில் எப்போதும் சல, சல என அள்ளி இறைத்த வெள்ளிகாசுகளாய் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை கண்குளிர ரசித்து செல்வது வழக்கம். மேலும் தென்றல் காற்று சிலு, சிலு வென்று மேனியை உரசி செல்வது திம்பம் மலைப்பகுதியின் சிறப்பாகும்.

கடல்மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட திம்பம் மலைப்பகுதியை சென்றடைய பண்ணாரியில் இருந்து பத்து கி.மீ. தூரம் இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும். நடப்பு ஆண்டில் போதிய மழை இல்லாத காரணத்தால் சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் காய்ந்துபோகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன்பிறகு திடீரென சில தினங்கள் மழை பெய்ததால் வறண்ட வனப்பகுதி சற்று வளம் பெற்றது. ஆனால் வன ஓடையில் தண்ணீர் செல்லும் அளவு மழை இல்லாததால் வனப்பகுதிக்குள் இருக்கும் ஓடைகள், அருவிகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் வழக்கமாக இருக்கும் குளிர்ந்த பனிகாற்று இப்பகுதியில் இல்லாததாலும் வழியில் உள் அருவிகளும் வறண்டு போனதால் இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மகிழ்ச்சி இழந்தே காணப்படுகின்றனர்.

அமீ‌‌ரின் கிளிநொச்சி, சீமானின் கோபம்

ஈழம் என்றதும் வீரம்வரும் சில‌ரில் அமீரும் ஒருவர். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசி சிறை சென்ற பின்னும் அவரது சீற்றம் குறையவில்லை.

அமீர் சினிமா கலைஞனல்லவா... ஈழத்தின் சோகத்தை செல்லுலாயிடில் செதுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். ஈழத்தைப் பற்றி படமெடுப்பேன் என்று மேடையிலேயே முழங்கியிருக்கிறார். அது வெறும் பேச்சல்ல.

யோகி படத்தின் இறுதிகட்ட பணியில் இருப்பவர் ஈழம் குறித்த படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறாராம். படத்துக்கு கிளிநொச்சி என்று பெயர் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் த‌ெ‌ரிவிக்கின்றன.

அமீரைப் போலவே ஈழப் பிரச்சனையை பிரதிபலிக்கும் படத்தை எடுக்கவுள்ளார் சீமான். அ‌ஜித் நடிக்கும் படத்துக்குமுன் இப்படம் தயாராகவுள்ளது. அனேகமாக படத்துக்கு கோபம் என பெய‌‌ரிடப்படலாம் என தெ‌ரிகிறது.

என்ன செய்கிறார் எந்திரன்?

ர‌ஜினி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் எந்திரன். இயக்கம் ஷங்கர், ஜோடி உலக அழகி ஐஸ்வர்யா ராய் என எல்லாமே ஏ கிளாஸ். பாபாவுக்கு பாபா பக்கம் என்று தனி பத்தி ஒதுக்கிய பத்தி‌ரிகைகள்கூட எந்திரன் பற்றி எழுத தயங்குகின்றன. ஏனிந்த பாராமுகம்?

படத்தின் தயா‌ரிப்பு கை மாறியதால்தான் இந்த சுணக்கம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். படத்தைப் பற்றி நாம் ஏதாவது எழுதப்போய் அது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிட்டால் வீணாக கரண்டை கக்கத்தில் விட்டது போலாகிவிடுமே என அனைவருக்கும் சின்ன உதறல்.

தவிர சமீபத்தில் நடந்த அனைத்து சுப கா‌ரியங்களிலும் முதலாளாக கலந்து கொண்டார் ர‌ஜினி. படம் நடிக்கும்போது இப்படி பப்ளிக் த‌ரிசனம் தருகிறவர் அல்லவே சூப்பர் ஸ்டார் என இன்டஸ்ட‌‌ரியிலும் புருவம் உயர்த்துகிறார்கள்.

நாம் விசா‌ரித்ததில் பிஸியாகவே இருக்கிறார் ர‌ஜினி. கடந்த வாரத்தில் மாயாஜாலில் எந்திரன் படத்தின் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கியிருக்கிறார். இதற்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. இங்கு நடந்த ஷூட்டிங்கில் ர‌ஜினியும் கலந்து கொண்டிருக்கிறார்.

விரைவில் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக எந்திரன் யூனிட் வெளியூர் கிளம்புகிறது. படம் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறாராம் ர‌ஜினி. அதுதான் இந்த மவுனம். புயலுக்குமுன் அமைதி?

தல தவிர்க்கும் நடிகை

ஹீரோயின் விஷயத்தில் மூக்கை நுழைக்காத சில நடிகர்களில் தல-யும் ஒருவர். ஆனால் ஒருவரை மட்டும் ஹீரோயினாக போட வேண்டாம் என இயக்குனர்களிடம் அன்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.

பூம்பாவாய் ஆடிப்பாடிய அந்த ஆம்ப‌ல், கறுப்பு காமெடியின் புராண படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது தல-க்குப் பிடிக்கவில்லை. காரணம் கறுப்பு காமெடிக்கும் தல-க்கும் ஆகாது.

அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியவரை எப்படி நமது படத்தில் ஹீரோயினாக்குவது என்பதுதான் இந்த நிபந்தனைக்கு காரணமாம். ஈகோ இல்லாத தலை மண்ணில் ஏது?

சிக்கலில் ஜென்டில்மேன்

முரட்டு மீசைக்காரரான அந்த ஜென்டில்மேன் இருந்த பணத்தையெல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை தொடங்கினார்.

லவ்வுக்கு டெத் இல்லை என்ற அந்தப் படம் பாதியில் நிற்கிறது.

இது ஒருபுறமிருக்க அவரது மகன் மலையாள பெண் குட்டி ஒருவ‌ரிடம் மனதை பறி கொடுத்ததோடு அவருடன் குடும்பமும் நடத்தி வருகிறாராம்.

இரண்டு பிரச்சனைகளுக்கு நடுவில் மத்தளம் மாதி‌ரி மாட்டிக் கொண்டிருக்கிறார் மிஸ்டர் ஜென்டில்மேன்.

முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்

தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்கு வந்த இயக்குனர்களில் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே. இவரது முதல் படம் க‌ஜினியே சூப்பர் ஹிட்டானதுடன் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது.

அடுத்து ஷாருக்கானுக்காக கதை தயார் செய்திருக்கிறார் முருகதாஸ். இவர் தமிழில் இயக்கிய ரமணா படத்தை இந்திக்கு ஏற்றபடி மாற்றி அதில் ஷாருக்கை நடிக்க வைப்பது என்றுதான் முருகதாஸ் திட்டமிட்டிருந்தார். ஷாருக் இதற்கு நோ சொன்னதால் புதிய கதையொன்றை தயார் செய்திருக்கிறார்.

சென்ற வாரம் இந்தப் புதிய கதையை ஷாருக்கானிடம் கூறினார் முருகதாஸ். கதை ஷாருக்கை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. தற்போது நடித்துவரும் கரண் ஜோஹ‌ரின் மை நேம் இஸ் கான் படம் முடிந்ததும் முருகதாஸின் படத்தில் நடிப்பதாக உறுதியளித்திருக்கிறார் ஷாருக்.

க‌ஜினியின் 250 கோடி சாதனையை இந்தப் படம் முறியடிக்க வேண்டும் என்ற டார்கெட்டில் படத்தின் ஸ்கி‌ரிப்டை உருவாக்கி வருகிறார் முருகதாஸ்.

எது எனக்கழகு ?

எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.

சொல்லாத சொல்

எதிர்வீட்டு்க குழந்தை
உன்னைப்போலவே முறைக்கிறது
கைபேசிக்கு தலைசாய்த்து சாலையில்
எதிர்படுபவனின் சிகை
உன்னைப்போலிருக்கிறது
வாடியபூக்கள் சில வலுக்கட்டாயமாய்
உன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன
கடன் அட்டைக்காக அழைப்பவன் கூட
உன் குரலை ஒத்திருக்கிறான்..

சாலையில், வீட்டில், திரையரங்கில்,
ஆற்றங்கரையில், பேருந்தில் என
நாம் ஒன்றாய் இருந்த அத்தனை
இடங்களிலும்
உன்னிடம் யாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு பதில் கிளம்புகையிலாவது
சொல்லியிருக்கலாம்
”என்னை மன்னித்து விடடா” என்று..

ஹாலிவுட்டில் ர‌ஜினி ரோபோ

கேட்கிற செய்தியெல்லாம் கிர்ரடிப்பது போலவே இருக்கிறது. ஏழு நாள் தாடியும் எளிமையான உடையுமாக இமயமலைக்கு போகும் கெட்டப்பில் ர‌ஜினி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் எந்திரன் பட வேலைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் எப்படி? இந்திய சினிமாவில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஹைடெக் பிரமாண்டத்தில்.

விஞ்ஞானி ர‌ஜினி அவரைப் போலவே ரோபோ ஒன்றை உருவாக்குவதும், ஒரு கட்டத்தில் உருவாக்கிய ர‌ஜினிக்கே அந்த ரோபோ கட்டுப்படாமல் காட்டுத் தர்பார் நடத்துவதும், ர‌ஜினி அதனை கட்டுக்குள் கொண்டு வருவதும்தான் எந்திரன் படத்தின் கதை.

படத்தின் முதுகெலும்பே ர‌ஜினி அவரைப் போலவே உருவாக்கும் இந்த ரோபோதான். அதனை ஹாலிவுட் நிறுவனமான ஸ்டேன் வின்ஸ்டன் அச்சு அசலாக ர‌ஜினி போலவே உருவாக்கியிருக்கிறது. டெர்மினேட்டர் வ‌ரிசைப் படங்களில் வரும் ரோபோக்களை வடிவமைத்ததும, உருவாக்கியதும் இந்த நிறுவனம்தான். இவர்கள் பணிபு‌ரிந்த முதல் இந்தியப் படம் என்ற பெருமை எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த ரோபோ உருவாக்கத்துக்காக ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார் ர‌ஜினி. அங்கு அவரது உடலளவுகள் துல்லியமாக எடுக்கப்பட்டு அவரைப் போலவே ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டுடியோ நிபுணர்கள்.

அடுத்த வருட இறுதியில் எந்திரன் திரைக்கு வந்துவிடும் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பொ‌றியாளரை மண‌ந்தா‌ர் நடிகை ஸ்ரீதேவி

நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதியரின் மகளு‌ம் நடிகையுமான ஸ்ரீதே‌வி- ராகு‌ல் திருமண‌ம் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது. நடிக‌ர்க‌ள் கம‌ல்ஹாச‌ன் உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் மணம‌‌க்களை வா‌ழ்‌த்‌தின‌ர்.

நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதியரின் கடைசி மகள் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பொ‌றியாள‌ர் ராகுலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி-ராகுல் திருமணம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீலாடு வெங்கடாசலபதி பேலசில் இ‌ன்று காலை நடந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் கம‌ல்ஹாசன், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் ஆகியோர் நேரில் மணம‌க்களை வாழ்த்தின‌ர்.

மேலு‌ம் தொழில் அதிபர் பழனி பெரியசாமி, ராம்குமார், நடராஜன், நடிகர்கள் தியாகு, சின்னிஜெயந்த், உதயா, வையாபுரி, சந்திரசேகர், நடிகைகள் மீனா, பூர்ணிமா, ஜெயந்தி, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஸ்வரி, தயாரிப்பாளர் அமுதாதுரைராஜ் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தின‌ர்.

இன்று நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

நடிகர் சங்க‌த் தலைவ‌ர் பத‌வி‌க்கு சரத்குமார் ‌மீ‌ண்டு‌ம் போ‌ட்டி

நடிகர் சங்கத்தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இருவரும் நடிகர் சங்கத்தில் தேர்தல் அதிகாரி கவிஞர் பிறைசூடன் முன்னிலையில் இ‌ன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.


நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் ஜூலை 12ஆம தேதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.

நடிகர் சங்கத்தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இருவரும் இன்று காலை நடிகர் சங்கத்தில் தேர்தல் அதிகாரி கவிஞர் பிறைசூடன் முன்னிலையில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட விஜயகுமார், மனோரமாவு‌ம், பொருளாளர் பதவிக்கு போட்டியிட வாகை சந்திரசேகரும் வேட்பு மனு தாக்கல் செய்தன‌ர்.

நடிகர் சங்க கமிட்டி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சத்யராஜ், முரளி, எஸ்.வி. சேகர், சின்னி ஜெயந்த், குயிலி, மும்தாஜ், பசி சத்யா, அலெக்ஸ், சத்யபிரியா, கே.என். காளை, மயில்சாமி, கே.ஆர். செல்வ ராஜ், எம். ராஜேந்திரன், ஆர்.வீரமணி, பிரவீன்குமார், சவுண்டப்பன், இசையரசன், ஜெயமணி, சி.ஐ.டி. சகுந்தலா, ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது. 26ஆ‌ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நடிகர் சங்கத்தில் மொத்தம் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஓட்டுரிமை உள்ளவர்கள் 2 ஆயிரத்து 636 பேர்.

ஜூலையில் பிலிம்பேர் விருது விழா

தேசிய விருதுக்கு அடுத்து இந்தியாவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் விருது, பிலிம்ஃபேர் பத்தி‌ரிகை வழங்கும் பிலிம்ஃபேர் விருதுகள். முதலில் இந்தி சினிமாவுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. சில வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டுக்கான விருதுகள் எங்கு எப்போது வழங்கப்படுகின்றன என்பது குறித்து நேற்று நடந்த பத்தி‌ரிகையார்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. விழா குறித்து பேசிய பிலிமஃபேர் பத்தி‌ரிகையின் ஆசி‌ரியர் ‌ஜித்தேஷ் பிள்ளை, ஜூலை 31 ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான விருதுகள் ஹைதராபாத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் என்றார்.

பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். சென்ற ஆண்டு சென்னையில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்தமுறை ஹைதராபாத். இந்த சுழற்சி முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று ‌ஜித்தேஷ் பிள்ளை குறிப்பிட்டார். இந்த அறிவிப்பின்போது நடிகை சினேகாவும் உடனிருந்தார்.

அனைவருக்கும் உறுதுணையாக இருப்பேன் : மு.க.‌ஸ்டா‌லி‌ன்

எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறுபாடு காட்டாமல் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று‌ம் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உறுதுணையாக இருப்பேன் எ‌ன்று‌ம் துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

சட்ட‌ப்பேரவை இன்று காலை கூடியதும் அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன், மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல் என்ற திருக்குறளை வாசித்து அதற்கான விளக்கம் அளித்தார்.

மகன் தந்தைக்கு செய்யக்கூடிய உதவி இவருடைய தந்தை இவரைப்பெற என்ன தவம் செய்தாரோ என்ற விளக்கத்தை கூறினார். உடனே உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். இதை‌த் தொட‌ர்‌ந்து உறு‌ப்‌பின‌ர்க‌ள் மு.க.‌ஸ்டா‌லினை பாரா‌ட்டி பே‌சின‌ர்.

பின்னர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், தமிழகத்தின் துணை முதலமைச்சராக முதலமைச்சர் கருணா‌நி‌தி என்னை நியமித்து இருக்கிறார். அதற்கு வாழ்த்து தெரிவித்த அனை‌த்து உறு‌ப்‌பின‌ர்களு‌‌க்கு‌ம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கட்சியினரிடம் எப்போதும் பதவியை பதவியாக நினைக்க கூடாது. பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும் என்று கூறுவார். அவர் சொல்லிக்கொடுத்த பாடத்தின்படி பொறுப்பாக கருதி பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக எப்படி நான் பணியாற்றினேனோ, அப்படியே துணை முதலமைச்சர் பொறுப்பிலும் பணியாற்றுவேன்.

28.7.2008 அன்று ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகனங்களை வழங்கும் விழாவில் முதலமைச்சர் என்னை வாழ்த்தி சொன்ன கருத்து இன்று நினைவுக்கு வருகிறது. உள்ளாட்சித்துறையில் எதிர்பாராத பல பணிகள் நடந்து இருக்கிறது.

முதலமைச்சர் பணியை விட்டு விட்டு உள்ளாட்சித்துறை அமைச்சராகி விடலாமா என்று பாராட்டினார். அதை தனிப்பட்ட பாராட்டாக கருதாமல் ஒட்டுமொத்த உள்ளாட்சிக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

முதலமை‌ச்ச‌ர் உடல் நலிவுற்ற வேலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து இடைவிடாமல் உழைத்து வருகிறார். அதை மனதில் கொண்டு உழைப்பேன். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறுபாடு காட்டாமல் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உறுதுணையாக இருப்பேன். முதலமை‌ச்சருக்கும் உங்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவேன் எ‌ன்று மு.க. ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

ஜூலை 8ஆ‌ம் தே‌‌தி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜராக வைகோவுக்கு உ‌த்தரவு

அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 8ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஆஜராக அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் முதலமைச்சர் கருணாநிதி சார்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

செ‌ன்னை தேனாம்பேட்டையில் உள்ள இய‌க்குன‌ர் பாரதிராஜாவின் அலுவலகம், முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின்பேரில் தாக்கப்பட்டதாக சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் வைகோ பேசியதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று மாலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு சேதுமாதவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நேரில் ஆஜராகி வழக்கின் தன்மையை விளக்கி பிரமாண வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியில் வந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், முதலமைச்சர் கருணாநிதி இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் ஆவார். எனக்கு அரசியல் முகவரி கொடுத்த அந்த தலைவரை பற்றி அவதூறு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

இதற்காக மன்னிப்பு கேட்கும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் வைகோ மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனவேதான் அவர்மீது இந்த அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு ஏற்றுக்கொண்டுள்ளார். வைகோவை அடுத்த மாத‌ம் ஜூலை 8ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார் எ‌ன்று ஆற்காடு வீராசாமி கூறினார்.

அ.‌இ.‌அ.‌தி.மு.க.வு‌ட‌ன் இ‌னி எ‌ந்த தொட‌ர்பு‌ம் ‌கிடையாது : எ‌ஸ்.‌வி.சேக‌ர் ‌திடீ‌‌ர் அ‌றி‌வி‌ப்பு

அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு‌ம் என‌க்கு‌ம் இ‌னி எ‌ந்த‌வித தொட‌‌ர்பு‌ம் ‌‌கிடையாது எ‌ன்று ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌வி.சேக‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை வளாக‌த்‌தி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், அ.இ.அ.தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கலைராஜனிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்ததை அடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவை‌த் தலைவ‌ரிட‌ம் கேட்டேன். அதனை ஏற்று எனது வீட்டில் பாதுகாப்புக்கு காவலர்களை போட்டுள்ளனர்.

இன்று சட்ட‌ப்பேரவை‌க்கு வரும்போது ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் என்னுடன் பாதுகாப்புக்கு வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். தவறானவர்களிடம் இருந்து வந்த தவறான வார்த்தைகளால் தான் இந்த பாதுகாப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நான் கடவுளை நம்புகிறவன். நான் யாருக்கும் எதிரி அல்ல. அதேபோல நான் யாரையும் எதிரியாக கருதவில்லை. இப்போதும் நான் அ.இ.அ.தி.மு.க.வில் தான் உள்ளேன். கட்சியை விட்டு விலகும் எண்ணம் இதுவரை எனக்கு இல்லை. ஆனால் கட்சியின் கூட்டங்களுக்கு எனக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படுவதில்லை.

இது தொடர்பாக கட்சி தலைமைக்கு இதுவரை 16 கடிதங்களை எழுதியிருக்கிறேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் கட்சித் தலைமையிடம் இருந்து கிடைக்கவில்லை. அ.இ.அ.தி.மு.க தலைமைக்கு என்னிடம் ஏன் மனக்கசப்பு என்று தெரியவில்லை. ஆனால் என்மீது மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. இது கண்ணாடியில் விழுந்த விரிசல் போன்றது. இனி ஒட்டாது. அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு‌ம் என‌க்கு‌ம் இ‌னி எ‌ந்த‌வித தொட‌‌ர்பு‌ம் ‌‌கிடையாது.

அடிக்கடி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் சட்ட‌ப்பேரவைக்கு வருகிறேன். இன்றும் கேள்வி நேரத்தில் பேசினேன்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தவே அனைத்திந்திய ஆரிய முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குமாறு எனது நண்பர்களும், ஆதரவாளர்களும் என்னை வலியுறுத்தி வருகின்றனர். அது என் பரிசீலனையில் உள்ளது.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். அதனை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். அப்படி அவர் நிறைவேற்றினால் வரும் சட்டமன்ற தேர்தலில் பிராமணர்கள் தி.மு.க கூட்டணிக்குத் தான் வாக்களிப்பார்கள் எ‌ன்று எ‌ஸ்.‌வி.சேக‌ர் கூ‌றினா‌ர்.

ஒரேவரியில் காதல்

காதல்
ஒற்றை வரியில்
சொல்ல முடியாத விளக்கம்.

காதல்
விளக்கம் சொல்ல முடியாத
விடயம்

காதல்
ஒரு பெயருக்குள்
இரண்டு உயிர்கள்.

காதல்
ஒரே உறவுக்குள்
உலகத்தை உணர்தல்.

காதல்
பூமிக்கு கிடைத்த வரம்.
காதல்
பூக்கள் தருகின்ற சுகம்.

காதல்
இருக்கிற உயிரிலேயே
இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல்
இன்னொருவரால் உணரவும்
நிறைவுசெய்யவும் முடியாத உறவு

காதல்
கேள்விகளுக்காய்
காத்திருக்கும் பதில்.

காதல்
இன்னும் இன்னும் என்கிற
இரண்டு உயிர்களின்
ஒரு புள்ளியிலான தேடல்.

காதல்
எவ்வளவு சொன்னாலும்
இன்னமும் சொல்லவும் கேட்கவும்
விரும்புகிற உணர்வு…

சத்யரா‌ஜ் படத்தில் சுந்தர் சி?

ரீமிக்ஸ் பீவருடன் ‌ரீரிமேக் பீவரும் தமிழ் சினிமாவை அலைக்கழிக்கிறது. மூணு மாசத்துக்கு ஒரு படம் என கணக்கு வைத்திருக்கும் இயக்குனர்களே இந்த ‌‌ரீமேக் பீவ‌ரின் காரணிகள்.

ராஜாதிராஜா படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் ர‌ஜினி, பிரபு நடித்த குரு சிஷ்யன் படத்தை ‌‌ரீமேக் செய்கிறார் என ஸ்டுடியோ வட்டாரத்தில் பலமான பேச்சு.

குருவாக சத்யராஜும், சிஷ்யனாக சுந்தர் சி-யும் நடிக்கிறார்கள், இருவ‌ரிடமும் இது குறித்து ஷக்தி சிதம்பரம் பேசிவிட்டார் என்றும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

சுந்தர் சி, முரட்டுக்காளை, ஐந்தாம்படை, வாடா, வேட்டு என நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் முரட்டுக்காளை ர‌ஜினி படத்தின் ‌‌ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

‌ஸ்டா‌லினை வா‌ழ்‌‌த்‌தி எஸ்.வி.சேகர் பேச்சு : அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெ‌ளிநட‌ப்பு

துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லினை அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌‌வி.சே‌க‌ர் வா‌ழ்‌த்‌தி பே‌சியத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

தமிழக சட்ட‌ப்பேரவை கூட்ட‌ம் இன்று காலை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து நிதி அமைச்சர் அன்பழகனை பேசும்படி அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் அழைப்பு விடுத்தார்.

அ‌ப்போது அ.இ.அ.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று பாராளுமன்ற தேர்த‌‌லி‌ல் முறைகேடு நட‌ந்தது ப‌ற்‌‌றி பேசுவத‌ற்கு அனுமதி கேட்டனர்.

அதற்கு அவை‌த் தலைவ‌ர், அமைச்சர் அன்பழகன் பேசிய பிறகு பேச அனுமதி வழங்கப்படும் என்றார். இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து அ.இ.அ.தி.மு.க.வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் இதை ஏற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

ஆனா‌ல் அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யவில்லை. இதையடுத்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன், பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி.சேகர் வாழ்த்தி பேசுவார் என்று அவை‌த் தலைவ‌ர் அறிவித்தார். உடனே அவர் எழுந்து நின்று எனது நண்பர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர். அவரை வாழ்த்துகிறேன் என்றார்.

அ‌ப்போது அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் மீண்டும் அவைக்குள் வந்து எஸ்.வி.சேகருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அ‌ப்போது பே‌சிய அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் செ‌ங்கோ‌ட்டைய‌ன், கொறடா உ‌த்தரவு இ‌ன்‌றி எ‌ஸ்.‌வி.சேக‌‌ர் பேச அனும‌தி‌க்க கூடாது எ‌ன்றா‌ர்.

‌தொட‌ர்‌ந்து எ‌ஸ்.‌வி.சேக‌ர் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்ததா‌ல் அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌‌ர்க‌ள் அம‌‌ளி‌ல் ஈடுப‌ட்டு 2வது முறையாக வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

ஏற்காடு கோடை விழா ஜூன் 5ல் தொடக்கம்

சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை‌க் கவரு‌ம் வகை‌யி‌ல் ஏற்காடு கோடை விழா ஜூன் 5ம் தேதி தொடங்‌கி மூன்று நாட்கள் நடைபெற உ‌ள்ளது.

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா மே மாதம் 3 அல்லது 4 வது வாரத்தில் நடக்கும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணிகளில் மூழ்கியது. இதனால் நடப்பாண்டில் கோடை விழா நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

ஏற்காட்டின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட ஏற்காடு ஏரியில் தூர் வாரும் பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. கோடை விழாவையட்டி நடக்கும் மலர் கண்காட்சிக்கான மலர்களை தயார் செய்யும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் கோடை விழா ஜூன் 5ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சந்திரகுமார் நேற்று அளித்த பே‌ட்டி‌யி‌ல், மக்களவை தேர்தல் பணியால் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது சந்தேகமாக இருந்தது. இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக ஊட்டி கோடை விழாவும் இந்த ஆண்டு தாமதமாக நடக்கிறது. கோடை விழா தாமதமாக தொடங்கினாலும் கடந்த ஆண்டு விழாவில் இடம் பெற்ற அத்தனை அம்சங்களும், இந்த ஆண்டும் இருக்கும் எ‌ன்று சந்திரகுமார் கூறினார்.

விஜய்க்கு போட்டியாக அ‌ஜித்?

வருகிற 22 ஆம் தேதி விஜய்க்கு பிறந்தநாள். இந்த பிறந்த நாளுக்கு புதிய அரசியல் கட்சியை துவக்கி அரசியல் பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும். மகனைவிட தந்தைக்குதான் கட்சி தொடங்குவதில் அதிக ஆர்வம்.

மன்ற நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை கூட்டங்கள் என்று விஜய் வட்டாரமே பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. பொங்கப் பானையில் பன்னீர் தெ‌ளித்த மாதி‌ரி சில நாட்களாக இந்த உற்சாகம் மிஸ்ஸிங். நிலைமை ச‌ரியில்லாததால் கட்சி ஆரம்பிப்பதை தள்ளி போட்டிருக்கிறார் தளபதி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதற்கு நேர்மாறாக உற்சாகத்தில் இருக்கிறார்கள் அ‌ஜித் ரசிகர்கள்.

தமிழ்நாடு முழுவதும் அ‌ஜித்துக்கு முப்பதாயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன. இவற்றின் முழுமையான விவரங்களை சேக‌ரித்து வருகிறார் அ‌ஜித். மேலும், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றவும் முடிவு செய்திருக்கிறார். மன்ற விஷயங்களில் அக்கறை காட்டாத தல-யின் இந்த திடீர் தீவிரத்தால், அடுத்து அரசியல் கட்சிதான் என்று மகிழ்ந்து போயிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

கட்சி ஆசையில் இருப்பவர்கள் கையில் கடைசியில் கமண்டலத்தை கொடுக்கப் போறாங்க... உஷார்.

எல்.ஐ.சி ஹவுசிங் பங்கு விற்பனை

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட், எல்.ஐ.சி எம்எப் டிரஸ்ட் நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதாக முடிவெடுத்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலமாக ரூ.138 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கு எல்.ஐ.சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் இருந்து யூனிட்டுகளை வெளியிட்டு திரட்டப்படும் நிதியை நிர்வகிக்கும் நிறுவனமான எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தில் மொத்தம் 3500 பங்குகள் உள்ளன.இதில் 1730 பங்குகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

இதே போல் எல்.ஐ.சி மியூச்சுவல் பண்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் 3600 பங்குகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் கேர் ஹோம்ஸ். இதற்கு எல்.ஐ.சி மியூச்சுவல் பண்ட் டிரஸ்ட்டில் 1200 பங்குகள் உள்ளன. இதை முழுவதுமாக விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

ஜி.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விற்பனை


இதே போல் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் (ஜி.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் ), எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட், எல்.ஐ.சி எம்எப் டிரஸ்ட் நிறுவனங்களில் உள்ள எல்லா பங்குகளையும் ரூ.89 கோடிக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன.

ஜி.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தின் 11.2 விழுக்காடு பங்குகளையும், எல்.ஐ.சி எம்எப் டிரஸ்ட் நிறுவனத்தின் 3 விழுக்காடு பங்குகளை ரூ.89 கோடிக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

பட்ஜெட்:ஜுலை 6 ஆம் தேதி தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் (நிதி நிலை அறிக்கை) கூட்டத்தொடர் அடுத்த மாதம் இரண்டாம் தேதி கூடுகிறது.

மத்திய அமைச்சரவையின் கூட்டம், இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கும் நாள், பட்ஜெட் சமர்ப்பிக்கும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன.

இதன் படி, மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2009-10 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜுலை ஆறாம் தேதி தாக்கல் செய்கிறார்.

முன்னதாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ரயில்வே பட்ஜெட்டை ஜுலை 3 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் (ஜுலை 2) இந்த நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

மத்திய பட்ஜெட் ஜுலை 31 ஆம் தேதிக்குள் இரண்டு அவைகளிலும் நிறைவேறிவிடும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

மக்களைக்கு தேர்தல் நடந்ததால், ஜுலை மாதம் வரையிலான செலவினங்களுக்கு, சென்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஜுலை 31 ஆம் தேதிக்குள் நிறைவேறாவிட்டால், இடைக்கால செலவினங்களான மானிய கோரிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டிதிருக்கும். இந்த சூழ்நிலை ஏற்படாது என்று அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது: விஜயகாந்த்

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌மி‌ன்சார க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்த‌க் கூடாது எ‌ன்று தி.க. தலைவ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
சட்ட‌ப்பேரவை‌யி‌ல் எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் ப‌ங்கே‌ற்று பேசிய தே.மு.தி.க. தலைவ‌ர் விஜயகாந்த், தமிழ்நாட்டில் இன்று மின்சாரம் எப்போது வரும், போகும் என்று சொல்ல முடியவில்லை. மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தங்கு தடையின்றி வோல்டேஜ் குறையாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

இலவச வ‌ண்ண‌த் கல‌ர் தொலை‌க்கா‌ட்‌சி‌‌க்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மின்வெட்டு காரணமாக இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை. மின்சார தேவை முயல் வேகத்தில் ஏறுகிறது. ஆனால் உற்பத்தி திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கிறது.

வரும் மார்ச் மாதம் வரை மின்சார தேவை 10 ஆயிரத்து 400 மெகாவாட். ஆனால் உற்பத்தி 6 ஆயிரத்து 300 மெகாவாட் அளவுதான் இருக்கும் என்கிறார்கள். இந்த பற்றாக்குறையை அரசு எப்படி சரி செய்ய போகிறது. 2012 ம் ஆண்டு வரை மின் பற்றாக்குறை தீராது என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு நெய்வேலி அனல்மின் உற்பத்தி நிலையங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆண்டு ரூ. 6500 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி தேர்தல் முடிந்து விட்ட காரணத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது.

தென்னக மாநிலங்களில் ஆண்டு தோறும் ஏற்படும் மின்சார பற்றாக்குறையை அடிப்படையாக வைத்து அந்த விகிதாசாரத்தில் மின்சாரத்தை மத்திய அரசு பிரித்து வழங்க வேண்டும். அப்போதுதான் மின் பற்றாக்குறையை மாநில அரசுகள் சமாளிக்க முடியும் என்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

அ.இ.அ.‌தி.மு.க.வா‌ல் எனது உ‌யிரு‌க்கு ஆப‌த்து : எ‌ஸ்.‌வி.சேக‌ர்

அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன் எ‌ன்று‌ம் வா‌‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்ததா‌ல் அ.இ.அ.‌தி.மு.க.‌வினரா‌ல் எனது உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் அ.இ.அ.‌தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌வி.சேக‌ர் அ‌ச்ச‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினார். இதற்கு அ.இ.அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட விவாதத்துக்கு பிறகு எ‌ஸ்.‌வி.சேக‌ர் பேசுகை‌யி‌ல், ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நான் அ.இ.அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் இந்த சபைக்கு வந்தேன். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

மாற்றுக் கட்சியினர் பேசக்கூடாது என்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். துணை முதலமைச்சரை பாராட்டுவதால் 'துரோ‌கி' என்று சொல்வது சரியல்ல. ஆனால் என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை.

உறுப்பினர் கலைராஜன், அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன் என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கோ,உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எ‌ன்றா‌ர்.

இதை‌த் தொடர்ந்து எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது குறு‌க்‌கி‌ட்டு பே‌சிய அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் கலைராஜன், இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை எ‌ன்றா‌ர்.

அ‌ப்போது அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், இந்திய கம்யூனிஸ்டு உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம், பா.ம.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஜி.கே.மணி, வேல்முருகன், மார்க்சிஸ்டு கம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் பாலபாரதி ஆகியோர் எஸ்.வி.சேகர், கலைராஜன் ஆகியோருடைய பேச்சையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடலாம் என கருத்து தெரிவித்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பே‌சிய அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எஸ்.வி.சேகர் குற்றச்சா‌ற்று கூறினார், அதற்கு கலைராஜன் பதில் சொல்லி விட்டார். எனவே அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.

இதையடு‌த்து அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுகை‌யி‌ல், எஸ்.வி.சேகர் அ.தி.மு.க.வினரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதையும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கருத்தையும் இந்த அவையில் பதிவு செய்து இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவை‌த் தலைவ‌ரி‌ன் கடமை எ‌ன்றா‌ர்.

இதை‌த் தொட‌‌‌ர்‌ந்து பே‌சிய அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன், உறுப்பினர் கலைராஜன் இருக்கையை விட்டு எழுந்து இங்கு வந்தது தவறு. இருவர் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை எ‌ன்றா‌ர்.

வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி மாநில தேர்தல் ஆணைய புதிய கட்டட திறப்பு விழா

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தமி‌ழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின், புதிய கட்டடத்தினை, நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி ‌திற‌‌ந்து வை‌க்‌கிறா‌ர்.

மாலை 5.30 மணிக்கு நட‌க்கு‌ம் இ‌ந்த ‌திற‌ப்பு ‌விழா‌வி‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தா‌ங்கு‌கிறா‌ர். பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகி‌க்‌கிறா‌ர். மாநில தேர்தல் ஆணையர் தா.சந்திரசேகரன் வரவேற்புரையா‌ற்று‌கிறா‌ர். சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வா‌ழ்‌த்‌துரை வழங்கு‌கிறா‌ர்.

இத்தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்கு தமி‌ழ்நாடு கட்டுமான கழகத்தின் பயன்பாட்டில் இருந்த நிலம் சுமார் 0.5 ஏக்கர் (50 மீட்டர் நீளம் ஒ 41 மீட்டர் அகலம்) தமி‌ழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உரிய வருவா‌ய் நிலமாற்றத்தின்படி ஒப்படைக்கப்பட்டது. ரூ.2.13 கோடி செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் + மூன்று தளம் கட்டுவதற்கு வேண்டிய பைல் பவுண்டேஷன் போடப்பட்டுள்ளது

தற்போது தரைதளம் மற்றும் முதல்தளம் கட்டப்பட்டுள்ளது. கட்டட பரப்பளவு தரைதளம்-505 சதுர மீட்டர், முதல் தளம் - 505 சதுர மீட்டர் ஆக மொத்தம் 1010 சதுர மீட்டர். இக்கட்டடத்தில் தமி‌ழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், செயலாளர், முதன்மை தேர்தல் அலுவலர், மாநகராட்சி மற்றும் ஊராட்சி, சட்ட அலுவலர், நிர்வாக அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், ஆலோசகர் ஆகியோர்களுக்கு தனித்தனி அறைகளும், மாநாட்டு அறை, நூலகக் கூடம், சாப்பாட்டுக் கூடம் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் கூடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

கட்டடத்திற்கு வெளியே நான்கு வாகன நிறுத்துமிடங்கள், கட்டடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர்கள், கான்கிரீட் சாலைகள், புல்வெளிகள், தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள் மற்றும் வெளி நுழைவு வாயில்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அலுவலக முன்புற முகப்பு மற்றும் சுற்றுச்சுவர்களில் ஸ்தபதிகள் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டடம் பொதுப்பணித்துறையால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம் கட்டும் பணி 31.12.2007 அன்று தொடங்கப்பட்டு 31.3.2009 அன்று முடிக்கப்பட்டது. இக்கட்டடம் ஒரு வருடம், மூன்று மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

முதலில் ர‌ஜினி பிறகு விஜய்...

ஆறுமுகம் படத்தை பரத்தை வைத்து எடுத்து வருகிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. படத்தின் பெயரை கேள்விப்பட்ட ர‌ஜினி, சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போன் போட்டு, நாம எப்படி இந்த டைட்டிலை மிஸ் பண்ணினோம் என்று கேட்டாராம். ர‌ஜினிக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம் விஜய்க்கும் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் பரத் நடிக்கும் படம்தான்.

எம்.‌ஜி.ஆர். பட டைட்டிலில் நடிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார் விஜய். தனது 49வது படத்துக்கு வேட்டைக்காரன் பெயரை தேர்ந்தெடுத்ததே அவர்தான்.

ஒரு டஜன் எம்.‌ஜி.ஆர். டைட்டில்களை தான் நடிப்பதற்காக விஜய் தேர்வு செய்து வைத்துள்ளார். அவரது ஐம்பதாவது படத்தின் பெயர் உ‌ரிமைக்குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அவரது லிஸ்டில் இருந்த இன்னொரு பெயர் எங்க வீட்டு பிள்ளை. தனது ஐம்பதாவது படத்துக்கு இந்தப் பெயரைதான் முதலில் தேர்வு செய்து வைத்திருந்தாராம் விஜய். துரதிர்ஷ்டவசமாக அதே பெய‌ரில் ஒரு படத்தில் பரத் நடிக்கிறார்.

எம்.‌ஜி.ஆ‌ரின் எங்க வீட்டு பிள்ளையை தயா‌ரித்த நாகிரெட்டியின் மகன் வெங்கட்ரமண ரெட்டிதான் பரத் நடிக்கும் படத்தை தயா‌ரிப்பது. உ‌ரிமைக்குரல் பெயராவது கைநழுவிப் போகக்கூடாது என்பதற்காக அந்தப் படத்தை எடுத்த ஸ்ரீத‌ரின் குடும்பத்திடம் முறைப்படி அனுமதி வாங்கும் முயற்சியில் இருக்கிறது விஜய் தரப்பு.

சூர்யாவை எரிச்சலூட்டிய ‘ச்சும்மா‘ நடிகர்!

முக்கிய விழாக்களுக்கு போகும் போது சந்தோஷம் வரும். மாலையை போட்டு மாரோட அணைச்சுக்கிட்டா அந்த சந்தோஷம் நீடிக்கும். மாலைக்கு நடுவிலே குண்டூசியை நுழைச்சா, அதே சந்தோஷம் புட்டுக்கும். அப்படிதான் நேர்ந்தது சூர்யாவுக்கு. தனது நண்பர் அருண் விஜயை வாழ்த்த பரந்த மனசோடு மலை மலை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அருணும் சரி, அவரது குடும்பமும் சரி, அன்போடு வரவேற்று ஆசையோடு மேடையேற்றியது. ஆனால், மேடையில் இருந்த ஒன்றிரண்டு துக்கடா நடிகர்களால் கச்சடா ஆனது சூர்யாவின் மனசு.

அருண் விஜயின் க்ளோஸ் பிரண்டு உதயாவை பேச அழைத்தார்கள். இவரும் ஒரு இளம் ஹீரோதான். ஆனால் நடித்த படங்கள் எதுவும் பெரிசாக ஓடவில்லை. இந்நிலையில் மைக் பிடித்த உதயா, “இந்த விழாவுக்கு சூர்யா வந்திருக்காரு. அவருக்கு ஒரு பாலா கிடைச்சார். ஆனா எங்களுக்கு கிடைக்கலியே? அப்படி கிடைச்சிருந்தா நாங்களும் சூர்யா மாதிரி ஆயிருப்போம். அப்படி ஆகணும்ங்கிற ஆசை எங்களுக்கும் நிறைய இருக்கு. எல்லாரும் சூர்யா சூர்யான்னு பெரிய நடிகரு பக்கமே போனா நாங்க எப்போ சூர்யா ஆகறது? எங்களையும் வச்சு படம் எடுக்கணும்னு பாலாவை போன்ற இயக்குனர்களை கேட்டுக்கிறேன்“ என்றார். தொடர்ந்து,

“அருண் விஜய் மாமாதான் இந்த படத்தை அவருக்காக எடுத்திருக்காரு. என்னையும் வச்சு அவரு படம் எடுக்கணும். நான் வேணா ஃப்ரீயா நடிச்சு தர்றேன்“னு இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே போக, சூர்யா நெளிஞ்சதை பார்க்கணுமே?

கமல், துணை முதல்வர் சந்திப்பு

துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெ‌ரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கலைத்துறையைச் சேர்ந்த பலரும் நே‌ரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகள் தெ‌ரிவித்தனர். எந்திரன் படப்பிடிப்பில் இருந்த ர‌‌ஜினி தொலைபேசி மூலமாக துணை முதல்வருக்கு வாழ்த்துகள் தெ‌ரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மு.க. ஸ்டாலினை நே‌ரில் சந்தித்து பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளை தெ‌ரிவித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் உடனிருந்தார்.

மது விரோதன்

குடித்து விட்டு
கூத்தடிப்பதற்கு மட்டும்
கூடுவது நட்பல்ல
தோழனின் சுமைகளுக்கு
தோள் கொடுப்பதும்
நட்புதான்!

உணர்ந்துகொள் தோழா!
மதுவைக் குடித்தால்
கேடுகள் நாடிவரும்
மாதுவைக் குடித்தால்
நாடிகள் கூடிவரும்.

இரண்டுமே ஒன்றுதான்
போதை தருவதிலே!
இரண்டுமே வெவ்வேறு
வாழ்க்கை பாதை தருவதிலே!

மதுபோதையிலே
புத்தி புரளும்
நடைபாதையிலே
தத்தி தத்தி தடுமாறும்!
காய்ச்சி குடித்தால்
காவல் துறையினர்
பிடித்து காய்ப்பார்கள்.

மதுக்கடைகளில்
வாங்கி குடித்தால்
மேச்சுவார்கள்.
இரண்டுமே
முரண்பாடுதான்
அரசுக்கு ஏனோ
இதிலே உடன்பாடு.

மனிதா!
நீ மாண்புற வேண்டுமா
மனிதநேயம் படி
மண் பயனுற வேண்டுமா
மதுவை ஒழி

அழகிற்கு நிகர்?

காதல் பேசும் கண்கள்--என்னை
கவர்ந்துகொண்டபோது....
உதட்டு ஓரச் சிரிப்பு--என்னை
ஒட்டிக்கொண்டபோது....
கொள்ளை கொண்ட அழகு--என்னை
ஆக்கம்கொண்டபோது...

சிறையாய் ஆனேன்
உனக்குள் நானும்
உறவை வைத்தாய்
எனக்குள் நீயும்
என்னைக் கவர்ந்தாய்
ஏன்தான் பெண்ணே

நிலவே நீ ஏன் நலமா என்றாய்
வார்த்தை கேட்டு சிலையாய் நின்றேன்
கரங்கள் பட்டு காற்றாய் போனேன்
காந்தம் ஆனேன் உந்தன் பக்கம்

உறங்கும் போதும் கனவில் வந்தாய்
விழிக்கும் போதும் நினைவில் வந்தாய்.
அலைகள் அடிக்கும் கடலாய் ஆனேன்
ஆழம் காணா மனசாய் போனாய்
அழகே என்னை கவர்ந்தாய் ஏனோ?

கவர்ந்த உன் விழியில்
காவியம் படைத்தேன்
மலர்ந்த உன் முகத்தில்
ஓவியம் கண்டேன்

நடந்த உன் அழகில்
கவிதைகள் படைத்தேன்
அழகின் படைப்பில் ஏவாள் நீயோ?
அழகே உந்தன் அழகில் யார்?
அதுகும் நீயே நிகரில் நீயே.