'மிஸ்டு கால்...!'கொடுப்பவரா நீங்கள்; உஷார்: உளவுத்துறை கண்காணிக்கும்

மொபைல் போனில் "மிஸ்டு கால்' தரும் பழக்கம் உள்ளவரா, இனி உஷாராக இருங்கள்; உளவுத்துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், பாக்., பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டுபிடித்து, அவர்களின் சதித் திட்டங்களை உடனுக்குடன் ஒடுக்க, மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சதி திட்டங்களை செயல்படுத்துகின்றனர். தகவல் தொடர்புகளை துண்டித் தாலே, பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி விட முடியும் என்று, உளவுத்துறை நம்புகிறது. மொபைல் போன், இன்டர்நெட் மூலம் பயங்கரவாதிகள் தொடர்பு கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டது. இன்டர்நெட் மூலம் பயங்கரவாதிகள் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்காணிக்க, உள வுத்துறை ஏற்பாடு செய்துள் ளது. இதனால், இன்டர்நெட் வழியாக சதித் திட்டங்களை தீட்டுவதை ஓரளவு முறியடித்து வருகிறது.

மொபைல் போன் மூலம், பயங்கரவாதிகள் தொடர்பு கொள் வதைத் தடுக்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்க உளவுத்துறை ஆரம் பித்து விட்டது. முதல் கட்டமாக, போலி மொபைல் போன்கள் விற்பனை செய்வதை தடுத்தது. அடுத்து,போலி மொபைல் போன் இணைப்புகளையும் துண்டிக்க திட்டமிட்டு உள்ளது. மொபைல் போன்களில், "இன்டர்நேஷனல் மொபைல் எக்விப்மென்ட் ஐடென்டிபிகேஷன்' (ஐ.எம்.இ.ஐ.,) என்ற எண் இருக்கும். இந்த எண், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்தனியாக இருக்கும். இதை வைத்துத் தான் குறிப்பிட்ட மொபைல் போனில் இருந்து தகவல் பரிமாறப்பட்டுள்ளது என்பதை, கண்காணிக்க முடியும்.

ஆனால் சீனா, தென் கொரியாவில் இருந்து போலி மொபைல் போன்கள், இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக் கான போன்களுக்கு, ஒரே ஐ.எம். இ.ஐ., எண் தரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி ஒரே எண், பல மொபைல் போன்களுக்கு அளிக் கப்படுவது, பயங்கரவாதிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. சீன, கொரிய மொபைல் போன்களை பயன் படுத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியாமல் போனதால், உளவுத்துறை இதற்கு தடை விதித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 1ல் இருந்து அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், அடுத்த அதிரடியாக "மிஸ்டு கால்'களை எல் லாம் கண்காணிக்க உளவுத்துறை முடிவு செய்துள்ளது.

எல்லா "மிஸ்டு கால்'களையும் பதிவு செய்து அளிக்கும்படி, அரசு மற்றும் தனியார் மொபைல் இணைப்பு நிறுவனங்களுக்கு உத் தரவு அனுப்பும்படி, தொலைபேசித்துறையை கேட்டுக்கொண்டது. மொபைல் போனில் பேசினால் தான் காசு வசூலிக்க முடியும். அதனால், அந்த அழைப்புகளை மட்டும், எல்லா மொபைல் நிறுவனங்களும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், "மிஸ்டு கால்'களுக்கு காசு வசூலிக்கப்படுவதில்லை என்பதால், அவற்றை நிறுவனங்கள் பதிவு செய்வதில்லை. மொபைல் போனில் "மிஸ்டு கால்' விடுவோர் தான் அதிகம்.

100 அழைப்புகளில் 80 அழைப்புகள் "மிஸ்டு கால்' தான். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கடைக்காரர்கள், விற்பனை பிரதிநிதிகள், டிரைவர்கள் போன்றவர்களும் "மிஸ்டு கால்' அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு "மிஸ்டு கால்' அனுப்பினால், தங்களுக்கு செலவு மிச்சம் என்று இப்படி செய்கின்றனர். "இப்படி 80 சதவீத "மிஸ்டு கால்'களை பதிவு செய்தால், அதற்கான டிஜிட்டல் சாதன செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும். இதனால், நிறுவனத்துக்கு இழப்பு தான்' என்று, தனியார் மொபைல் இணைப்பு நிறுவனங்கள் புலம்புகின்றன.

உளவுத்துறைக்கு தொலைபேசித்துறையும் இது தொடர்பாக விளக்கி, "சந்தேகப்படும்படியான மிஸ்டு கால்களை சொன்னால், உடனே பதிவு செய்வதாக நிறுவனங்கள் உறுதி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.எனினும், "எல்லா மிஸ்டு கால் களையும் பதிவு செய்தால் தான் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்' என்று, உளவுத்துறை வலியுறுத்தி வருகிறது. "மிஸ்டு கால்'களை பதிவு செய்வது விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment