Showing posts with label ஏஆர் முருகதாஸ். Show all posts
Showing posts with label ஏஆர் முருகதாஸ். Show all posts

முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்

தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்கு வந்த இயக்குனர்களில் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே. இவரது முதல் படம் க‌ஜினியே சூப்பர் ஹிட்டானதுடன் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது.

அடுத்து ஷாருக்கானுக்காக கதை தயார் செய்திருக்கிறார் முருகதாஸ். இவர் தமிழில் இயக்கிய ரமணா படத்தை இந்திக்கு ஏற்றபடி மாற்றி அதில் ஷாருக்கை நடிக்க வைப்பது என்றுதான் முருகதாஸ் திட்டமிட்டிருந்தார். ஷாருக் இதற்கு நோ சொன்னதால் புதிய கதையொன்றை தயார் செய்திருக்கிறார்.

சென்ற வாரம் இந்தப் புதிய கதையை ஷாருக்கானிடம் கூறினார் முருகதாஸ். கதை ஷாருக்கை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. தற்போது நடித்துவரும் கரண் ஜோஹ‌ரின் மை நேம் இஸ் கான் படம் முடிந்ததும் முருகதாஸின் படத்தில் நடிப்பதாக உறுதியளித்திருக்கிறார் ஷாருக்.

க‌ஜினியின் 250 கோடி சாதனையை இந்தப் படம் முறியடிக்க வேண்டும் என்ற டார்கெட்டில் படத்தின் ஸ்கி‌ரிப்டை உருவாக்கி வருகிறார் முருகதாஸ்.