Showing posts with label நயன்தாரா. Show all posts
Showing posts with label நயன்தாரா. Show all posts

பாலிவுட்டுக்கு போகிறார் நயன்தாரா!  


பாலிவுட் பக்கம் போன அசின் மீண்டும் கோலிவுட்டிற்கு தரிசனம் தர தயங்குகிறார். அவரைத் தொடர்ந்து ஜெனிலியாவும், த்ரிஷாவும் பாலிவுட் பக்கம் போயிருக்கிறார்கள். அவர்கள் மீண்டு(ம்) வருவார்களா என்பது தெரியவில்லை. இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவும் பாலிவுட் பக்கம் போகப்போகிறாராம். விரைவில் பிரபுதேவா இந்தியில் இயக்கப்போகும் படமொன்றில் நயன்தாராதான் நாயகி. நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார்.

தற்போது நயன்தாரா தமிழில் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து பிரபுதேவாவின் இந்தி படத்தில் நயன்தாரா நடிப்பார் என தெரிகிறது.