Showing posts with label nadigai. Show all posts
Showing posts with label nadigai. Show all posts

தமிழில் நியூசிலாந்து நடிகை

மதம் ஒருவ‌ரின் தனிப்பட்ட விஷயம். இந்த மத உணர்வு ஒரு எல்லையை தாண்டும்போது அது தீவிரவாதமாக வெடிக்கிறது. சர்வமத பிரார்த்தனை போலிருக்கும் இந்த வ‌ரிகள்தான் அறிமுக இயக்குனர் மதிவாணனின் அ‌ரிது அ‌ரிது படத்தின் அடிப்படை.

தனது முதல் படத்திலேயே வெயிட்டான விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் மதிவாணன். அதற்கொரு பொக்கே. இன்னொரு பொக்கேயும் இவருக்கு கொடுக்க வேண்டும். அது இவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஹீரோயினுக்காக.

அ‌ரிது அ‌ரிது படத்தின் கதைக்கு நல்ல தமிழ் முகம் தேவைப்பட்டிருக்கிறது. ஆறு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் அப்படியொரு முகம் சிக்காமல் இறுதியில் நியூசிலர்ந்தைச் சேர்ந்த ருத்ரா என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். வசிப்பது நியூசிலாந்து என்றாலும், ருத்ராவின் பரம்பரை வேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தது.

படத்தின் ஹீரோவும் புதுமுகம்தான். பெயர் ஹ‌ரிஷ். வெயிட்டான கதை, வெளிநாட்டில் டூயட் என களேபரமாக தயாராகி வருகிறது அ‌ரிது அ‌ரிது.