Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது! -

காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!

அது எ‌ப்படிடா ம‌ச்சா‌‌ன்?

நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!

எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.

காதல் ஒட்டம் - ஹைக்கூ கவிதை

காதல் ஒட்டம்
வாசல் வழியாக வறுமை
உள்ளே வரும் போது
ஜன்னல் வழியாக ஓடிவிடும் காதல்

செல்லரிக்கும் காதல்

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.,

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

காதல் சிரிப்பு

காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?
காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!
காதலன்: அப்புறம்...?
காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!