Showing posts with label சிவகுமார். Show all posts
Showing posts with label சிவகுமார். Show all posts

'குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்...' சிவகுமார் உருக்கம்!

'புத்தகங்களே, புத்தகங்களே, சமர்த்தாக இருங்கள். குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்Õ என்ற அருமையான கவிதையை சொல்லி, நிகழ்ச்சியை தொகுத்தளித்தார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல்! சிவகுமார், சூர்யா குடும்பத்தினர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் விழாவில்தான் இந்த அழகான கவிதையை கேட்க முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் சிவகுமார் அறக்கட்டளை மற்றும், அகரம் பவுண்டேஷன் மூலமாக நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறையும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர். இந்த வருடத்தில் இன்னும் கூடுதல் பொறுப்பும் வந்திருக்கிறது இவர்களுக்கு. சேவை உள்ளத்தோடு பணியாற்றும் பிற அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில், அவர்கள் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார்கள்.

கடலூரில் இயங்கி வரும் அமைப்பு ஒன்றில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் ஐம்பது பேரை தத்தெடுத்துக் கொண்டது அகரம் பவுண்டேஷன். எல்லா மாணவர்களோடும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டபின் சிவகுமார் பேசியது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. 'இந்த ஆண்டிலிருந்து இலங்கை அகதிகள் முகாமில் படிக்க இயலாமல் தவிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி தர முடிவு செய்திருக்கிறோம்' என்று அவர் சொல்ல, கூட்டத்திலிருந்து எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.