ஒவ்வொரு வருடமும் சிவகுமார் அறக்கட்டளை மற்றும், அகரம் பவுண்டேஷன் மூலமாக நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறையும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர். இந்த வருடத்தில் இன்னும் கூடுதல் பொறுப்பும் வந்திருக்கிறது இவர்களுக்கு. சேவை உள்ளத்தோடு பணியாற்றும் பிற அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில், அவர்கள் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார்கள்.
கடலூரில் இயங்கி வரும் அமைப்பு ஒன்றில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் ஐம்பது பேரை தத்தெடுத்துக் கொண்டது அகரம் பவுண்டேஷன். எல்லா மாணவர்களோடும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டபின் சிவகுமார் பேசியது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. 'இந்த ஆண்டிலிருந்து இலங்கை அகதிகள் முகாமில் படிக்க இயலாமல் தவிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி தர முடிவு செய்திருக்கிறோம்' என்று அவர் சொல்ல, கூட்டத்திலிருந்து எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.
No comments:
Post a Comment