Showing posts with label சினிநியூஸ். Show all posts
Showing posts with label சினிநியூஸ். Show all posts

சத்யரா‌ஜ் படத்தில் சுந்தர் சி?

ரீமிக்ஸ் பீவருடன் ‌ரீரிமேக் பீவரும் தமிழ் சினிமாவை அலைக்கழிக்கிறது. மூணு மாசத்துக்கு ஒரு படம் என கணக்கு வைத்திருக்கும் இயக்குனர்களே இந்த ‌‌ரீமேக் பீவ‌ரின் காரணிகள்.

ராஜாதிராஜா படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் ர‌ஜினி, பிரபு நடித்த குரு சிஷ்யன் படத்தை ‌‌ரீமேக் செய்கிறார் என ஸ்டுடியோ வட்டாரத்தில் பலமான பேச்சு.

குருவாக சத்யராஜும், சிஷ்யனாக சுந்தர் சி-யும் நடிக்கிறார்கள், இருவ‌ரிடமும் இது குறித்து ஷக்தி சிதம்பரம் பேசிவிட்டார் என்றும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

சுந்தர் சி, முரட்டுக்காளை, ஐந்தாம்படை, வாடா, வேட்டு என நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் முரட்டுக்காளை ர‌ஜினி படத்தின் ‌‌ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ர‌ஜினி பிறகு விஜய்...

ஆறுமுகம் படத்தை பரத்தை வைத்து எடுத்து வருகிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. படத்தின் பெயரை கேள்விப்பட்ட ர‌ஜினி, சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போன் போட்டு, நாம எப்படி இந்த டைட்டிலை மிஸ் பண்ணினோம் என்று கேட்டாராம். ர‌ஜினிக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம் விஜய்க்கும் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் பரத் நடிக்கும் படம்தான்.

எம்.‌ஜி.ஆர். பட டைட்டிலில் நடிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார் விஜய். தனது 49வது படத்துக்கு வேட்டைக்காரன் பெயரை தேர்ந்தெடுத்ததே அவர்தான்.

ஒரு டஜன் எம்.‌ஜி.ஆர். டைட்டில்களை தான் நடிப்பதற்காக விஜய் தேர்வு செய்து வைத்துள்ளார். அவரது ஐம்பதாவது படத்தின் பெயர் உ‌ரிமைக்குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அவரது லிஸ்டில் இருந்த இன்னொரு பெயர் எங்க வீட்டு பிள்ளை. தனது ஐம்பதாவது படத்துக்கு இந்தப் பெயரைதான் முதலில் தேர்வு செய்து வைத்திருந்தாராம் விஜய். துரதிர்ஷ்டவசமாக அதே பெய‌ரில் ஒரு படத்தில் பரத் நடிக்கிறார்.

எம்.‌ஜி.ஆ‌ரின் எங்க வீட்டு பிள்ளையை தயா‌ரித்த நாகிரெட்டியின் மகன் வெங்கட்ரமண ரெட்டிதான் பரத் நடிக்கும் படத்தை தயா‌ரிப்பது. உ‌ரிமைக்குரல் பெயராவது கைநழுவிப் போகக்கூடாது என்பதற்காக அந்தப் படத்தை எடுத்த ஸ்ரீத‌ரின் குடும்பத்திடம் முறைப்படி அனுமதி வாங்கும் முயற்சியில் இருக்கிறது விஜய் தரப்பு.

சூர்யாவை எரிச்சலூட்டிய ‘ச்சும்மா‘ நடிகர்!

முக்கிய விழாக்களுக்கு போகும் போது சந்தோஷம் வரும். மாலையை போட்டு மாரோட அணைச்சுக்கிட்டா அந்த சந்தோஷம் நீடிக்கும். மாலைக்கு நடுவிலே குண்டூசியை நுழைச்சா, அதே சந்தோஷம் புட்டுக்கும். அப்படிதான் நேர்ந்தது சூர்யாவுக்கு. தனது நண்பர் அருண் விஜயை வாழ்த்த பரந்த மனசோடு மலை மலை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அருணும் சரி, அவரது குடும்பமும் சரி, அன்போடு வரவேற்று ஆசையோடு மேடையேற்றியது. ஆனால், மேடையில் இருந்த ஒன்றிரண்டு துக்கடா நடிகர்களால் கச்சடா ஆனது சூர்யாவின் மனசு.

அருண் விஜயின் க்ளோஸ் பிரண்டு உதயாவை பேச அழைத்தார்கள். இவரும் ஒரு இளம் ஹீரோதான். ஆனால் நடித்த படங்கள் எதுவும் பெரிசாக ஓடவில்லை. இந்நிலையில் மைக் பிடித்த உதயா, “இந்த விழாவுக்கு சூர்யா வந்திருக்காரு. அவருக்கு ஒரு பாலா கிடைச்சார். ஆனா எங்களுக்கு கிடைக்கலியே? அப்படி கிடைச்சிருந்தா நாங்களும் சூர்யா மாதிரி ஆயிருப்போம். அப்படி ஆகணும்ங்கிற ஆசை எங்களுக்கும் நிறைய இருக்கு. எல்லாரும் சூர்யா சூர்யான்னு பெரிய நடிகரு பக்கமே போனா நாங்க எப்போ சூர்யா ஆகறது? எங்களையும் வச்சு படம் எடுக்கணும்னு பாலாவை போன்ற இயக்குனர்களை கேட்டுக்கிறேன்“ என்றார். தொடர்ந்து,

“அருண் விஜய் மாமாதான் இந்த படத்தை அவருக்காக எடுத்திருக்காரு. என்னையும் வச்சு அவரு படம் எடுக்கணும். நான் வேணா ஃப்ரீயா நடிச்சு தர்றேன்“னு இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே போக, சூர்யா நெளிஞ்சதை பார்க்கணுமே?

கமல், துணை முதல்வர் சந்திப்பு

துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெ‌ரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கலைத்துறையைச் சேர்ந்த பலரும் நே‌ரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகள் தெ‌ரிவித்தனர். எந்திரன் படப்பிடிப்பில் இருந்த ர‌‌ஜினி தொலைபேசி மூலமாக துணை முதல்வருக்கு வாழ்த்துகள் தெ‌ரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மு.க. ஸ்டாலினை நே‌ரில் சந்தித்து பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளை தெ‌ரிவித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் உடனிருந்தார்.