Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

அ.இ.அ.‌தி.மு.க.வா‌ல் எனது உ‌யிரு‌க்கு ஆப‌த்து : எ‌ஸ்.‌வி.சேக‌ர்

அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன் எ‌ன்று‌ம் வா‌‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்ததா‌ல் அ.இ.அ.‌தி.மு.க.‌வினரா‌ல் எனது உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் அ.இ.அ.‌தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌வி.சேக‌ர் அ‌ச்ச‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினார். இதற்கு அ.இ.அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட விவாதத்துக்கு பிறகு எ‌ஸ்.‌வி.சேக‌ர் பேசுகை‌யி‌ல், ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நான் அ.இ.அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் இந்த சபைக்கு வந்தேன். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

மாற்றுக் கட்சியினர் பேசக்கூடாது என்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். துணை முதலமைச்சரை பாராட்டுவதால் 'துரோ‌கி' என்று சொல்வது சரியல்ல. ஆனால் என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை.

உறுப்பினர் கலைராஜன், அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன் என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கோ,உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எ‌ன்றா‌ர்.

இதை‌த் தொடர்ந்து எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது குறு‌க்‌கி‌ட்டு பே‌சிய அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் கலைராஜன், இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை எ‌ன்றா‌ர்.

அ‌ப்போது அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், இந்திய கம்யூனிஸ்டு உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம், பா.ம.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஜி.கே.மணி, வேல்முருகன், மார்க்சிஸ்டு கம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் பாலபாரதி ஆகியோர் எஸ்.வி.சேகர், கலைராஜன் ஆகியோருடைய பேச்சையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடலாம் என கருத்து தெரிவித்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பே‌சிய அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எஸ்.வி.சேகர் குற்றச்சா‌ற்று கூறினார், அதற்கு கலைராஜன் பதில் சொல்லி விட்டார். எனவே அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.

இதையடு‌த்து அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுகை‌யி‌ல், எஸ்.வி.சேகர் அ.தி.மு.க.வினரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதையும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கருத்தையும் இந்த அவையில் பதிவு செய்து இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவை‌த் தலைவ‌ரி‌ன் கடமை எ‌ன்றா‌ர்.

இதை‌த் தொட‌‌‌ர்‌ந்து பே‌சிய அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன், உறுப்பினர் கலைராஜன் இருக்கையை விட்டு எழுந்து இங்கு வந்தது தவறு. இருவர் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை எ‌ன்றா‌ர்.

வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி மாநில தேர்தல் ஆணைய புதிய கட்டட திறப்பு விழா

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தமி‌ழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின், புதிய கட்டடத்தினை, நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி ‌திற‌‌ந்து வை‌க்‌கிறா‌ர்.

மாலை 5.30 மணிக்கு நட‌க்கு‌ம் இ‌ந்த ‌திற‌ப்பு ‌விழா‌வி‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தா‌ங்கு‌கிறா‌ர். பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகி‌க்‌கிறா‌ர். மாநில தேர்தல் ஆணையர் தா.சந்திரசேகரன் வரவேற்புரையா‌ற்று‌கிறா‌ர். சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வா‌ழ்‌த்‌துரை வழங்கு‌கிறா‌ர்.

இத்தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்கு தமி‌ழ்நாடு கட்டுமான கழகத்தின் பயன்பாட்டில் இருந்த நிலம் சுமார் 0.5 ஏக்கர் (50 மீட்டர் நீளம் ஒ 41 மீட்டர் அகலம்) தமி‌ழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உரிய வருவா‌ய் நிலமாற்றத்தின்படி ஒப்படைக்கப்பட்டது. ரூ.2.13 கோடி செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் + மூன்று தளம் கட்டுவதற்கு வேண்டிய பைல் பவுண்டேஷன் போடப்பட்டுள்ளது

தற்போது தரைதளம் மற்றும் முதல்தளம் கட்டப்பட்டுள்ளது. கட்டட பரப்பளவு தரைதளம்-505 சதுர மீட்டர், முதல் தளம் - 505 சதுர மீட்டர் ஆக மொத்தம் 1010 சதுர மீட்டர். இக்கட்டடத்தில் தமி‌ழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், செயலாளர், முதன்மை தேர்தல் அலுவலர், மாநகராட்சி மற்றும் ஊராட்சி, சட்ட அலுவலர், நிர்வாக அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், ஆலோசகர் ஆகியோர்களுக்கு தனித்தனி அறைகளும், மாநாட்டு அறை, நூலகக் கூடம், சாப்பாட்டுக் கூடம் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் கூடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

கட்டடத்திற்கு வெளியே நான்கு வாகன நிறுத்துமிடங்கள், கட்டடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர்கள், கான்கிரீட் சாலைகள், புல்வெளிகள், தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள் மற்றும் வெளி நுழைவு வாயில்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அலுவலக முன்புற முகப்பு மற்றும் சுற்றுச்சுவர்களில் ஸ்தபதிகள் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டடம் பொதுப்பணித்துறையால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம் கட்டும் பணி 31.12.2007 அன்று தொடங்கப்பட்டு 31.3.2009 அன்று முடிக்கப்பட்டது. இக்கட்டடம் ஒரு வருடம், மூன்று மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கமல், துணை முதல்வர் சந்திப்பு

துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெ‌ரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கலைத்துறையைச் சேர்ந்த பலரும் நே‌ரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகள் தெ‌ரிவித்தனர். எந்திரன் படப்பிடிப்பில் இருந்த ர‌‌ஜினி தொலைபேசி மூலமாக துணை முதல்வருக்கு வாழ்த்துகள் தெ‌ரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மு.க. ஸ்டாலினை நே‌ரில் சந்தித்து பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளை தெ‌ரிவித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் உடனிருந்தார்.