எம்.ஜி.ஆர். பட டைட்டிலில் நடிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார் விஜய். தனது 49வது படத்துக்கு வேட்டைக்காரன் பெயரை தேர்ந்தெடுத்ததே அவர்தான்.
ஒரு டஜன் எம்.ஜி.ஆர். டைட்டில்களை தான் நடிப்பதற்காக விஜய் தேர்வு செய்து வைத்துள்ளார். அவரது ஐம்பதாவது படத்தின் பெயர் உரிமைக்குரல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அவரது லிஸ்டில் இருந்த இன்னொரு பெயர் எங்க வீட்டு பிள்ளை. தனது ஐம்பதாவது படத்துக்கு இந்தப் பெயரைதான் முதலில் தேர்வு செய்து வைத்திருந்தாராம் விஜய். துரதிர்ஷ்டவசமாக அதே பெயரில் ஒரு படத்தில் பரத் நடிக்கிறார்.
எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளையை தயாரித்த நாகிரெட்டியின் மகன் வெங்கட்ரமண ரெட்டிதான் பரத் நடிக்கும் படத்தை தயாரிப்பது. உரிமைக்குரல் பெயராவது கைநழுவிப் போகக்கூடாது என்பதற்காக அந்தப் படத்தை எடுத்த ஸ்ரீதரின் குடும்பத்திடம் முறைப்படி அனுமதி வாங்கும் முயற்சியில் இருக்கிறது விஜய் தரப்பு.
No comments:
Post a Comment