மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கலைத்துறையைச் சேர்ந்த பலரும் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகள் தெரிவித்தனர். எந்திரன் படப்பிடிப்பில் இருந்த ரஜினி தொலைபேசி மூலமாக துணை முதல்வருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment