மாலை 5.30 மணிக்கு நடக்கும் இந்த திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். மாநில தேர்தல் ஆணையர் தா.சந்திரசேகரன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்குகிறார்.
இத்தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் பயன்பாட்டில் இருந்த நிலம் சுமார் 0.5 ஏக்கர் (50 மீட்டர் நீளம் ஒ 41 மீட்டர் அகலம்) தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உரிய வருவாய் நிலமாற்றத்தின்படி ஒப்படைக்கப்பட்டது. ரூ.2.13 கோடி செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் + மூன்று தளம் கட்டுவதற்கு வேண்டிய பைல் பவுண்டேஷன் போடப்பட்டுள்ளது
தற்போது தரைதளம் மற்றும் முதல்தளம் கட்டப்பட்டுள்ளது. கட்டட பரப்பளவு தரைதளம்-505 சதுர மீட்டர், முதல் தளம் - 505 சதுர மீட்டர் ஆக மொத்தம் 1010 சதுர மீட்டர். இக்கட்டடத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், செயலாளர், முதன்மை தேர்தல் அலுவலர், மாநகராட்சி மற்றும் ஊராட்சி, சட்ட அலுவலர், நிர்வாக அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், ஆலோசகர் ஆகியோர்களுக்கு தனித்தனி அறைகளும், மாநாட்டு அறை, நூலகக் கூடம், சாப்பாட்டுக் கூடம் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் கூடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
கட்டடத்திற்கு வெளியே நான்கு வாகன நிறுத்துமிடங்கள், கட்டடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர்கள், கான்கிரீட் சாலைகள், புல்வெளிகள், தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள் மற்றும் வெளி நுழைவு வாயில்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அலுவலக முன்புற முகப்பு மற்றும் சுற்றுச்சுவர்களில் ஸ்தபதிகள் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டடம் பொதுப்பணித்துறையால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம் கட்டும் பணி 31.12.2007 அன்று தொடங்கப்பட்டு 31.3.2009 அன்று முடிக்கப்பட்டது. இக்கட்டடம் ஒரு வருடம், மூன்று மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment