கலங்காதே காதலனே

அன்பின் அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும் தித்திக்க செய்தாய்

இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை இனிதாக்கினாய்
உறங்கும் எனை எழுப்பினாய்
உள்ளத்தின் உணர்வை உளறினாய்

செல்லமாய் செல்லம் என்றாய்
சென்று வருவேன் காத்திரு என்றாய்
பிரிவின் துயரை புரியவைத்தாய்
பிரிந்தே சேர்வோம் என்றாய்

கண்ணீரே வேண்டாம்
கலங்காதே என்றாய்
கண்ணீரை நீ சுமந்து
கண்களால் விடை பெற்றாய்

தொலைவில் இருந்தும்
தொலைபேசியில் அழைக்கிறாய்
தொலைந்த இதயத்தை
தொட்டுச் செல்கிறாய்

தொடர்கிறது நம் காதல்
காலங்கள் சென்றாலும்
காத்திருப்பேன் காதலனே
கலங்காதே…………….!

No comments:

Post a Comment