தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:
அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருமணநாளில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்த தால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால் திருமணத்தை வேறு தேதியில் நடத்தலாமா என்று மணமகளின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதர் சோம்நாத் ஐடியா ஒன்றை கொடுத்தார். செல்போன் மூலம் திருமணம் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து 3 செல்போன்கள் மூலம் இந்த திருமணம் நடந்தது. ஒரு செல்போனில் புரோகிதர் மந்திரம் சொல்ல இன்னொரு செல்போனில் மணமகளும் அசாமில் இருக்கும் மணமகன் மற்றொரு செல்போனில் திருப்பிச் சொல்ல திருமணம் நடந்தது.
40 நிமிடங்கள் புரோகிதர் முன்னிலையில் இந்த செல்போன் நூதன திருமணம் நடந்து முடிந்தது. மறுநாளே மணமகள் தேவஸ்ரீí அசாம் புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment