கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன


வருகிற ஆகஸ்ட் வந்தால் கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆம்... பல ஏற்ற இறங்கங்களைக் கண்ட தனது நடிப்பு வாழ்க்கையின் பொன்விழா ஆண்டில் இருக்கிறார் கமல் இப்போது.

5 வயது சிறுவனாக "களத்தூர் கண்ணம்மா” மூலம் தமிழில் அறிமுகமானவர் கமல். அதன் பிறகு சிறுவனாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைய, உதவி இயக்குநர், நடன உதவியாளர், ஸ்டன்ட் உதவியாளர் என பல வேலைகளை தனது 20 வயதுக்குள் பார்த்துவிட்டார் கமல். நிறைய நிறைய கற்றுக் கொண்டார்.

அதன் பிறகுதான் பாலச்சந்தரின் பொறுப்பில் வந்தார். துக்கடா வேடங்கள், வில்லன், எதிர்மறை நாயகன் என பல வேடங்கள் போட்டவர், அபூர்வ ராகங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் திரையுலக வரலாற்றுப் பக்கங்களில் நிச்சயம் மறைக்க முடியாத சாதனைகள்தான்.

இப்போது திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறார் கமல்.

இந்த பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புத் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருப்பதுதான் அவரது 'உன்னைப்போல் ஒருவன்'.

No comments:

Post a Comment