நகர்ந்த நாட்களில்
என்னை நீதான்
அடையாளப்படுத்தினாய்
உன் மௌனத்தின்
வேர்களில் பூத்திருக்கிறது
என் காதல் பூ
பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..
இப்படியான என்
கனவுகளின் தொடர்ச்சியில்
அலைகள் மறந்த
கடலுக்குள் நாம்...
என நீட்சித்தது
என்னைத் தோற்கடிப்பதாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில் தானடி
நினைக்கிறேன் தோற்காத
நம்முடைய காதலை...........!
மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..
அன்றைய மழை
இன்றுவரை விடாமல்........
காத்திருக்கிறேன்
குடை தருவாயென!
No comments:
Post a Comment