பாரிய 478 காரட் வைரம் கண்டுபிடிப்பு


ஆபிரிக்க நாடான லெஸோதாவில் பாரிய புதிய ரக வைரக்கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டை தீட்டப்படும் பட்சத்தில் மிகப் பெரிய பட்டை தீட்டப்பட்ட வைரமாக இது விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த 478 காரட் வைரமானது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அடர்த்தியான வைரங்களின் வரிசையில் 20ஆவது மிகப்பெரிய வைரமாக இது விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

லெட்ஸெங் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரத்தை பல மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்படுகிறது. பிரித்தானிய அரச ஆபரணங்களில் அங்கம் வகிக்கும் வட்ட வடிவமான 105 காரட் வைரத்தை விட இந்த வைரம் பெரியதாகும்.

இதுவரை இந்த வைரத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

No comments:

Post a Comment