அந்தோனி – யார்?

அன்னம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சி.விஜயகுமார் தயா‌ரித்திருக்கும் படம் அந்தோனி - யார்? இயற்கை படத்துக்குப் பிறகு ஷாம் நடித்திருக்கும் கடல் சார்ந்த கதைக்களம் இந்தப் படம்.

மீனவ இளைஞனாக நடித்திருக்கிறார் ஷாம். அவரது காதலியாக மல்லிகா கபூர். இவர்களுடன் காமெடிக்கென்று சேர்க்கப்பட்டிருப்பவர் விவேக்.

படத்தின் ஆ‌க்சன் காட்சிகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சி அமைத்திருப்பவர் தளபதி தினேஷ். ஷாம் டூப் போடாமல் ஆ‌க்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

ஒரு காட்சியில் குவியலாக மீன்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து மீன்களை வாங்கி காட்சி முடிந்ததும் அப்பகுதியில் மக்களுக்கு இலவசமாக மீனை கொடுத்திருக்கிறார்கள்.

ஒருமுறை கடலில் படப்பிடிப்பு நடந்தபோது கட்டுமரத்திலிருந்து தவறி மல்லிகா கபூர் கடலில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக உடனே காப்பாற்றியதால் ஆபத்தில்லாமல் தப்பித்தார்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். தினா இசையமைத்துள்ளார். பழனிபாரதி, சினேகன், கிருதயா தலா ஒரு பாடல்கள் எழுதியுள்ளனர். யுகபாரதி மூன்று பாடல்கள் எழுதியுள்ளார்.

சி.டி.பாண்டி படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு சான்டோனியோ, எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

1 comment:

  1. ithu per vimarsanam(review) illai thambi,,,
    thagaval(preview) puriyuthaa.... pls

    ReplyDelete