மலையன்

இனிப்பும் நெருப்பும் கலந்த கதை. கந்தக பூமியான சிவகாசியை களமாக்கியிருப்பது இன்னும் பொருத்தம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற பொட்டல் வெளியில், பூ பூத்த மாதிரி விரிந்து கிடக்கிற கரண்-ஷம்மு காதல் இனிப்பு என்றால், வில்லன், வெடிகுண்டு, விரக்தி கூச்சல் என்று அங்கங்கே அடிக்கிறது அக்னி மழை!

பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும் கரணுக்கும், பக்கத்து ஊர் ஷம்முவுக்கும் காதல். ஜெயிப்பார் என்று நம்பி கரண் மேல் பெட் கட்டும் ஷம்மு ஏமாந்து போக, வழிப்பறி கொள்ளைக்காரியாக ஒவ்வொன்றாக லவட்டுகிறார் கரணிடமிருந்து. ஏய்ய்ய்ய்... என்ற ஷம்முவின் ஒரே அதட்டலுக்கு, கப்சிப் ஆகிற கரண் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி கசிய... ஷம்முவின் மனசிலும் மத்தாப்பூ! கல்யாணத்து நாள் குறிக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே ஷம்மு காலி. அதுவும் கரணின் பட்டாசு ஆலை விபத்தில்! இது விபத்தல்ல. சதி என்பது தெரியவர, கரண் என்கிற எமன் எடுக்கிற பாசக்கயிறு, எவனை பதம் பார்க்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் கூட, அதிலும் ஒரு நடிப்புக் கல்லு£ரிக்கே தீனி போடுகிற அளவுக்கு சிலபஸ்சை கக்கும் கரண், இந்த படத்திலும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார். ஷம்முவிடம் தனது சைக்கிளையும் பறிகொடுத்துவிட்டு கேட் ஏறி குதித்து ரகளை அடிக்கிற இடம் கலகலப்பு என்றால், அதே ஷம்முவின் பிணத்தை பார்த்து கதறுகிற காட்சியில் நொறுங்கிப் போக வைக்கிறார் ரசிகர்களின் மனசை. இவருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகளில் முதன்முறையாக பொருட்செலவும் பிரமாண்டமும் வெளிப்பட்டிருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை தைரியமா எடுத்து வைங்க பாஸ§!

ஆம்பளை பசங்க மாதிரி ஷம்மு அடிக்கிற லு£ட்டி என்ன? அப்பன் மேலேயே இடித்துக் கொண்டு போகும் அசால்ட் என்ன? அழகை து£க்கி அந்த பக்கம் போடுங்க. தமிழ்சினிமாவில் நடிக்க தெரிந்த இன்னொரு நடிகை வந்தாச்சு. ருசியை விடுங்கள், ஊறுகாயின் நெடி கூட அடிக்கவில்லை உதயதாராவிடம். மொத்தத்தில் ஜூ.ஆ அவ்வளவு நல்லவராக வரும்போதே தெரிகிறது. இவர்தான் வில்லனாக இருப்பார் என்று. சரத்பாபுவின் வில்லத்தனத்தில் செயற்கையே அதிகம். கஞ்சா கருப்பு, மயில்சாமி என்று கலகலப்புக்கும் கியாரண்டி இருக்கிறது.

பட்டாசு கம்பெனி வாரிசாக நடித்திருக்கும் சக்தி குமார், விரும்பினால் வெற்றிப்பட வில்லனாக ஒரு சுற்று வரலாம்.

தினாவின் இசையில் தெரிஞ்சா சொல்லுங்க அசத்தல். பொட்டல் பட்டி, உன்னைப்போல இரண்டும் மனசை அள்ளிக் கொண்டு போகிற ட்யூன்கள். பின்னணி இசைதான் வழக்கம் போல தப்பட்டை!

அனல் அரசுவின் சண்டைகள் ஒவ்வொன்றும் சிவகாசி சரவெடி.

மலைக்க வைத்திருக்கிறான் மலையன்

No comments:

Post a Comment