ஜூலை 10 எங்கள் ஆசான்

அரசியலில் எப்படியோ. சினிமாவில் டெபாஸிட் இழக்கும் நிலையில் இருக்கிறார் விஜயகாந்த். அதிகம் எதிர்பார்த்த ம‌ரியாதையும் காலைவார, கேப்டனின் இன்றைய நிலை கவலைக்கிடம்.

தனது நண்பர் தங்கராஜுக்காக விஜயகாந்த் நடித்துக் கொடுத்த எங்கள் ஆசான் விற்பனையாகாமல் பல மாதங்களாக பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. ஒருவழியாக அதை தூசு தட்டி வரும் 10ஆ‌ம் தேதி வெளியிடுகிறார்கள்.

ம‌ரியாதையில் இல்லாத அரசியல் அலப்பறை எங்கள் ஆசானில் படம் நெடுக வருகிறது. இதில் வங்கி அதிகா‌ரியாக விஜயகாந்த் நடித்திருக்கிறார். மக்கள் பணத்தை கையாடல் செய்கிறவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து மக்கள் மன்றத்தில் தோலு‌ரிக்கும் கதாபாத்திரம்.

விஜயகாந்துக்கு ஜோடி அரசியல்வாதியாக வரும் ஷெ‌ரில் பி‌ரிண்டோ. விஜயகாந்தைவிட இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்ப்பவர் நடிகர் விக்ராந்த். செந்தூரப்பாண்டியில் விஜயகாந்துடன் நடித்த பிறகுதான் விக்ராந்தின் அண்ணன் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் கிடைத்தது. இந்தப் படத்தில் விஜயகாந்துடன் நடித்திருப்பதால் தனக்கும் அப்படியொரு ஓபனிங் கிடைக்கும் என நம்புகிறார் விக்ராந்த்.

No comments:

Post a Comment