தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்! :

""அமைச்சரவை மாற்றம் உறுதியா இருக்கும் வே... ஆனா, இப்ப இல்லை...!'' என பேச ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""மத்திய அமைச்சரவையிலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய். ""தமிழக அமைச்சரவை தான் வே... சட்டசபை முடிஞ்சதும் மாற்றம் இருக்கும்ன்னு பேச்சு இருந்தது... இடைத்தேர்தல் அறிவிச்சதால, அந்த முடிவு தள்ளிப் போவுது... தேர்தலுக்கு அப்பறம் தான் மாற்றம்ன்னு சொல்றாங்க... தேர்தல்ல ஜெயிச்சா, கோவை கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும்... முதல்வர்கிட்ட இருக்கும் பொதுப்பணித் துறை வேறு மூத்த அமைச்சருக்கு போவும்...
""துணை முதல்வர் அமெரிக்கா போகும் திட்டத்திலும் மாற்றம் இருக்குமாம்... அவர், 24ம் தேதி கிளம்பி, ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை வர்றதா இருந்தது... இடைத்தேர்தல் 18ம் தேதி நடக்குது... இடையில் 15ம் தேதி சுதந்திர தின விழா, 16ம் தேதி பிரசாரம் முடியறதால, துணை முதல்வர் பிரசாரம் செய்யும் வாய்ப்பு குறையுது... அதனால, அமெரிக்க பயணத்தை தள்ளி வைக்க அல்லது முன்கூட்டியே திரும்ப ஆலோசனை நடக்கு...'' என்றார் அண்ணாச்சி.

""சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் செய்யும் முடிவுல தீவிரமா இருக்காங்க...'' என அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.

""பாலாறு விவகாரத்திலா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

""அதில்லைங்க... சட்டசபையில் பி.டி.ஆர்., சபாநாயகரா இருந்தப்ப 18 பேரை தற்காலிகமா வேலைக்கு சேர்த்தார்... அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் அவங்களை வீட்டுக்கு அனுப்பினாங்க... கோர்ட்ல வழக்கு போட்டு, வேலையில சேர்ந்துட்டாங்க...

""அதே மாதிரி, காளிமுத்து சபாநாயகரா இருந்தப்ப 18 பேரை நியமிச்சார்... அவங்களை இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பியது... முந்தைய கோர்ட் தீர்ப்பை காட்டி, இவங்க வழக்கு போட்டாங்க... வேலையில் சேரச் சொல்லி ஐகோர்ட் தீர்ப்பளிச்சது... அதை எதிர்த்து அப்பீல் செய்தாங்க... அதிலும் ஊழியர்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருச்சுங்க... ஆனாலும், சுப்ரீம் கோர்ட்ல வழக்கு போட்டு, இவங்களை சேர்க்காம தடுக்க சட்டசபை செயலகம் தீவிரமா இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""சினிமாகாரங்களுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க பா...'' என கட்சி விவகாரத்துக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

""இந்த முடிவை எடுத்தது யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""அ.தி.மு.க.,வுல தான் இந்த முடிவை எடுத்திருக்காங்க பா... அந்த கட்சியில நிறைய சினிமா பிரமுகர்கள் இருக்காங்க... கட்சிக்கு விசுவாசமா இருக்கறவங்க ஒரு சிலர் தான்... மத்தவங்க எல்லாம் பதவி கிடைச்சா தான் தங்கள் விசுவாசத்தை காட்டறாங்க... இதுகுறித்து கட்சிக்கு நிறைய புகார் போயிருக்கு...

""தி.மு.க.,வுல பேச்சாளரா இருந்த ராதாரவி இங்க வந்ததும் எம்.எல்.ஏ., ஆனாரு... தேர்தல்ல சீட் கிடைக்கலைன்னு தெரிஞ்சதும் தி.மு.க.,வுக்கு தாவிட்டாரு... சரத்குமார், ராதிகா தனிக்கட்சி ஆசையில வெளியில போயிட் டாங்க... இந்த வரிசையில எஸ்.வி.சேகர், முரளி எல்லாரும் விலகி போ யிட்டு இருக்கறதா கட்சி மேலிடத்துக்கு புகார் போயிருக்கு பா... அதனால இனி எந்த நடிகருக்கும் கட்சியில முக்கியத் துவம் கொடுக்க வேண் டாம்னு கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்காம் பா...'' எனக் கூறிவிட்டு கிளம்பினார் அன்வர்பாய்; பெஞ்சில் அமைதி திரும்பியது.

No comments:

Post a Comment