வால்ட் டிஸ்னி 19 steps படத்திலிருந்து கமல் விலகல்

வால்ட் டிஸ்னி நிறுவனம் இயக்குனர் பரத்பாலாவுடன் இணைந்து தயா‌ரிப்பதாக இருந்த படம் 19 ஸ்டெப்ஸ். கேரளாவின் பாரம்ப‌ரிய தற்காப்பு கலையான கள‌ரியை மையமாக வைத்து தயாராவதாக இருந்த இந்தப் படத்தில் கள‌ரி ஆசானாக கமல் நடிப்பதாக கூறப்பட்டது.

அசின் இளவரசியாகவும், அவர் காதலிக்கும் ஜப்பான் நாட்டு இளைஞராக ஜப்பான் நடிகர் Tadanobu Asano நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்காக கேரளாவில் கள‌ரி பயிற்சி எடுத்துக் கொண்டார் அசின். படத்தின் திரைக்கதையை எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதுவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

படக்குழுவினர் ஜப்பான் கிளம்புவதற்கு தயாரான நிலையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பரத்பாலா படப்பிடிப்பை கேரளாவில் விரைவில் தொடங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால், 19 ஸ்டெப்ஸ் படமே கைவிடப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் உலவுகின்றன. கள‌ரி ஆசானாக நடிக்க ஒப்புக்கொண்ட கமல் அந்த வேடத்தில் நடிக்க மறுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக படமே கைவிடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கமல் எதுவும் கருத்து தெ‌ரிவிக்காதது போலவே பரத்பாலா தரப்பும் மவுனம் சாதிக்கிறது.

முதல் ஸ்டெப்பே எடுத்து வைக்காத நிலையில் 19 ஸ்டெப்ஸ் கைவிடப்பட்டது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment