இனி எஸ்.எம்.எஸ்., மூலம் ஆரோக்கிய குறிப்புகள்

"வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், மொபைல் போன் உபயோகிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யுனிவர்செல், "மெடி அலர்ட்' எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது' என, யுனிவர் செல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பரத் கூறினார். மொபைல் போன் மூலம் ஆரோக்கிய குறிப்புகளை அனுப்பும் சேவையான, "மெடி அலர்ட்' சேவை துவக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

ரமேஷ் பரத் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், மொபைல் போன் உபயோகிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், "மெடி அலர்ட்' எனும் புதிய சேவையை யுனிவர் செல் தொடங்கி உள்ளது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சி, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் போன்றவை எஸ்.எம்.எஸ்., மூலம் அவ்வப்போது நினைவுபடுத்தப்படும். வயதான பெற்றோர் மற்றும் சிறு குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். ஒரு நாளுக்கு 55 காசு வீதம் ஆறு மாதத்திற்கு 99 ரூபாய் கட்டணமாக பெறப்படும்.

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் இவை மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள் ளிட்ட தென் மாநிலங்களில் யுனிவர்செல் தனி முத்திரை பதித்துள்ளது. அதே போல் விரைவில் இந்தியா முழுவதும் தனது சேவையை விரிவாக்கும். தற்போது, மாதத்திற்கு ஒரு லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த புதிய சேவையின் மூலம் விற்பனை மேலும் உயரும். இவ்வாறு ரமேஷ் பரத் கூறினார். இந்நிகழ்ச்சியில் பர்பிள்டீல் தலைமை அதிகாரி நாராயண ராம், யுனிவர்செல் நிறுவனத்தின் முதன்மை தலைமை அலுவலர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment