லாஸ்ஏஞ்சல்ஸ் : வெங்காயத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும், என அமெரிக்க நிறுவனம் நிரூபித்துள்ளது.
கண்ணீரை வரவழைக்கக்கூடிய வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாது மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வெங்காயம் மின்சாரம் தயாரிக்கவும் உதவுவதாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "ஆக்ஸ்னார்டு' நிறுவனம் கண்டு பிடித் துள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவன் கில் குறிப்பிடுகையில், " முதலில் வெங் காய தோல்களை மண்ணில் இட்டு உரமாக்கி அதிலிருந்து மின்சாரம் தயாரித்து வந்தோம். ஆனால், அந்த முறையில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது, வெங்காயத்தை செடியில் இருந்து பறித்த உடனே, அரைத்து சாறு எடுத்து விடுகிறோம். இந்த சாற்றில் சர்க்கரை சத்து உள்ளதால் பாக்டீரியாக்களால் வேதி பொருளாக மாறுகிறது. இந்த வெங்காய சாற்றிலிருந்து மீதேன் வாயு உருவாகிறது. இதை 300 கிலோ வாட் பேட்டரியில் பயன்படுத்தினால் 460 வீடுகளுக்கு பயன்படுத்தும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இந்த முறையில் உருவாக்கப்பட்ட மின்சாரத்தினால், எங்கள் நிறுவனத்தின் 40 சதவீத தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம்' என்றார்.
No comments:
Post a Comment