குப்பையை அள்ளுவது நீயா, நானா போட்டியில்

குப்பை அள்ளுவது நீயா? நானா? போட்டியில் தீர்வு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அள்ள பொறியியல் பிரிவுக்கு சில வார்டுகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன.
சென்னையில் மாநகராட்சி குப்பைகளை அகற்ற பொறியியல் பிரிவில் தனி பிரிவு (திடக்கழிவு மேலாண்மை) உள்ளது. இதை வைத்து குப்பைகளை பொறியியல் பிரிவு அள்ள வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. நடைமுறையில் இது மற்ற மாநகராட்சிகளில் அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் குப்பைகளை அள்ளுவது நீயா? நானா? என சென்ற மாதம் மதுரை மாநகராட்சியில் சர்ச்சை ஏற்பட்டது. ""குப்பைகளை பொறியியல் பிரிவு தான் அள்ள வேண்டும். இனிமேல் நாங்கள் அள்ள மாட்டோம்"" என சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்தனர்.
""எங்களுக்கு ஏற்கனவே வேலைப்பளு அதிகம். குப்பையை எப்படி அள்ளுவது?'" என பொறியியல் பிரிவினர் பதில் கேள்வி எழுப்பினர். ""எப்போதோ வெளிவந்த அரசாணையை வைத்துக் கொண்டு பேசக் கூடாது. குப்பைகளை சுகாதார பிரிவினர் தான் அள்ள வேண்டும்'" என கமிஷனர் செபாஸ்டின் அறிவித்தார்.
இதுவரை ஒரு சுகாதார ஆய்வாளர் மூன்று அல்லது நான்கு வார்டுகளை கவனித்து வந்தார். வேலைப்பளு அதிகம் இருந்தது. இந்த சர்ச்சைக்கு முடிவு காணும் விதத்தில் சில வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சில வார்டுகளில் குப்பைகளை அள்ளும் பொறுப்பு பொறியியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள்:

வடக்கு மண்டலம்:
சுகாதார ஆய்வாளர் வார்டு எண்
1.ஜேம்ஸ்ஜான் பெர்க்மான்ஸ்  - 1, 21
2.ரெகுநாதன்  - 18, 20
3.சண்முகநாதன்  - 15, 14, 17
4.சிவசுப்பிரமணியன்  - 11, 12, 13
5.முத்துராயர்  - 3, 5
6.சரவணன்  - 6, 7, 8, 16
7.சேதுராம்  - 9,10, ஜி.எச்.,
8.இளங்கோ  - 2, 19
9.சுரேந்திரன்  -4,  பிறப்பு/இறப்பு பதிவு
தெற்கு மண்டலம்:
10.ஜெகதீசன்  - 32, 33, 34
11.அர்ச்சுணன்  - 38, 39, 43
12.ராஜா  - 35, 36, 37
13.ராஜ்கண்ணன்  - 60, 61
14.கோபால்  - 41, 63, 64, 65
15.மனோகரன்  - 42, 62
16.ராமலிங்கம்  - 31, 40
கிழக்கு மண்டலம்:
17.முத்துச்சாமி  - 44, 45
18.ரத்தினகுமார்  - 48
19.சந்திரன்  - 46, 56, 57
20.தாமஸ் பாஸ்கர லீலன்  - 47, 49
21.வெங்கடசாமி  - 50, 51, 54
22.முரளிதரன்  - 52, 53, 55
23.ஆறுமுகம்  - 58, 59
மேற்கு மண்டலம்:
24.தங்கப்பாண்டியன்  - 22, 23
25.விஜயகுமார்  - 24, 26, 27
26.முருகன்  - 29, 30
27.சந்திரமோகன்  - 28
28.வீரன்  - 66, 67, 68
29.ராமகிருஷ்ணன்  - 69, 70
30.ரமேஷ்  - 71, 71
31. அப்பாஸ் அலி  - 25
32.நாகராஜன்  -தலைமையிட பிறப்பு/இறப்பு பதிவாளர்
இளநிலை பொறியாளர்/வார்டுகள்
33.பாலையா  - 15
34.தியாகராஜன்  - 13
35.சந்தானம்  - 8
36.சோனை  - 10
37.ஆறுமுகம்  - 24
38.துர்காதேவி  - 34
39.சுரேஷ்குமார்  - 43
40.ஆர்.முருகன்  - 36
41.அருள் சகாய சேவியர்  - 41
42.மயிலேறிநாதன்  - 65
43.பி.மணி  - 50
44.மல்லிகா  - 52
45.முனீர் அகமது  - 56
46.பாபு  - 68
""தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்களும், மற்ற வார்டுகளில் பொறியியல் பிரிவினரும் திடக்கழிவு மேலாண்மையை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது'" என மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை அள்ளப்படவில்லை என்றால் பொதுமக்கள் இவர்களை அணுகலாம்.

1 comment: