கிவ் இண்டியா இணையதளம், ஜாய் ஆஃப் கிவ்விங் வீக் என்ற புரோகிராமை சென்னை பார்க் ஹோட்டலில் நடந்த விழாவில் அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்குத் தருவேன் என பலத்த கைத்தட்டலுக்கு நடுவே தெரிவித்தார். இந்த தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக ஏழை எளியவரை சென்றடையும்.
மாதம் ஒருமுறை ஏதேனும் தொண்டு நிறுவனத்துடன் நேரத்தை செலவிடுவதாக முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார் சூர்யா.
No comments:
Post a Comment