அடுத்த படம்? ஹாட் சேல்ஸ் நாயகன் சசிகுமார் பதில்!

சுப்ரமணியபுரத்தில் இயக்குனர், பசங்க படத்தில் தயாரிப்பாளர், நாடோடிகள் படத்தில் ஹீரோ! இப்படி முக்கடலில் குளித்து முத்தெடுத்திருக்கிறார் சசிக்குமார். இந்த ஹாட்ரிக் நாயகன்தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் சேல்ஸ் நாயகனாகவும் ஆகியிருக்கிறார். நான் முழு நேர நடிகனல்ல. இனி நடிப்பதை விட, இயக்குவதில்தான் அதிக கவனம் செலுத்துவேன் என்று சசி பளிச்சென்று கூறிவிட்டாலும், நான் நீ என்று கதை சொல்ல க்யூ கட்டி நிற்கிறார்கள் சசி ஆபிசில். அடுத்தது என்ன? நடிப்பா, டைரக்ஷனா? ஒரு குழப்பமும் வேண்டாம். டைரக்ஷன்தானாம்.

அப்படின்னா முன்னணி ஹீரோக்களை வச்சு எடுப்பாரு போலிருக்கு! இந்த ஐயங்களுக்கு படார் திடீர் என்று பதில் சொல்லி அசத்துகிறார் சசிகுமார். சார், முன்னணி ஹீரோக்களை வச்சு படம் எடுக்கணும்ங்கிற ஆசை எனக்கு இல்லை. நான் கொஞ்சம் அமைதியான டைப். பெரிய ஹீரோக்களோட சேர்ந்து வொர்க் பண்ணனும்னா அவங்களோட மூட் தெரிஞ்சு பேசணும். என்ன நினைப்பாங்களோ, எப்படி எடுத்துப்பாங்களோன்னு அவங்களுக்காக சிந்திக்கணும். வந்தா எழுந்திருச்சு நிக்கணும். இப்படியெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் இருந்தாலே படத்தை பற்றி சிந்திக்கறதை விட்டுட்டு நம்ம கவனம் முழுக்க இதிலேயே போயிரும்.
அதனால...?

“அதனால, புதுமுகத்தை வச்சுதான் சார் நம்ம அடுத்த படமும்!”

ஒத்த வார்த்தை சொன்னாலும் நெத்தியடியா இருக்குங்க சாரு...!

No comments:

Post a Comment