ஜோதா அக்பர் படத்துக்கு 7 விருது  

சீனாவில் உள்ள மகாவு நகரில் 10-வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஜோதா அக்பர் படத்துக்கு 7 விருது கிடைத்து உள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடகர், சிறந்த பாடலாசியர் என 7 விருது அந்த படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோசன் (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றார். சிறந்த நடிகையாக பிரியங்கா சோப்ரா (பேஷன்) தேர்வு பெற்றார். “ஜோதா அக்பர்” சிறந்த படமாக தேர்வு பெற்றது. சிறந்த டைரக்டருக்கான விருது அசுதோஸ் கவுரிகருக்கு (ஜோதா அக்பர்) கிடைத்தது.

இரட்டை ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருது கிடைத்தது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை (ஜோதா அக்பர்) ஆகிய விருதுகள் கிடைத்தன. சிறந்த புதுமுக நடிகையாக அசின் (கஜினி) தேர்வு பெற்றார். சிறந்த பாடகருக்கான விருது ஜாவித் அக்தருக்கும், சிறந்த பாடகிக்கான விருது ஷிரேயா கோஷலுக்கும் (சிங்கிஸ்கிங்) கிடைத்தது. சிறந்த பாடலாசிரியராக ஜாவித் அக்தர் (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றார்.
 
நிகழ்சசியின்போது 10 ஆண்டின் சிறந்த விருதும் வழங்கப்பட்டது. இதில் சிறந்த படமாக லகான் தேர்வு பெற்றது. 10 ஆண்டின் சிறந்த நடிகராக ஷாருக்கான், நடிகையாக ஐஸ்வர்யாராய், டைரக்டராக ராகேஷ் ரோசன் தேர்வு பெற்றனர்.

No comments:

Post a Comment