மூணாறு: இடுக்கி மாவட்டம் பூப்பாறை பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு ராஜமலை, மறையூர், வட்டவடை போன்ற பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் காலம் தவறாமல் பூத்து வருகின்றன.
கடந்த 2006ல் மூணாறில் குறிஞ்சி பூக்கள் பூத்தபோது வனத்துறையினர் சார்பில் குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. அப்போது, ராஜமலையில் பூத்துக்குலுங்கிய நீலக்குறிஞ்சி பூக்களை ஒரு மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், தற்போது பூப்பாறை அருகே கழுதைகுளம் மேட்டில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. மூணாறு - குமுளி ரோட்டில் பூப்பாறையில் இருந்து 9 கி.மீ., தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது.
No comments:
Post a Comment