ஜூலையில் வெளியாகும் படங்கள்

ஒரு டஜன் படங்கள் வரும் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. இந்த வருடத்தின் தமிழ்‌த் திரையுலகின் லாப நஷ்டத்தை தீர்மானிக்கும் மாதமாக ஜூலை இருக்கும் என்பதே விநியோகஸ்தர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கணிப்பு.

ஜூலை 3ஆ‌ம் தேதி பா.விஜய்யின் ஞாபகங்கள் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து உன்னை கண் தேடுதே, கரண் நடித்திருக்கும் மலையன், பசுபதி, வடிவேலு நடித்திருக்கும் ஏ.‌ஜி.மூர்த்தியின் வெடிகுண்டு முருகேசன், ஜெய்யின் வாமனன், விஜயகாந்தின் எங்கள் ஆசான், சிந்தனை செய், ராசி அழகப்பனின் வண்ணத்துப் பூச்சி ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.

இவற்றுடன் கந்தசாமி உள்பட மேலும் பல படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவன், சதா நடித்திருக்கும் நான் அவள் அது படத்தையும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சஞ்சய் ராம் தனது லிங்கம் தியேட்டர்ஸ் சார்பில் எடுத்திருக்கும் பூவா தலையா படத்தையும் ஜூலையில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

2 comments:

  1. அப்ப நிறைய செலவு இருக்கு

    ReplyDelete
  2. னானே நானா மு்த்்ல்வன்

    ReplyDelete