பிரியங்கா சோப்ராவின் லவ் லிஸ்ட்  



என்னை எனக்காக நேசிப்பவர் தான் எனது கணவராக முடியும் என பாலிவுட் புயல் பிரியங்கா சோப்ரா தனது வருங்கால கணவர் குறித்து கூறியுள்ளார். எனக்கு கணவராக வருபவருக்கு உண்மையான அன்பு செலுத்த தெரிந்தால் மட்டும் போதும். நான் முக்கியமானவள் என என்னை உணரச்செய்ய வேண்டும். அவரோடு இருக்கும் போது எனக்கு காற்றில் மிதப்பது போல் தோன்ற வேண்டும் . அன்பு... அன்பு... அன்பு இதை மட்டுமே காட்ட தெரிந்தவரே எனது கணவராக வர முடியும் என லவ் லிஸ்ட் கொடுத்துள்ளார் பிரியங்கா.

அண்மையில் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடிய குஷியில் இருக்கும் பிரியங்கா அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் இன்டஸ்ட்ரீயில் தன் பயணம் குறித்து சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன்பு, தான் ஒரு மோசமான நடிகையாக இருந்ததாகவும், குடும்பத்தாரின் ஆதரவும், தனது கடின உழைப்புமே தன்னை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளதாகவும் ‌பெருமிதம் பொங்க கூறியுள்ளார். ஆனால் இந்த 6 ஆண்டுகளில் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். இன்னமும் எனது பசி தீரவில்லை. தண்ணீரில் போட்ட ஸ்பாஞ் போல எப்போதும் பாடம் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். கிசுகிசுக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, கிசுகிசுக்களால் தான் நிச்சயமாக வருந்துவதாகவும், அ‌தே சமயத்தில் அவற்றால் தனது உத்வேகம் பாதிக்கப்படாது எனவும் ஸ்ட்ராங்காக கூறுகிறார் பிரியங்கா.

No comments:

Post a Comment