காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து: காங்., 'பகீர்'

சென்னை : ""நிலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் குற்றஞ்சாட்டினர்.

சட்டசபையில், காவல்துறை மானியத்தின் மீது, காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் சுதர்சனம் பேசியதாவது:மதுரையில் கூஜா வெடிகுண்டுகள் பிடிபட்டுள்ளன; வெடிகுண்டு கலாசாரம் பெருகினால், விபரீத விளைவுகள் ஏற்படும். காவல்துறை அதிகாரிகளின் திறமைக் குறைவுதான், நக் சல்கள் ஊடுருவ காரணம்.சென்னையில் ரயிலை கடத்திய தீவிரவாதி யார் என்பதை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்த வேண் டும். நிலம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இது ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்துகிறது.சாலைகளில் பயணிக்கும் காவல் துறை வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அவர்களின் வாகனங்கள், குடும்பத்தினருக்கு பயன்படுவதைத் தடுக்க வேண் டும்.பொதுமக்களை, வாகன ஓட்டிகளை மிரட்டி காவல்துறையினர் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும். இப்படி செய்பவர்களை காட்டிக் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற பெயரில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து காவலர்களுக்கு, "ரிஸ்க் அலவன்சை' அதிகரிக்க வேண்டும். வழக்குகள் உள்ளிட்டவற்றிற்காக சென்னை வரும் காவலர்கள் தங்க விடுதி கட்டி, குறைந்த வாடகையில் தர வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் காவல்துறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை மையம் (நார்கோ லேப்) அமைய நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அந்த சோதனை மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் கொடுத் தால் கூட கொலை செய்ய கும்பல் தயாராக இருக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. காவல்துறையில் நேர்மையாக செயல்படும் அதிகாரிக்கு, "கக்கன்' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.இவ்வாறு சுதர்சனம் பேசினார்.

No comments:

Post a Comment