சானாகானுக்கு முதல் விருது!
சிலம்பாட்டம் படத்தில் பிராமனப் பெண்ணாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவர் சானாகான். இவருக்கு சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றில் விருது கிடைத்துள்ளது. இந்த விருது தனக்கு கிடைத்த முதல் விருது என பெருமிதம் பொங்க கூறியிருக்கும் சானாகான், பரத்துடன் ஜோடி சேர்ந்துள்ள தம்பிக்கு இந்த ஊரு படத்தில் துறுதுறு சுட்டிப் பெண்ணாக நடித்து வருவதாக கூறினார். இதனை தான் நடிக்கும் மூன்றாவது படமான சாந்துப்பொட்டில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்த சாந்துப்பொட்டு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டிருக்கும் சானா, பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக ரோப் ஷாட்டுகளிலும் கலக்கியிருக்கிறாராம். தமிழில் கைவசம் மூன்று படம் வைத்துள்ள அம்மனிக்கு , தெலுங்கில் தடம் பதிக்க 2 வாய்ப்புகள் பரிசீலனையில் உள்ளனவாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment