இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழும் உரிமை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ள குஷ்பு, இந்த தீர்ப்பு நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேலும் உயர்த்திக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறினார்.
சென்னை மக்களும் ஓரினச்சேர்க்கை பற்றி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் பெரும்பாலும் நம் நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மாறுதலை விரும்பமாட்டார்கள் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
ஆனாலும் நம் நாட்டில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று கூறிய குஷ்பு, இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
No comments:
Post a Comment