வேட்டைக்கு தயாராகும் ‌‌J.K.ரித்தீஷ் M.P

எம்பியாக பதவியேற்ற முதல் நாளே கலக்கல் காஸ்ட்யூமில் சோனியா காந்தியையே யார்யா இது என்று கேட்க வைத்தவர் ஜே.கே.‌‌ரித்தீஷ். சும்மாவே போஸ்டர் அடித்து ஒட்டுகிறவர் சென்ட்ரல் பாலிடிக்ஸில் புகுந்தால் சும்மாயிருப்பாரா? ஒட்டு மொத்த இந்தியாவை கலங்கடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

நாயகன் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிவிட்டவர் அடுத்து வேட்டை புலி என்ற படத்தில் நடிக்கிறார். முன்பென்றால் புலியை உள்ளூ‌‌ரில் மட்டும் உலவவிட்டால் போதும். இப்போதோ எம்பி. இந்தியாவுக்கே தெ‌ரிய வேண்டாமா ஒரு எம்பியின் நடிப்பு திறமை. அதற்கு ச‌ரியான வழி படத்தை இந்தியிலும் எடுப்பதுதான் என ஒரு விசுவாசி எடுத்துக் கொடுக்க அதுபற்றி சீ‌‌ரியஸாக திங்க் பண்ணிக் கொண்டிருக்கிறார் ‌‌ரித்தீஷ்.

அனேகமாக வேட்டை புலி இந்தியிலும் கர்‌ஜிக்கலாம் என்பதுதான் நிலைமை. இதற்காகவே இந்தி டியூசனுக்கு போய் வருகிறாராம். தமிழ் மக்கள்தான் பாவம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் சோகத்தில் பங்குகொள்ள இனி இந்தி பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். நல்ல சேதிதானே இது.

1 comment:

  1. புலி புளி ஆகாமல் இருந்தால் சரித்தான்

    ReplyDelete