ஏற்காடு கோடை விழா ஜூன் 5ல் தொடக்கம்

சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை‌க் கவரு‌ம் வகை‌யி‌ல் ஏற்காடு கோடை விழா ஜூன் 5ம் தேதி தொடங்‌கி மூன்று நாட்கள் நடைபெற உ‌ள்ளது.

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா மே மாதம் 3 அல்லது 4 வது வாரத்தில் நடக்கும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணிகளில் மூழ்கியது. இதனால் நடப்பாண்டில் கோடை விழா நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

ஏற்காட்டின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட ஏற்காடு ஏரியில் தூர் வாரும் பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. கோடை விழாவையட்டி நடக்கும் மலர் கண்காட்சிக்கான மலர்களை தயார் செய்யும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் கோடை விழா ஜூன் 5ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சந்திரகுமார் நேற்று அளித்த பே‌ட்டி‌யி‌ல், மக்களவை தேர்தல் பணியால் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது சந்தேகமாக இருந்தது. இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக ஊட்டி கோடை விழாவும் இந்த ஆண்டு தாமதமாக நடக்கிறது. கோடை விழா தாமதமாக தொடங்கினாலும் கடந்த ஆண்டு விழாவில் இடம் பெற்ற அத்தனை அம்சங்களும், இந்த ஆண்டும் இருக்கும் எ‌ன்று சந்திரகுமார் கூறினார்.

No comments:

Post a Comment