‌ஸ்டா‌லினை வா‌ழ்‌‌த்‌தி எஸ்.வி.சேகர் பேச்சு : அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெ‌ளிநட‌ப்பு

துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லினை அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌‌வி.சே‌க‌ர் வா‌ழ்‌த்‌தி பே‌சியத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

தமிழக சட்ட‌ப்பேரவை கூட்ட‌ம் இன்று காலை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து நிதி அமைச்சர் அன்பழகனை பேசும்படி அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் அழைப்பு விடுத்தார்.

அ‌ப்போது அ.இ.அ.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று பாராளுமன்ற தேர்த‌‌லி‌ல் முறைகேடு நட‌ந்தது ப‌ற்‌‌றி பேசுவத‌ற்கு அனுமதி கேட்டனர்.

அதற்கு அவை‌த் தலைவ‌ர், அமைச்சர் அன்பழகன் பேசிய பிறகு பேச அனுமதி வழங்கப்படும் என்றார். இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து அ.இ.அ.தி.மு.க.வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் இதை ஏற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

ஆனா‌ல் அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யவில்லை. இதையடுத்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன், பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி.சேகர் வாழ்த்தி பேசுவார் என்று அவை‌த் தலைவ‌ர் அறிவித்தார். உடனே அவர் எழுந்து நின்று எனது நண்பர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர். அவரை வாழ்த்துகிறேன் என்றார்.

அ‌ப்போது அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் மீண்டும் அவைக்குள் வந்து எஸ்.வி.சேகருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அ‌ப்போது பே‌சிய அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் செ‌ங்கோ‌ட்டைய‌ன், கொறடா உ‌த்தரவு இ‌ன்‌றி எ‌ஸ்.‌வி.சேக‌‌ர் பேச அனும‌தி‌க்க கூடாது எ‌ன்றா‌ர்.

‌தொட‌ர்‌ந்து எ‌ஸ்.‌வி.சேக‌ர் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்ததா‌ல் அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌‌ர்க‌ள் அம‌‌ளி‌ல் ஈடுப‌ட்டு 2வது முறையாக வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

No comments:

Post a Comment