கடந்த ஆண்டுக்கான விருதுகள் எங்கு எப்போது வழங்கப்படுகின்றன என்பது குறித்து நேற்று நடந்த பத்திரிகையார்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. விழா குறித்து பேசிய பிலிமஃபேர் பத்திரிகையின் ஆசிரியர் ஜித்தேஷ் பிள்ளை, ஜூலை 31 ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான விருதுகள் ஹைதராபாத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் என்றார்.
பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். சென்ற ஆண்டு சென்னையில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்தமுறை ஹைதராபாத். இந்த சுழற்சி முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று ஜித்தேஷ் பிள்ளை குறிப்பிட்டார். இந்த அறிவிப்பின்போது நடிகை சினேகாவும் உடனிருந்தார்.
No comments:
Post a Comment