எல்.ஐ.சி ஹவுசிங் பங்கு விற்பனை

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட், எல்.ஐ.சி எம்எப் டிரஸ்ட் நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதாக முடிவெடுத்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலமாக ரூ.138 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கு எல்.ஐ.சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் இருந்து யூனிட்டுகளை வெளியிட்டு திரட்டப்படும் நிதியை நிர்வகிக்கும் நிறுவனமான எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தில் மொத்தம் 3500 பங்குகள் உள்ளன.இதில் 1730 பங்குகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

இதே போல் எல்.ஐ.சி மியூச்சுவல் பண்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் 3600 பங்குகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் கேர் ஹோம்ஸ். இதற்கு எல்.ஐ.சி மியூச்சுவல் பண்ட் டிரஸ்ட்டில் 1200 பங்குகள் உள்ளன. இதை முழுவதுமாக விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

ஜி.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விற்பனை


இதே போல் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் (ஜி.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் ), எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட், எல்.ஐ.சி எம்எப் டிரஸ்ட் நிறுவனங்களில் உள்ள எல்லா பங்குகளையும் ரூ.89 கோடிக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன.

ஜி.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எல்.ஐ.சி எம்எப் அஸட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தின் 11.2 விழுக்காடு பங்குகளையும், எல்.ஐ.சி எம்எப் டிரஸ்ட் நிறுவனத்தின் 3 விழுக்காடு பங்குகளை ரூ.89 கோடிக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment