விஜய்க்கு இந்த விவகாரம் தெரிந்தாலும், தோரணையில் இது கொஞ்சம் தூக்கலா இருக்கு என்று நலம் விரும்பிகள் சொன்ன தகவல் அவரையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.
அப்படி என்னதான் தோரணையில் விஷால் செய்திருக்கிறார் என்பதை அறிய விஜய்க்கு ஆர்வம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மளமளவென நடந்தேறின.
இரவு காட்சிக்கு வடபழனி ஏவிஎம் திரையரங்கில் விஜய் படம் பார்க்க ஏற்பாடானது. தனது பிஆர்ஓ செல்வகுமாருடன் தோரணை படம் பார்க்க வந்தார் விஜய். அவருக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த விஜய் படம் முடிவதற்கு சற்றுமுன் அங்கிருந்து கிளம்பினார். படம் முடிந்த பிறகு கிளம்பினால் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்களே.
சரி, படம் விஜய்க்கு பிடித்திருந்ததா? அதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு தமிழ் இன்டஸ்ட்ரி என்ன ஆரோக்கியமாகவா இருக்கிறது? படம் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.
No comments:
Post a Comment