மது விரோதன்

குடித்து விட்டு
கூத்தடிப்பதற்கு மட்டும்
கூடுவது நட்பல்ல
தோழனின் சுமைகளுக்கு
தோள் கொடுப்பதும்
நட்புதான்!

உணர்ந்துகொள் தோழா!
மதுவைக் குடித்தால்
கேடுகள் நாடிவரும்
மாதுவைக் குடித்தால்
நாடிகள் கூடிவரும்.

இரண்டுமே ஒன்றுதான்
போதை தருவதிலே!
இரண்டுமே வெவ்வேறு
வாழ்க்கை பாதை தருவதிலே!

மதுபோதையிலே
புத்தி புரளும்
நடைபாதையிலே
தத்தி தத்தி தடுமாறும்!
காய்ச்சி குடித்தால்
காவல் துறையினர்
பிடித்து காய்ப்பார்கள்.

மதுக்கடைகளில்
வாங்கி குடித்தால்
மேச்சுவார்கள்.
இரண்டுமே
முரண்பாடுதான்
அரசுக்கு ஏனோ
இதிலே உடன்பாடு.

மனிதா!
நீ மாண்புற வேண்டுமா
மனிதநேயம் படி
மண் பயனுற வேண்டுமா
மதுவை ஒழி

No comments:

Post a Comment