பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி 228 பேருடன் கடந்த 1 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற ஏர் - பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் விழுந்த இடத்திலிருந்து விமானத்தின் நொறுங்கிய பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விபத்து எவ்வறு நிகழ்ந்தது என்பதை அறிய உதவும் விமானத்தின் கருப்பு பெட்டி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்துவந்தது.
அதனை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏர் பிரான்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்குமிடத்தை காட்டும் 'சிக்ன்ல்' வெளிப்படும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பெட்டி இருக்குமிடத்திலிருந்து வெளிப்படும் ' சிக்னல் ' மூலமாக எழும்பும் ஒலி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கேட்கும் என்பதால், சப்தம் வரும் இடத்தைச் சுற்றிலும் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாரீஸிலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்றின் இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் பிரான்ஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தம்மால் இந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை என்றார்.
No comments:
Post a Comment