ஜூலை 8ஆ‌ம் தே‌‌தி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜராக வைகோவுக்கு உ‌த்தரவு

அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 8ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஆஜராக அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் முதலமைச்சர் கருணாநிதி சார்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

செ‌ன்னை தேனாம்பேட்டையில் உள்ள இய‌க்குன‌ர் பாரதிராஜாவின் அலுவலகம், முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின்பேரில் தாக்கப்பட்டதாக சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் வைகோ பேசியதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று மாலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு சேதுமாதவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நேரில் ஆஜராகி வழக்கின் தன்மையை விளக்கி பிரமாண வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியில் வந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், முதலமைச்சர் கருணாநிதி இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் ஆவார். எனக்கு அரசியல் முகவரி கொடுத்த அந்த தலைவரை பற்றி அவதூறு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

இதற்காக மன்னிப்பு கேட்கும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் வைகோ மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனவேதான் அவர்மீது இந்த அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு ஏற்றுக்கொண்டுள்ளார். வைகோவை அடுத்த மாத‌ம் ஜூலை 8ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார் எ‌ன்று ஆற்காடு வீராசாமி கூறினார்.

No comments:

Post a Comment