நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. சரத்குமார் தலைமையிலான அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் தலைமையிலான அணி ஒரு மனதாக நிர்வாகக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் அறிவித்தார். சரத்குமார் தலைவராகவும், ராதாரவி செயலராகவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகளின் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டபின் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். சங்கத்தின் புதிய கட்டிடம் 3 ஆண்டுக்குள் குளிர்சாதன வசதியுடன் கட்டி முடிக்கப்படும் என்றும், சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment